ஈரெத்தில் கார்பனேட்டு
ஈரெத்தில் கார்பனேட்டு (Diethyl carbonate) என்பது (C5H10O3) அல்லது OC(OCH2CH3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் கார்பானிக் அமிலம் மற்றும் எத்தனாலின் கார்பனேட்டு எசுத்தராக இச்சேர்மம் கருதப்படுகிறது. அறை வெப்பநிலையில் (25 பாகை செல்சியசு) ஈரெத்தில் கார்பனேட்டு தெளிவான நீர்மமாகவும் குறைவான தீப்பற்றும் வெப்பநிலையும் கொண்டதாக உள்ளது. எரித்ரோமைசின் தசையூடான ஊசியில் ஒரு கரைப்பானாக ஈரெத்தில் கார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் மின்கல அடுக்குகளில் மின்பகுளிப் பகுதிப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கார்பானிக் ஈதர்; எத்தில் கார்பனேட்டு; இயுஃபின்[1]
| |
இனங்காட்டிகள் | |
105-58-8 | |
ChemSpider | 7478 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7766 |
| |
UNII | 3UA92692HG |
பண்புகள் | |
C5H10O3 | |
வாய்ப்பாட்டு எடை | 118.13 கி/மோல் |
தோற்றம் | தெளிவான நீர்மம் |
அடர்த்தி | 0.975 கி/செ.மீ3 |
உருகுநிலை | −43 °C (−45 °F; 230 K) |
கொதிநிலை | 126 முதல் 128 °C (259 முதல் 262 °F; 399 முதல் 401 K) |
கரையாது | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | தீப்பற்றி எரியும் (F) |
R-சொற்றொடர்கள் | R11 |
S-சொற்றொடர்கள் | S9 S16 S29 S33 |
தீப்பற்றும் வெப்பநிலை | 33 °C (91 °F; 306 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபாசுகீனுடன் எத்தனால் வினைபுரிந்து ஈரெத்தில் கார்பனேட்டு உருவாகிறது. ஐதரசன் குளோரைடு ஒரு உடன் விளைபொருளாக உருவாகிறது. ஏனெனில் குளோரோஃபார்ம் ஆக்சிசனுடன் வினைபுரிந்து பாசுகீனை உருவாக்க முடியும். குளோரோஃபார்மை ஒரு பங்கு எத்தனாலுடன் 100 பங்கு குளோரோஃபார்மை சேர்ப்பதன் மூலம் குளோரோஃபார்மை நிலைப்புறச்செய்ய முடியும். இதனால் ஏதாவது பாசுகீன் உருவாகியிருந்தாலும் அதை ஈரெத்தில் கார்பனேட்டாக மாற்றலாம்.
2CH3CH2OH + COCl2 → OC(OCH2CH3)2 + 2HCl
மேற்கோள்கள்
தொகு- ↑ "DIETHYL CARBONATE". பார்க்கப்பட்ட நாள் 2010-02-01.