உச்சித்த பகவதி

உச்சித்த பகவதி (Uchitta Bhagavathy) இந்தியாவின் கேரளாவில் உள்ள வடக்கு மலபார் பகுதியில் வழிபடப்படும் ஒரு பிராந்திய இந்து தெய்வம். உச்சித்தம் தெய்யம் வடிவமாக வழிபட்டு நடத்தப்படுகிறது. இந்தத் தெய்வத்தின் முக்கிய கோவில்கள் கேரளாவில் கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் உள்ளன.

உச்சித்த பகவதி
உச்சித்த தீயம்
வகைஇந்து
சமயம்வடக்கு மலபார், கேரளா, இந்தியா

கண்ணோட்டம் தொகு

உச்சித்த பகவதி ஒரு பிராந்திய இந்து தெய்வம், முக்கியமாக கேரளாவில் கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் வழிபடப்படுகிறது. உச்சித்தாவை அடியேரி மடத்தில் உச்சித்த பகவதி (அடியேரி மாதாவின் உச்சித்த பகவதி என்று பொருள்) மற்றும் வடக்கினகதச்சி என்றும் அழைக்கிறார்கள்.[1] உச்சித்த தெய்யம் முக்கியமாக கேரளாவின் மலாயா சமூகத்தினரால் ஆடப்படுகிறது.[1] வேளார் சமூகமும் இந்தத் தெய்யத்தை நடத்துகின்றனர்.[1]

உச்சித்தா பெண்களால் மிகவும் விரும்பப்படும் தெய்வம். சுகப்பிரசவம் நடக்கப் பெண்கள் இந்த அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள்[1]

சொற்பிறப்பியல் தொகு

தேவி சத்தமாகப் பேசுவதால் (மலையாளத்தில் உச்சத்தில்) உச்சித்தா என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.[1]

நம்பிக்கை தொகு

ஒவ்வொரு தெய்யத்தின் தோற்றத்திற்கும் பல்வேறு புராணக்கதைகள் உள்ளன. உச்சித்தாவின் தோற்றம் குறித்தும் பல்வேறு கதைகள் புழக்கத்தில் உள்ளன.

கிருஷ்ணனுக்குப் பதிலாக கம்சனால் கொல்லப்படவிருந்த உச்சித்தா தெய்வம் என்பது ஒரு நம்பிக்கை. கம்சன் இவரைக் கொல்ல முயன்றபோது, கம்சனைக் கொன்றவன் (கிருஷ்ணன்) பூமியில் பிறந்தான் என்று உரத்த குரலில் அழைத்ததாகக் கூறப்படுகிறது.[2]

மற்றொரு புராணக்கதை உச்சித்தா அக்னிக்கு (அக்கினியின் கடவுள்) மகளாகப் பிறந்தார் என்று கூறுகிறது. அக்னி பகவானின் உடலிலிருந்து உதிர்ந்த ஒரு எரிகல் பிரம்மாவின் இருக்கையான தாமரையின் மீது விழுந்தது. இதிலிருந்து தெய்வீக ஒளி பொருந்திய ஓர் அழகான தேவி பிறந்தார். மேலும் பிரம்மா இவளை காமதேவர் மூலமாகவும் பின்னர் தேவியின் வேண்டுகோளின்படியும் சிவபெருமானுக்கு வழங்கினார். உலகைப் பராமரிக்க மனித உருவில் பூமிக்கு வந்தார்.[2] அக்னியின் மகள் என்பதால், உச்சித்த தேயம் நெருப்பில் படுத்து, தீக்குச்சியுடன் விளையாடுவதாகவும் கூறப்படுகிறது.

உச்சித்தா பார்வதி தேவியின் மற்றொரு வடிவம் என்றும் நம்பப்படுகிறது.[2] உச்சித்தா சிவனின் மகள் என்று மற்றொரு புராணம் கூறுகிறது.[2]

தெய்யம் தொகு

 
உச்சித்த தெய்யம் மலரில் அமர்ந்திருக்கும் நிலையில்

அக்னியின் மகளாக இருப்பதால், விளையாட்டுத்தனமான உச்சித்த நெருப்பில் அமர்ந்து, படுத்து, தீக்குச்சியுடன் விளையாடுகிறது.[1]

உச்சித்தாவின் சன்னதிகளைத் தவிர, வட மலபாரில் உள்ள பல கோயில்களில் பெரும்கலியாட்ட மகோத்சவத்தின் (பிரதான திருவிழா) உச்சித்த பகவதி தெய்யமும் ஆடப்படுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Santhosh, U. P. "ഉച്ചിട്ട (Uchitta)". Janmabhumi (in மலையாளம்). Archived from the original on 2023-04-06. பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
  2. 2.0 2.1 2.2 2.3 "തീയിലും കനലിലും ഇരുന്ന് ഭക്തർക്ക് ദർശനം നൽകും, മാനുഷ ഭാവത്തിൽ സംസാരിക്കും ഉച്ചിട്ട, വീഡിയോ കാണാം". Samayam Malayalam (in மலையாளம்). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2023-04-06. பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
  3. "Fascinating ritual" (in en-IN). The Hindu. 2014-02-07 இம் மூலத்தில் இருந்து 2023-04-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230406105524/https://www.thehindu.com/news/cities/kozhikode/fascinating-ritual/article5664271.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உச்சித்த_பகவதி&oldid=3920419" இலிருந்து மீள்விக்கப்பட்டது