ஈழப்போருக்கு எதிரான உலகத் தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள்

இலங்கையின் வடபகுதியில் 2009 ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கை அரசினால் நான்காம் ஈழப்போர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை நிறுத்த இலங்கை அரசின் மீது அழுத்தம் தரக் கோரி உலகெங்கணும் உள்ள தமிழர்கள் அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

பிரித்தானியாதொகு

தாயகத்தில் நடக்கும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரக் கோரி பிரித்தானிய அரசாங்கம் இலங்கை மீது அழுத்தம் தரவேண்டும் என்று கோரி ஐக்கிய ராஜ்ஜியத்தில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் லண்டனின் நாடாளுமன்றக் கட்டிடம் முன்பு தொடர் ஆர்ப்பாட்டம் 06.04.09 அன்று ஆரம்பித்தனர்.[1]

பிரித்தானிய இராணுவக் காவலர்கள் தாக்குதல்தொகு

செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009 பாராளுமன்றம் முன்பாக அமைதியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் மீது காவற்துறையினர் நடவடிக்கை. சிறுவர் குழந்தைகள் அனைவரும் தூக்கி எறியப்பட்டனர்.[2]

உண்ணாநிலைப் போராட்டம்தொகு

தாயகத்தில் இடம்பெற்று வரும் தாக்குதல்களைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் மாணவர்களான,சிவதர்சன் சிவகுமாரவேல் வயது 21, சுப்பிரமணியம் பரமேஸ்வரன் வயது 28, ஆகிய இருவரும் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர்.

உலகுக்கு வெளியிட்ட அறிக்கைதொகு

பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்னால் நீர் கூட அருந்தாமல் கடைசி மூச்சிருக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட பரமேஸ்வரன், சிவா உலகுக்குச் வெளியிட்ட அறிக்கை.

[3]

ஐ.நா சபைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுதொகு

வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009, 4ஆவது நாளாகவும் தொடர்ந்து நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன், சிவதர்சன் ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக போவதை அறிந்து காவற்துறை மருத்துவர்கள் அடிக்கடி இவர்களின் உடல்நிலையை பரிசோதித்தனர். இறுதியாக, நீர் அருந்தாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என அங்கு தெரிவித்திருந்தனர். இதனை அறிந்த மிட்சம் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் மைக் டொனால்ட் நேரடியாக உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு வந்து நீரை அருந்துமாறு வேண்டிக்கொண்டார்.

ஆனால், தமிழினப் படுகொலைகளை தடுத்து நிறுத்த உடனடிப் போர் நிறுத்தத்தை இம்மாணவர்கள் வலியுறுத்தினர்.

இறுதியாக, அமெரிக்கா, நியூயோர்க்கில் அமைந்திருக்கும் ஐ.நா.சபைக்கு இம்மாணவர்களை அனுப்புவதாக மைக் டொனால்ட் உறுதியளித்தார். இதன்பின்னர், இம் மாணவர்கள் நீர் அருந்தி உண்ணாவிரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தனர்.[4]

உண்ணாநிலைப் போராட்டம் அனைத்து தமிழ் மக்களும் பொங்கியெழுந்தனர்.

சிவதர்சன் (21) பிரித்தானியா அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஐ.நா. செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டதால் தற்காலிகமாக உண்ணாநிலையை இடைநிறுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரமேசுவரன் (28) தொடர்ந்தும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நீர் மட்டும் அருந்தியவண்ணம் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்தார். மக்களின் எழுச்சிப் போராட்டத்தை எப்படியாவது முடக்க பிரித்தானியக் காவற்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

மாபெரும் பேரணிதொகு

11.04.09 சனிக்கிழமை அன்று மாபெரும் பேரணியில் 150 000 க்கு மதிகமான மக்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் உடனடியானதும், நிரந்தரமானதுமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமாகிய மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் பல பகுதிகளிலிருந்தும் அலை அலையாக திரண்டு வந்து சுமார் இரண்டு இலட்சம் மக்கள் கூடினர்.

அத்துடன் இலங்கை அரசாலும், அரச படையினராலும் வன்னியில் திட்டமிட்டு நடாத்தப்பட இருக்கின்ற பாரிய‌ தமிழினப் படுகொலையை உடனடியாக உலகநாடுகளும், பிரித்தானியாவும் தலையிட்டு நிறுத்தக்கோரி இம்மாபெரும் ஆர்பாட்ட ஊர்வலம் இலண்டனில் உள்ள‌ எம்பாக்மென்ட்(Embankment) என்னும் இடத்தில் மதியம் 1 .00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு பேரணி கைட்பார்க் கோணரை சென்றடைந்து பொதுக்கூட்டம் நடைபெற்றதுடன் மனு கையளிப்பும் இடம்பெற்றது.

லண்டனில் மாணவர்கள் - டெஸ் பிறவுண் பேச்சுவார்த்தைதொகு

வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2009,

பிரித்தானியாவில் ஆரம்பமான தாயக உறவுகளின் உயிர்காப்பதற்கான போராட்டம் ஓய்வின்றி தொடர்ந்தும் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் பிரித்தானியத் தமிழ் மாணவர்கள் இன்று பிரித்தனியப் பிரதமரால் சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள டெஸ் பிறவுண் அவர்களோடு பேச்சு நடத்தினார்கள்.[5]

தென்னாபிரிக்காதொகு

மா க ஈழவேந்தன் உண்ணாவிரதப் போராட்டம்தொகு

09ம் திகதி வியாழக்கிழமை 2009 காலை 8.30 மணியளவில் தென்னாபிரிக்கா டேர்பனில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தமா க ஈழவேந்தன் அவர்கள் ஈழத் தமிழர்கள் மீதான கொடியபோரை சர்வதேச சமூகம் உடனடியாக நிறுத்தவேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்ஆரம்பித்தார்.

கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை அரசியலில் ஈடுபடும் ஈழவேந்தன், ஈழத் தமிழர்கள் மீது கொடிய சிங்கள இராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள திட்டமிட்ட இனப் படுகொலையை சர்வதேச சமூகம் கண்டுகொள்ளத் தவறியமையே, தன்னுடைய எழுபத்தாறாவது வயதில், ஈழத்தில் கருவில் வளரும் குழந்தைகளும் தாய்மார்களும் இனவாத இராணுவத்தின் விசமிய ஆயுதங்களால் கொன்றொழிக்கப்படும் வேளையில், தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தை கேள்விக்குறியாக்கவுள்ளது எனக் குறிப்பிட்டார்.

[6]

ஆஸ்திரேலியாதொகு

ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் விக்ரோரிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக புதன்கிழமை 08.04.09 அன்று சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்றுதிரண்டு மாபெரும் கவனயீர்ப்பு கண்டன பேரணி ஒன்றை நடத்தினர். [7]

”உரிமைக்குரல்” கவனயீர்ப்பு போராட்டம்தொகு

அவுஸ்திரேலியா பேர்த் நகரத்தில் தமிழர்கள்”உரிமைக்குரல்” கவனயீர்ப்பு போராட்டத்தினை சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009 முற்பகல் 10.30 மணியளவில் நடத்தினர்.

உண்ணாவிரத போராட்டம்தொகு

வன்னியில் நடைபெறும் மனித அவலத்தின் காரணமாக அவுஸ்திரேலியா, சிட்னி வாழ் 3 தமிழ் இளைஞர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009 மாலை 5 மணி முதல் Parramatta Church St ல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். சுதா தனபாலசிங்கம், மதிவண்ணன் சின்னதுரை, பிரதீபன் இராஜதுரை ஆகிய மூன்று தமிழ் இளைஞர்களுமே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.


மெல்பேர்ணிலும் உண்ணாவிரதப் போராட்டம்தொகு

தாயகத்தில் இடம்பெறும் மனிதப்பேரவலத்துக்கு ஆஸ்திரேலிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் நான்கு இளைஞர்கள் மேற்கொண்டுவரும் காலவரையறையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் பெருந்தொகையான மெல்பேர்ன் வாழ் தமிழ் உறவுகள் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.

திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2009,பிற்பகல் 2.30 மணியளவில் மெல்பேர்ண் டண்டிநொங் பகுதியில் ஆரம்பமாகிய இந்த போராட்டத்தில் உண்ணாவிரதிகளான ரமணா, சந்திரன், பானு, தெய்வீகன் ஆகியோர் முதலில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். உடல்நிலை தொடர்பான உறுதியை மருத்துவர்கள் அறிவித்ததை அடுத்து உண்ணாவிரதிகள் மேடைக்கு சென்றனர்.[8]

கனடாதொகு

கனடிய தமிழ் மாணவர் சமூகம், கனடிய தமிழர் சமூகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெற்றது.

[9]

உண்ணாநிலைப் போர்தொகு

ஜுலியஸ் ஜேம்ஸ், புஸ்பராஜா நல்லரத்தினம், நடராஜா தையல்நாயகி, வைசீகமகாபதி யோகேந்திரன் மகாலிங்கம் சிவனேஸ்வரி மற்றும் கணபதிப்பிள்ளை துளசிகாமணி ஆகிய ஆறு தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.[10]

ஜேர்மனிதொகு

யேர்னியில் டுசுல்டோர்ப் பிரதான தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக 07-04-09 (செவ்வாய்க்கிழமை) காலை 11:00 மணி முதல் காலவரையறையற்ற ஆர்ப்பாட்டம் .

சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலையைக் கண்டித்து யேர்மனி டுசில்டோவ் நகரிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை 07.04.09 காலை 11 மணிக்கு டுசில்டோவ் மாநிலத்தில் அமைந்துள்ள மாநில பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே காவல்துறையின் முன் அனுமதியின்றி ஒன்றுகூடினர்.

பின்னர் அங்கிருந்தவாறு பாராளுமன்றம் முன்பாக அணிதிரண்டு சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலையை யேர்மனி தடுத்து நிறுத்தக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் கலந்துகொண்ட மக்கள் பாராளுமன்றத்தினுள் உள்நுழைய நகர முற்பட்டபோது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டது.[11]

பிரான்ஸ்தொகு

பாரிஸ் நகரின் இன்வலிட் என்னும் இடத்தில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் முன்றலில் பிரெஞ்சு அரசாங்கம் முடிவு ஒன்றினை தெரியப்படுத்தும் வரை ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை விட்டு நகர்வதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் மக்கள் முழக்கங்களை எழுப்பியபடி எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம்.

பிரான்சின் துலூஸ் நகரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது குழந்தைகள் பெரியவர்களென 300க்கும் அதிகமான துலூஸ் நகர தமிழ் மக்கள் மிகுந்த உணர்வெழுச்சியுடன் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

[12]

நால்வர் உண்ணாவிரதம்தொகு

[ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009, 01:41.46 AM GMT +05:30 ]

06.04.09 திங்கட்கிழமையில் இருந்து, இன்வலிட் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சியான கவனயீர்ப்பு நிகழ்வானது, 09.04.09 புதன்கிழமையில் இருந்து ஈவிள் கோபுரம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் தொடரப்பட்டது. பேரெழுச்சியுடன் நடைபெற்றிருந்த கவனயீர்ப்பு நிகழ்வில் பல ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதே வேளையில்புதன்கிழமை (08.04.2009) இரவிலிருந்து ரவிராஜ் ஆனந்தகுமாரசாமி, வர்ணன் விக்கினேஸ்வரன் ஆகிய இருவரும் இணைந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்

இதே வேளை வியாழக்கிழமை (09.04.2009) பாரீஸ் நகரத்தில் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டமும், உண்ணாநிலைப் போராட்டமும் தொடரப்பட்டு வருவதுடன், மேலும் நவநீதம் சண்முகராஜா, செல்வகுமார் அல்பேட் ஆகியோரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

சுவிஸ்தொகு

ஐ.நா.முன்றலில் மக்கள் கண்டண ஆர்ப்பாட்டம்தொகு

செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் நடத்தும் தமிழினப் படுகொலையை நிறுத்தக் கோரி, சுவிஸ் ஜெனீவா நகரத்தில் உள்ள ஐ.நா. முன்றலில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்ட கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும்,உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியும் கோசங்களை எழுப்பியவண்னம் பிரதான வீதிகளை மறித்து தங்களின் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தை விரிவுபடுத்தியுள்ளனர்.[13]

உண்ணாவிரதம்தொகு

வன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் சாகும்வரை திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2009,ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து காலவரையற்ற நீர் ஆகாரம் இல்லாமல் தொடர்ச்சியாக உண்ணா நிலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. [14]

காவற்துறையினர் இவரது உண்ணாநிலைப் போராட்ட அனுமதியினை மீளப்பெறுவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து எழுந்த இவர் Bundesgasse 32ல் அமைந்துள்ள வெளிநாட்டு அமைச்சின் அரசியல் அலுவலகப் பிரதான செயலகத்தினை அடைந்து அதன் பிரதான வாசலில் அமர்ந்து தனது போராட்டத்தை முன்னெடுத்தார்.[15]

15.04.09 மருத்துவர்கள் மற்றும் காவற் துறையினர்களின் தலையீட்டால் உண்ணா நிலைப் போராட்டம் இடை நிறுத்தப்ட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும் அவர் உறுதியாக தொடர்ந்தார்.[16]

நெதர்லாந்துதொகு

நெதர்லாந்தில் நாடாளுமன்றத்தின் முன் தொடர் போராட்டம் 06 ஏப்ரல் 2009, முதல் நெதர்லாந்து பிரதமரிடம் தமிழ்மக்கள் சிறீலங்காவில் உடனடியானதும் நிரந்தரமானதுமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி நெதர்லாந்து டென் காக் முன்றலில் தொடர் போராட்டம்.

காவற்துறையினர் தாக்குதல்தொகு

நெதர்லாந்தில் உண்ணாவிரதமிருந்த தமிழர்கள் கைது: தமிழ் மாணவர்கள் மீதும் காவற்துறையினர் தாக்குதல்[17]

ஏனைய நாடுகளில் நடைபெற்றவைதொகு

ஒஸ்ரியாதொகு

வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2009, ஒஸ்ரியா வியன்னாவில் வெளிநாட்டு அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் தனித் தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் உடனடிப் போர் நிறுத்தம் வேண்டியும் ஒஸ்ரியா வியன்னாவில் வெளிநாட்டு அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. [18]

நோர்வேதொகு

டென்மார்க்தொகு

டென்மார்க்கில் வெளிநாட்டு அமைச்சின் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.[19][20]

சுவீடன்தொகு

செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009 சுவீடன் வெளிவிவகார அமைச்சு அலுவலகத்துக்கு முன்பாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் பல சிறுவர்கள் இளையோர்கள் எழிச்சியுடன் கலந்துகொண்டனர். சுவீடன் நாட்டின் சோசலிச சிவப்பு கட்சியினரும் பங்குபற்றினர். தொடர்ந்து வெளிநாட்டு அமைச்சு பிரதிநிதிக்கு மகயர் கொடுக்கப்பட்டது. அப் பிரதிநிதி தான் தென் ஆசியாவுக்குப் பொறுப்பான அதிகாரிக்கு அதை சேர்ப்பிப்பதாக உறுதியளித்தார். [21]

இதேபோன்ற போராட்டம் (08.04.09) புதன் அன்று 15.00 மணிக்கு நடைபெற்றது.

இத்தாலிதொகு

07.04.09 அன்று சிறிலங்கா அரசின் கொடிய இனவாத அழிப்பை கண்டித்து இத்தாலி பலெர்மோ நகரில் அமைந்துள்ள சிசீலி மாநில முதல்வர் அலுவலகம் முன்பாக 500 க்கு மேற்பட்ட தமிழீழமக்கள் தடைகளையும் மீறி பிரதான வீதிகளையும் மறித்து போராட்டத்தை முன்னெடுத்தனர். [22]

பின்லான்ட்தொகு

நியூசிலாந்தில்தொகு

உண்ணா, உறங்காநிலைப் போராட்டம்தொகு

சிறிலங்கா அரசினால் நடத்தப்படும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி நியூசிலாந்து இளையோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பும், உண்ணா உறங்காநிலைப் போராட்டமும் 08.004.09 அன்று புதன்கிழமை நியூசிலாந்தின் ஒக்கிலாந்து நகரில் ஆரம்பம். [23]

வெளியிணைப்புக்கள் மேற்கோள்கள்தொகு

 1. http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-15 அன்று பார்க்கப்பட்டது.
 17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.
 23. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-14 அன்று பார்க்கப்பட்டது.


http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml