ரேவதி (எழுத்தாளர்)

(ஈ. எஸ். ஹரிஹரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரேவதி என்ற புனைப்பெயரில் எழுதும் ஈ. எஸ். ஹரிஹரன் ஒரு பிரபலமான தமிழ் எழுத்தாளர். சிறுவர்களுக்காகவும் பெரியவர்களுக்காகவும் சிறுகதை, நாவல், நாடகம் உட்பட 92 நூல்களை வெளியிட்டுள்ளார்.

ரேவதி
பிறப்புஈ. எஸ். ஹரிஹரன்
பாலக்காடு, கேரளம்
தொழில்பத்திரிகை ஆசிரியர், குழந்தை எழுத்தாளர்
தேசியம் இந்தியா
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்ய அகாதெமி பால புரஸ்கார் விருது (2013)

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

ஹரிஹரன் கேரளம், பாலக்காடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னை, வில்லிவாக்கத்தில் வசித்து வருகிறார்.[1] மின்சார வாரியத்தில் தமிழ் வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றிய இவர், கோகுலம் சிறுவர் இதழின் ஆசிரியராக 11 ஆண்டு காலம் பணியாற்றினார். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா தொடங்கிய குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் துணைச்செயலர், பொதுச்செயலர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர்.[2]

மாணவராக இருக்கும் போதே கல்கண்டு, பூஞ்சோலை ஆகிய இதழ்களில் எழுத ஆரம்பித்தார். *'கொடி காட்ட வந்தவன்' (புதினம்), இக்கதை 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. பூந்தளிர் என்ற சிறுவர் இதழில் வாண்டுமாமாவுக்கு உதவியாசிரியராக இருந்தார். பின்னர் கோகுலம் இதழில் ஆசிரியராகச் சேர்ந்தார். தினமணியில் சிறுவர் மணி இணைப்பில் மூன்று ஆண்டுகள் தலையங்கம் எழுதினார்.[2]

விருதுகள்

தொகு

மத்திய, மாநில விருதுகள் உட்பட 35-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • 2007 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற 30வது சென்னை புத்தகக் காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருதை அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி வழங்கினார்.
  • இவர் எழுதிய ராம் ரசாக் என்ற படைப்புக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் விருது கிடைத்துள்ளது.
  • இவர் எழுதிய "பவளம் தந்த பரிசு' என்ற சிறுவர் இலக்கியத்துக்காக 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் குழந்தைகள் இலக்கியம் (பால புரஸ்கார்) விருது (ரூ. 50,000) கிடைத்தது.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவதி_(எழுத்தாளர்)&oldid=3204273" இலிருந்து மீள்விக்கப்பட்டது