ஈய(II) புளோரைடு
இரசாயன கலவை
ஈயம்(II) புளோரைட்டு (Lead(II) fluoride) அல்லது ஈயமிருபுளோரைட்டு என்பது (PbF2) ஒரு கனிம வேதிச் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்துடன் மணமற்ற சேர்மமாக இவ்வுப்பு காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஈய மிருபுளோரைடு
பிளம்பசு புளோரைடு | |
இனங்காட்டிகள் | |
7783-46-2 | |
பப்கெம் | 24549 |
பண்புகள் | |
PbF2 | |
வாய்ப்பாட்டு எடை | 245.20 g/mol |
தோற்றம் | வெண்மைநிற துகள் |
மணம் | மண்மற்றது |
அடர்த்தி | 8.445 g/cm3 (orthorhombic) 7.750 g/cm3 (cubic) |
உருகுநிலை | 824 °C (1,515 °F; 1,097 K) |
கொதிநிலை | 1,293 °C (2,359 °F; 1,566 K) |
0.057 g/100 mL (0 °C) 0.0671 g/100 mL (20 °C)[1] | |
கரைதிறன் | நைதரிக் அமிலத்தில்கரையும்; அசிட்டோன் மற்றும் அமோனியா வில் கரையாது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Fluorite (cubic), cF12 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
3031 mg/kg (oral, rat) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஈய(II)குளோரைடு ஈய(II)புரோமைடு ஈய(II)அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வலிமையான ஆக்சிசனேற்றிகளிடம் இருந்து இவ்வுப்பை தனிமைப்படுத்தி வைக்கவேண்டும்.
பயன்கள்
தொகு- குறைவான உருகுநிலை கொண்டுள்ள கண்ணாடிகளில் ஈய மிருபுளோரைடு பயன்படுகிறது
- அகச்சிவப்புக் கதிர்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளில் பூசுவதற்கு இதைப் பயன்படுத்துவார்கள்.
- தொலைக்காட்சி, கணினித் திரைகளின் ஒளிர்பொருள்களில் பயன்படுகிறது.
- பிக்கோலின் தயாரிப்பில் வினையூக்கியாகப் பயன்படுகிறது.
தயாரிப்பு
தொகுஈய மிருபுளோரைடைத் தயாரிக்க பலவழிகள் உள்ளன. ஈய (II) ஐதராக்சைடு அல்லது ஈய (II) கார்பனேட்டை ஐதரோபுளோரிக் அமிலத்துடன் வினைபுரிய வைத்தலைத் தொடர்ந்து கரைசலை ஆவியாக்குவதன் வழியாகத் தயாரிக்கலாம்.
- Pb(OH)2 + 2 HF → PbF2 + 2 H2O
மாறாக, ஐதரோ புளோயிக் அமிலத்துடன் ஏதாவதொரு ஈய (II) உப்புக்கரைசலை சேர்த்தும் ஈய மிருபுளோரைடை வீழ்படிவாக்கலாம் அல்லது பொட்டாசியம் புளோரைடை ஈய (II) நைதரேட்டு கரைசலுடன் சேர்த்தும் தயாரிக்கலாம்.[2]
- 2 KF + Pb(NO3)2 → PbF2 + 2 KNO3
மேற்கோள்கள்
தொகு- ↑ NIST-data review 1980
- ↑ Arnold Hollemann, Egon Wiberg, 101st ed., de Gruyter 1995 Berlin; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-012641-9