ஈமியூ எண்ணெய்

ஈமியூ எண்ணெய் அல்லது ஈமு எண்ணெய் (Emu oil) என்பது ஈமியூ பறவையின் கொழுப்புத் திசுவிலிருந்து பெறப்படும் ஒருவகை எண்ணெய் ஆகும். இது ஆத்திரேலியாவில் காணப்படும் பறக்கமுடியாத பறவை ஈமியூ சிற்றினமான டுரோமையசு நோவேஹோலண்டியே இலிருந்து பெறப்படுகிறது.[1] [2]

An Emu
ஈமு, ஈமு எண்ணெயின் மூலம்

கலப்படமற்ற ஈமியூ எண்ணெய், ஈமியூ உணவு மற்றும் சுத்திகரிப்பு முறை(கள்) ஆகியவற்றைப் பொறுத்து, வெள்ளை நிற நுரையிலிருந்து மஞ்சள் திரவமாக ஈமியூவின் உணவிற்கு ஏற்ப மாறுபடும்.[3] தொழிற்சாலையில் சுத்திகரிக்கப்பட்ட ஈமியூ எண்ணெயில் குறைந்தபட்சம் 70% நிறைவுறா கொழுப்பமிலங்களால் ஆனது. இதில் அதிக அளவில் காணப்படுவது ஒலிக் அமிலம், ஒற்றை ஒமேகா -9 கொழுப்பு அமிலம் ஆகும். ஈமியூ எண்ணெயில் சுமார் 20% லினோலெயிக் அமிலம் (ஒமேகா -6 கொழுப்பு அமிலம்) மற்றும் 1-2% லினோலெனிக் அமிலம் (ஒமேகா -3 கொழுப்பு அமிலம்) உள்ளன.[4] முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஈமியூ எண்ணெய் மென்மையான சுவையுடையது.

ஈமியூ எண்ணெய் முன்னர் புற்றுநோய் மற்றும் மூட்டுவலி உள்ளிட்ட பல்வேறு வகையான மனித நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்ற கூற்றுடன் உணவு குறை நிரப்பியாக தவறாக விளம்பரப்படுத்தப்பட்டது.[5]

ஆராய்ச்சி

தொகு

2015ஆம் ஆண்டில் இரண்டு ஆய்வுகள் மனிதனில் நடந்துள்ளன. இதில் ஓர் ஆய்வு தோல் உலர்ந்து போவதைத் தடுத்து ஈரமாக வைத்திருப்பது குறித்தும், மற்றொன்று பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தப்பட்டது.[6]

வணிக ரீதியான துணை உணவாக ஈமியூ எண்ணெய் தரப்படுத்தப்படுத்தாமலும் ஆற்றலில் அளவில் பரவலாக வேறுபாட்டுடன் காணப்படுகிறது.[7] அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 2009-ஆம் ஆண்டில் "சுகாதார மோசடியை எப்படிக் கண்டுபிடிப்பது" என்ற கட்டுரையில் ஈமியூ எண்ணெய்களை முன்னிலைப்படுத்தியதோடு, "தூய ஈமியூ எண்ணெய்த்" தயாரிப்புகள் அங்கீகரிக்கப்படாத மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. American Emu Association FAQ
  2. Devantier, Alecia T; Carol, Turkington (2006). Extraordinary Jobs in Agriculture and Nature. Infobase Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-5854-9.
  3. American Emu Association - Definition of emu oil grades
  4. "Emu Oil Trade Rule 103" (PDF).
  5. 5.0 5.1 Kurtzweil, Paula (April 30, 2009). "How to Spot Health Fraud". அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 33 (6): 22–6. பப்மெட்:10628313. https://www.fda.gov/Drugs/EmergencyPreparedness/BioterrorismandDrugPreparedness/ucm137284.htm. பார்த்த நாள்: June 29, 2009. 
  6. "Review on emu products for use as complementary and alternative medicine". Nutrition 31 (1): 21–7. January 2015. doi:10.1016/j.nut.2014.04.004. பப்மெட்:25441585. 
  7. "Emu oil(s): A source of non-toxic transdermal anti-inflammatory agents in aboriginal medicine". Inflammopharmacology 6 (1): 1–8. 1998. doi:10.1007/s10787-998-0001-9. பப்மெட்:17638122. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈமியூ_எண்ணெய்&oldid=3848942" இலிருந்து மீள்விக்கப்பட்டது