உடவளவை தேசியப் பூங்கா
உடவளவை தேசியப் பூங்கா (Udawalawe National Park) இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள தேசிய வனமாகும். 1972 ஆம் ஆண்டு வளவை ஆற்றின் நீரேந்துப்பகுதியை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது.[1] பூங்கா மொத்தம் 306 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. பூங்கா புல் நிலங்களாலும் சிறிய தேக்குக் காடுகளாலும் ஆனது.
உடவளவை தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
உடவளவை நீர்த்தேக்கம் | |
அமைவிடம் | Sabaragamuwa and Uva Provinces, இலங்கை |
அருகாமை நகரம் | இரத்தினபுரி |
ஆள்கூறுகள் | 6°26′18″N 80°53′18″E / 6.43833°N 80.88833°E |
பரப்பளவு | 30,821 ha |
நிறுவப்பட்டது | சூன் 30, 1972 |
வருகையாளர்கள் | 452,000 (in 1994–2001) |
நிருவாக அமைப்பு | Department of Wildlife Conservation (Sri Lanka) |
www |
பூங்காவில் 400க்கும் மேற்பட்ட ஆசிய யானைகள் இருக்கின்றன. காட்டு யானைகளை இலகுவாக பார்வையிட முடியும். மேலும் இங்கு சிறுத்தைகளும் காணப்படுகின்றன. முதலை, பொன்நிற நரி, நீர் எருமை போன்றவை இங்கு காணப்படும் முக்கிய விலங்குகளாகும்.
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Senarathna, P.M. (2009). "Udawalawa". Sri Lankawe Jathika Vanodhyana (in சிங்களம்) (2nd ed.). Sarasavi Publishers. pp. 151–161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-573-346-5.