ஈய மிருபுரோமைடு

ஈய மிருபுரோமைடு (Lead(II) bromide) என்பது PbBr
2
என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குறிப்பாக ஈயப் பெட்ரோலியம் எரியும்போது ஈய (II) புரோமைடு உருவாகிறது.[3] வெண்மைநிறத் துகள்களாக இது காணப்படுகிறது.

ஈய மிருபுரோமைடு
Lead(II) bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈயம்(II) புரோமைடு
வேறு பெயர்கள்
ஈய மிருபுரோமைடு
இனங்காட்டிகள்
10031-22-8 Y
ChemSpider 23216
EC number 233-084-4
InChI
  • InChI=1S/2BrH.Pb/h2*1H;/q;;+2/p-2
    Key: ZASWJUOMEGBQCQ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24831
  • Br[Pb]Br
UNII 1O767M99U7 Y
பண்புகள்
PbBr2
வாய்ப்பாட்டு எடை 367.01 g/mol
தோற்றம் வெண்மைநிற துகள்
அடர்த்தி 6.66 g/cm3 [1]
உருகுநிலை 370.6 °C (699.1 °F; 643.8 K)
கொதிநிலை 916 °C (1,681 °F; 1,189 K) (ஆவியாகிறது)
0.455 g/100 mL (0 °C)
0.973 g/100 mL (20 °C)[2]
4.41 g/100 mL (100 °C)
1.86 x 10−5 (20 °C)
கரைதிறன் ஆல்ககாலில் கரையாது;
அமோனியா, காரம், KBr, NaBr இவற்றில் கரையும்.
−90.6·10−6 cm3/mol
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word Danger
H302, H332, H360, H373, H410
P201, P202, P260, P261, P264, P270, P271, P273, P281, P301+312, P304+312, P304+340, P308+313, P312
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஈயம்(II) புளோரைடு,
ஈயம்(II) குளோரைடு,
ஈயம்(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தாலியம்(I) புரோமைடு,
வெள்ளீயம்(II) புரோமைடு
பிசுமத் புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பும் பண்புகளும்

தொகு

ஈயக் கரைசல்களுடன் (உதாரணம்: ஈய(II) நைதரேட்டு) புரோமைடு உப்புகளை வினைப்படுத்துவதன் மூலம் இவ்விரு புரோமைடைத் தயாரிக்கலாம். இந்தச் செயல்முறை, தண்ணீரில் ஈய மிருபுரோமைடின் குறைந்த கரைதிறனை தன்னலப்படுத்துகிறது. சுழி பாகை செல்சியசு வெப்பநிலையில் 100 கிராம் தண்ணீரில் 0.455 கிராம் ஈய மிருபுரோமைடு மட்டும் கரைகிறது. சூடான கொதிக்கும் தண்ணீரில் இதைவிட பத்துமடங்கு அதிகமாகக் கரையும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.[4]

ஈயப் பெட்ரோலியத்தின் பரந்துபட்ட பயன்பாட்டின் காரணத்தினால், சுற்றுப்புற சூழலில் எங்கும் இருக்கக்கூடிய சேர்மமாக ஈயபுரோமைடு விளங்குகிறது. பெட்ரோலியத்தின் எரியும் பண்பை மேம்படுத்த முற்காலத்தில் நான்கீத்தைல் ஈயம் பயன்படுத்தப்பட்டது. ஈய ஆக்சைடுகள் தோன்றி இயந்திரம் மாசடைவதைத் தடுக்க பெட்ரோலியத்துடன் ஏதாவதொரு கரிம புரோமின் சேர்மம் சேர்க்கப்பட்டது. ஈய ஆக்சைடுகளை இச்செயல்பாடு எளிதில் ஆவியாகும் ஈய புரோமைடுகளாக மாற்றுகிறது. பின்னர், இவை இயந்திரத்தில் இருந்து சுற்றுச்சூழலுக்கு வெளியேறுகிறது.[3]

பாதுகாப்பு

தொகு

ஈயம் கலந்துள்ள மற்ற சேர்மங்களைப் போல ஈய மிருபுரோமைடும், மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தும் 2ஏ வகை வேதிப்பொருள் என்று பன்னாட்டு புற்றுநோய் ஆய்வு நிறுவனம் வகைப்படுத்துகிறது. ஈயப் பெட்ரோலியம் எரியும்போது ஈய மிருபுரோமைடு உண்டாகி சூழலில் வெளிவிடப்படுகிறது என்பதே அதிக மாறுபட்ட கருத்துகளுக்கு இடமளிப்பதாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3.
  2. NIST-data review 1980
  3. 3.0 3.1 Michael J. Dagani, Henry J. Barda, Theodore J. Benya, David C. Sanders "Bromine Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry" Wiley-VCH, Weinheim, 2000.எஆசு:10.1002/14356007.a04_405
  4. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈய_மிருபுரோமைடு&oldid=3624193" இலிருந்து மீள்விக்கப்பட்டது