ஈராக்சோசக்சினிக் அமிலம்

அமிலம்

ஈராக்சோசக்சினிக் அமிலம் அல்லது ஈராக்சோபியூட்டேனீராயிக் அமிலம் (Dioxosuccinic acid or dioxobutanedioic acid) என்பது C4H2O6 அல்லது HO-(C=O)4-OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.

ஈராக்சோசக்சினிக் அமிலம்
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈராக்சோசக்சினிக் அமிலம்
இனங்காட்டிகள்
7580-59-8 N
ChemSpider 74061 N
InChI
  • InChI=1S/C4H2O6/c5-1(3(7)8)2(6)4(9)10/h(H,7,8)(H,9,10) N
    Key: BLNNXYDKWOJQGK-UHFFFAOYSA-N N
  • InChI=1/C4H2O6/c5-1(3(7)8)2(6)4(9)10/h(H,7,8)(H,9,10)
    Key: BLNNXYDKWOJQGK-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82062
  • C(=O)(C(=O)C(=O)O)C(=O)O
பண்புகள்
C4H2O6
வாய்ப்பாட்டு எடை 146.05 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இம்மூலக்கூறில் இருந்து இரண்டு புரோட்டான்களை நீக்கும்போது ஈராக்சோசக்சினேட்டு எதிர்மின் அயனி. (C4O62− அல்லது (O-(C=O)4-O)2−.) உருவாகிறது. இது முழுவதுமாக கார்பன் மற்றும் ஆக்சிசனைக் கொண்டுள்ள ஒரு ஆக்சோகார்பன் எதிர்மின் அயனியாகும். இவ்வெதிர்மின் அயனிகளைப் பெற்றுள்ள உப்புகளுக்கும், [-O-(C=O)4-O-] பகுதியைக் கூறாக கொண்டுள்ள எசுத்தர்களுக்கும் இதேபெயர் பயன்படுத்தப்படுகிறது.

இம்மூலக்கூறில் இருந்து ஒரு புரோட்டானை நீக்கும்போது ஒரிணைதிறன் எதிர்மின் அயனியான ஐதரசனீராக்சோசக்சினேட்டு, C4HO6 அல்லது (HO-(C=O)4-O) தோன்றுகிறது.

தோற்றம்

தொகு

ஈரைட்ராக்சிபியூமரிக் அமிலம் வழியாக டார்டாரிக் அமிலத்தை ஆக்சிசனேற்றம் செய்யும் பொழுதும், இயற்கையில் , திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் மது போன்றவற்றிலும் இது தோன்றுகிறது[1].

வினைகள்

தொகு

ஈராக்சோசக்சினிக் அமிலம் இரண்டு மூலக்கூறு தண்ணீருடன் சேர்ந்து ஈரைட்ராக்சிடார்டாரிக் அமிலத்தைத், C4H6O8 அல்லது HO-(C=O)-(C(OH)2)2-(C=O)-OH. தருகிறது. ஈராக்சோசக்சினிக் அமில ஐதரேட்டு என்ற பெயரில் வர்த்தகரீதியாகவும் கிடைக்கிறது. சில வினைகளில் ஈரைட்ராக்சிடார்டாரிக் அமிலம் ஈராக்சோசக்சினிக் அமிலம் போலவே வினைபுரிகிறது. உதாரணமாக, ஐதரசன் குளோரைடு முன்னிலையில் எத்தனால் வினைபுரிந்து எசுத்தர் ஈரீத்தைல் ஈராக்சோசக்சினேட்டைக் கொடுக்கிறது[2]:p.187.

மேற்கோள்கள்

தொகு
  1. By Ján Farkaš, Beatrix Farkas (1988), Technology and Biochemistry of Wine.CRC Press, 744 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-88124-070-4.
  2. Victorian College of Pharmacy., Dept. of Chemistry (1959), Notes on qualitative analysis.

இவற்றையும் காண்க

தொகு