உக்கடம் பெரியகுளம்
உக்கடம் பெரியகுளம் (Ukkadam Lake) என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூரின் உக்கடத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இந்த ஏரி 1.295 km2 (0.500 sq mi) பரப்பளவில் உள்ளது. இதன் சராசரி ஆழம் 5.82 m (19.1 அடி).[1] 2010 ஆம் ஆண்டு இந்த ஏரியைப் பொதுப்பணித்துறையிடமிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சி 90 ஆண்டு கால குத்தகைக்கு எடுத்தது.[2]
உக்கடம் பெரியகுளம் | |
---|---|
அமைவிடம் | கோயமுத்தூர், இந்தியா |
ஆள்கூறுகள் | 10°58′54″N 76°57′17″E / 10.98167°N 76.95472°E |
முதன்மை வரத்து | நொய்யல் ஆற்றுக் கால்வாய் |
முதன்மை வெளியேற்றம் | வாலாங்குளம் |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 1.295 km2 (0.500 sq mi) |
சராசரி ஆழம் | 5.82 m (19.1 அடி) |
நீர்க் கனவளவு | 1,982,179.262 m3 (0.000475550095 cu mi) |
கரை நீளம்1 | 5.5 km (3.4 mi) |
குடியேற்றங்கள் | கோயம்புத்தூர் |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
நீரளவியல்
தொகுஇந்த ஏரிக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து வரும் கால்வாய்கள் வழியாக நீர் சேர்க்கப்படுகிறது. மேலும் இந்த ஏரிக்கு வடக்கில் அமைந்துள்ள செல்வசிந்தாமணி ஏரியின் உபரி நீரும் வாய்க்கால் வழியாக கிடைக்கின்றது. இந்த ஏரி நிரம்பியபின் வெளியேறும் உபரி நீர் வாலன்குளத்தை அடையும் வகையில் உபரிநீர் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த ஏரியின் உபரி நீர் ஏரியின் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ள நான்கு கதவணைகள் மூலம் வெளியிடப்படுகிறது..[1]
உயிரினங்கள்
தொகுஏரியில் 2003-04 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த ஏரியில் 36 மிதவை உயிர்கள் உள்ளிட்ட தாவர இனங்களும் அதில் எட்டு மூத்தவிலங்கு உள்ளிட்டவையும் உள்ளதாக அறியப்பட்டது. இந்த நீர்நிலை தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் நீர்பெறுகிறது.[3]
2013 இல் இங்கு நடத்தப்பட்ட பறவைகளைப் பற்றிய ஆய்வின்படி, 20 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 48 பறவை இனங்கள் இங்கு காணப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பறவை இனங்கள் கோடைகாலம் தொடங்குவதற்கு முற்பட்ட மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இவை நவம்பர் மற்றும் திசம்பர் ஆகிய குளிர்கால மாதங்களில் குறைந்தது விடுகின்றன. சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.[4] இங்கு குறிப்பாக முக்களிப்பான், மஞ்சள் மூக்கு நாரை, ஊதா கானாங்கோழி போன்ற பறவைகள் காணப்படுகின்றன.[5]
மீன்பிடித்தல்
தொகுஇங்கு உள்ளூர் மீனவர்களால் மீன்பிடிக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டுகளில், ஆக்கிரமிப்பு காரணமாக சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீர், உலோகங்கள் ஏரி நீரில் கலந்து மாசடைந்தது.[1] இதனால் உள்ளூர் மீனவர்கள் ஆரோக்கியமான மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்விதமாக ஏரியை சுத்தப்படுத்த கோரினர்.[6]
சூழல் குறித்த கவலை
தொகுஏரியின் நீர் நகரத்தில் இருந்து வந்து கலக்கும் கழிவுநீராலும், ஆகாயத்தாமரையின் பரவலாலும் பாதிக்கப்பட்டு இருந்தது. 2010 இல், கோயம்புத்தூர் மாநகராட்சி ஏரியில் படிந்துள்ள வண்டலை அகற்றவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மாநகராட்சி வெளி நிபுணர்களை ஆலோசனைக்கு அமர்த்தி ஏரி வளர்ச்சிக்கு தனியார் பங்காளிப்புடன் ஒரு திட்டத்தை பரிந்துரைத்தனர்.[2] 2013 ஆம் ஆண்டு ஏரியில் வண்டல் மண்ணை கோயம்புத்தூர் மாநகராட்சி அரசுசாரா அறக்கட்டளை, கோயம்புத்தூர் குடியிருப்போர் நலச் சங்கங்கள், விஜயலட்சுமி அறக்கட்டளை ஆகியற்றின் துணையுடன் அகற்றியது. அரசு, தனியார் பெருநிறுவனங்களின் ஓரளவு நிதியுதவியுடன் பொது மக்களிடம் இருந்து தன்னார்வ தொண்டர்கள் உதவியுடன் ஏரி சீரமைக்கப்பட்டது.[6]
அழகுபடுத்துதல்
தொகு2015 ஆம் ஆண்டு கோவை மாநகராட்சி ஏரியை அழகுபடுத்தும் திட்டத்தை ₹49.5 மில்லியன் (US$740,000) செலவில் அறிவித்தது. அதன்படி இரு சக்கரவாகனங்கள் செல்லும் விதமாக பிரத்தியேகமான சாலையை 1.2 கிமீ (0.75 மைல்) நீட்டிக்கவும், கதிரொளி ஆற்றலில் இயங்கும் விளக்குகள், எஃகு வேலிகள் நிறுவி ஏரியின் கரையை அழகுபடுத்தவும் திட்டமிடப்பட்டது.[7] இந்தச் சாலையை 2015 சூன் 8 அன்று தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்தச் சாலை உக்கடம் பகுதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவியது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Coimbatore Periyakulam" பரணிடப்பட்டது 2015-12-08 at the வந்தவழி இயந்திரம். coimbatorecity.com.
- ↑ 2.0 2.1 "Maintenance of tanks not at cost of environment".
- ↑ Ezhili, N., Manikandan R. and Ilangovan R. "Diversity and seasonal variation of zooplankton in Ukkadam lake". journalcra.com.
- ↑ C. Nandha Kumar; R. Revathi; I. Jaisankar; K. Baranidharan; P. Durai Rasu.
- ↑ "Desilting the Ukkadam Periyakulam".
- ↑ 6.0 6.1 "A lake comes to life".
- ↑ "Ukkadam Lake Beautification to Ease Traffic Woes".
- ↑ "CM launches two wheeler lane".