உன்னி ஆர்.
தனது புனைப்பெயரான உன்னி ஆர் என அறியப்படும் பி. ஜெயச்சந்திரன் ( P. Jayachandran; பிறப்பு ஏப்ரல் 12,1971),ஓர் இந்திய சிறுகதை எழுத்தாளரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் மலையாள இலக்கியம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் தனது படைப்புகளுக்காக அறியப்படுகிறார். கோட்டயம் மாவட்டத்தில் கூடமலூரில் பிறந்த இவர் தற்போது இந்தியாவின் கேரளாவின் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். கூடமலூர் எல்பி பள்ளி, சிஎம்எஸ் கல்லூரி உயர்நிலைப்பள்ளி, சிஎம்ஏஸ் கல்லூரி கோட்டயம் மற்றும் கோட்டயம் பாசேலியஸ் கல்லூரி ஆகியவற்றில் படித்தார். உன்னி ஆர். சார்லி (2015) படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.[1]
உன்னி ஆர். Unni R. | |
---|---|
2010இல் உன்னி | |
பிறப்பு | பி. ஜெயச்சந்திரன் 12 ஏப்ரல் 1971 கோட்டயம், கேரளம், India |
தேசியம் | இந்தியர் |
பணி | |
பெற்றோர் |
|
தொழில் வாழ்க்கை
தொகுஇவரது "வாங்கு" என்ற சிறுகதை 2020 கேரள சாகித்ய அகாதமி விருதை வென்றது.[2] மேலும் அதே பெயரில் 2021 ஆம் ஆண்டு திரைப்படமாக உருவாக்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ V.P., Nicy (15 June 2015). "'Charlie' First Poster: Dulquer Salmaan Spotted in Trendy New Look [PHOTOS"]. International Business Times. http://www.ibtimes.co.in/charlie-first-poster-dulquer-salmaan-spotted-trendy-new-look-photos-635847.
- ↑ "Kerala Sahitya Akademi Awards announced; Poetry award to OP Suresh; fellowships awarded to Perumbadavam and Sethu" (in en). Keralakaumudi Daily. 17 August 2021. https://keralakaumudi.com/en/news/news.php?id=620160&u=kerala-sahitya-akademi-awards-announced-poetry-award-to-op-suresh-fellowships-awarded-to-perumbadavam-and-sethu-620160.
- ↑ "Kavya Prakash: I want to make movies with a good message, which brings smiles to people's faces". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.