உருகுக்கம்பி
இலத்திரனியலிலும், மின்பொறியியலிலும், உருகுக்கம்பி அல்லது மின்னுருகி (fuse) என்பது ஓர் உலோக கலவையால் ஆன கம்பி ஆகும். இதில் 37% காரீயம் 63% ஈயம் உள்ளது. இது அதிக மின்தடையும், குறைந்த உருகு நிலையும் கொண்டது. மின் சாதனத்தோடு மின் உருகி தொடராக இணைக்கப்படும். மின்சுற்றில் இணைக்கப்பட்டு உள்ளபோது, வரையறுக்கப்பட்ட அளவினை விட அதிக மின்னோட்டம் பாயும்போது உருகுக்கம்பி உருகி, மின்சுற்று முறிக்கப்படுகிறது. இதனால் பிற கருவிகளில் அதிக மின்னோட்டம் தவிர்க்கப்படுகிறது. அதனால் மின் கருவிகள் காக்கப்படுகின்றன. பின் உருகுக்கம்பி,அதன் வகையைப் பொறுத்து மாற்றப்படவோ அல்லது புதிதாக சுற்றப்படவோ வேண்டும். உருகுக்கம்பிகள் பல வகைப்படும். பயன்பாட்டினைப் பொறுத்து தேர்வு செய்யப்படுகின்றன. பொதுவாக தகரம் மற்றும் காரீயத்தால் இவை உருவாக்கப்படுகின்றன. மின்னழுத்தத்தில் ஏற்படும் மாற்றத்தால் குறுக்குச் சுற்று உண்டாவதைத் தவிர்க்கிறது. மின் கருவிகளில் பாயும் மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்து உருகுக்கம்பிகள் பல வகையாகப் பிரிக்கப்படுகின்றன. சுற்றமைப்புப் பிரிகலன் பழுதடைந்த மின் சாதனத்திலிருந்து மின்னோட்டத்தை தானாகவே தடை செய்ய ADS (Automatic Disconnection of Supply) எனப்படும் தானியங்கி மின் சுற்று முறிப்பான் பயன்படுகிறது. சுற்றமைப்புப் பிரிகலன் என்பது இவ்வகையைச் சேர்ந்த ஒரு மின் சுற்று முறிப்பான் ஆகும்.
வரலாறு
தொகுபிரிக்கெட் (Breguet) என்ற அறிஞர் தொலைபேசி நிலையங்களை மின்னலிருந்து பாதுகாக்க குறைந்த தடிமன் கொண்ட கம்பிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தினார். இதன் மூலம் மின் கருவிகளும், மற்ற இணைப்பு கம்பிகளும் பாதுகாக்கப்படுகிறது.[1] 1864 ஆம் ஆண்டே உருகுக்கம்பிகள், தொலைத் தொடர்பு கம்பிகளின் இடையே பயன்படுத்தப்பட்டு, மின்னலிருந்து அவை பாதுகாக்கப்பட்டன.[2] 1890 ஆம் ஆண்டு தாமசு ஆல்வா எடிசன் மின் கருவிகளை பாதுகாக்கும் உருகுக்கம்பிகளுக்குக் காப்புரிமை பெற்றார்.[3]
உருவாகும் விதம்
தொகுஉருகுக்கம்பி பொதுவாக ஒரு உலோக பட்டை அல்லது கம்பியால் செய்யப்பட்டுள்ளது. இதன் தடிமன், மின் சுற்றில் பயன்படும் கம்பியை விட குறைவாகவே இருக்கும். இவை மின் காப்பான் பெட்டியினுள்ளே வைக்கப்பட்டு, இரு மின் முனையங்களுக்கிடையே இணைக்கப்படுகிறது. இவற்றை மின் சுற்றுடன் தொடரிணைப்பிலேயே (Series) இணைக்க வேண்டும். இதனால் சுற்றில் பாயும் மின்னோட்டத்திலிருந்து கருவிகள் பாதுகாக்கப்படுகிறது. மின் கம்பியிலுள்ள மின்தடை, மின்னோட்டம் பாயும் போது வெப்பத்தை உண்டாக்குகிறது. குறிப்பிட்ட அளவில் மின்னோட்டம் பாயும் போது உண்டாகும் வெப்பம், உருகுக்கம்பியை பாதிப்பதி்ல்லை. ஆனால் மின்னோட்டம் பாயும் அளவு அதிகரிக்கும் போது உண்டாகும் வெப்பத்தினால் உருகுக்கம்பி உருகி மின் சுற்றைத் துண்டித்து கருவிகளை பாதுகாக்கிறது.
உருகுக்கம்பி பொதுவாக காரீயம் ஈயத்தாலான உலோகக்கலவையால் செய்யப்படுகிறது.[4][5] குறிப்பிட்ட அளவிற்குள் எவ்வளவு மின்னோட்டம் எவ்வளவு காலம் பாய்ந்தாலும் உருகுக்கம்பி எந்த பாதிப்பையும் அடைவதில்லை. நீண்ட நாட்கள் ஆன பின் ஆக்சினேற்றம் காரணமாக, உருகுக்கம்பி உருகிட வாய்ப்புள்ளது. உருகுக்கம்பிகள் பொதுவாக காற்றினால் சூழப்பட்டிருக்கும், ஆனால் சில உருகுக்கம்பிகள் மணல் அல்லது மின் கடத்தா திரவங்களினால் சூழப்பட்டிருக்கும்.
தானுந்து உருகுக்கம்பி
தொகுதானுந்து உருகுக்கம்பி (Automotive fuses) என்பது மின் கம்பிகளையும், மின் கருவிகளையும் பாதுகாக்கப் பயன்படுகிறது. பயன்பாட்டைப் பொறுத்து பல் வேறு உருகுக்கம்பிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை தானுந்து சாதனங்களில் பயன்படுத்தப்படுவதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
இவை பொதுவாக நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
- மெல்லிய தகடு வகை (Blade fuses)
- கண்ணாடி குழாய் வகை (Glass tube type)
- உருகுப் பிணைப்பு வகை (Fusible links)
- உருகு வரம்பி வகை (Fuse limiters)
பெரும்பாலன தானியங்கி உருகுக்கம்பிகள் 32 வோல்ட் வரையுள்ள நேர் மின்னழுத்தத்தில் செயல்படக் கூடியவை.[6]
உயர் மின்னழுத்த உருகுக்கம்பி
தொகு115,000 வோல்ட் வரையுள்ள மாறுதிசை மின்னோட்டம் பாயும் மின் பகிர்மானக் கம்பிகளில் உயர் மின்னழுத்த உருகுக்கம்பி பயன்படுத்தப்படுகிறது. உயர் மின்னழுத்த உருகுக்கம்பிகள், மின்மாற்றி போன்ற கருவிகளைப் பாதுகாக்க உதவுகிறது.
உருகுக்கம்பிகளில் காணப்படும் சில குறியீடுகள்
தொகுஉருகுக்கம்பிகளில் காணப்படும் சில குறியீடுகளைக் காண இயலும். இவை எந்தெந்த சூழலில் உருகுக்கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.[7] கொடுக்கப்பட்ட குறியீடுகளில் சில
- உருகுக்கம்பியின் மின்னோட்ட அளவு.
- உருகுக்கம்பியின் மின்னழுத்த அளவு.
- உருகுக்கம்பி பிடிக்கும் காலம் அல்லது உருகுக்கம்பியின் வேகம் (fuse speed)
- தரச் சான்று எண்
- உற்பத்தியாளர் வழங்கும் எண்
- பிரிநிலை தாங்குதிறன் (Breaking capacity)
வெப்பநிலை மாற்றத்தால் உருகுக்கம்பியில் ஏற்படும் மாற்றங்கள்
தொகுசுற்றுப்புற வெப்பநிலை உருகுக்கம்பியின் செயல்பாட்டை பெரிதும் பாதிக்கிறது. வெப்பநிலை மாற்றத்தால் உருகுக்கம்பியில் ஏற்படும் மாற்றங்கள் உற்பத்தியாளர்களால் வழங்கப்படுகிறது. 25 °C வெப்பநிலையில் 1 A மின்னோட்டம் கொண்ட உருகுக்கம்பி, −40 °C வெப்பநிலையில் 10% அல்லது 20% மின்னோட்டம் அதிகம் பாய்கிறது. 100 °C வெப்பநிலையில் 80% மின்னோட்டம் பாயும் போதே மின் சுற்று முறிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Walter Schossig Introduction to the history of selective protection, PAC Magazine, Summer 2007 pp. 70–74
- ↑ Arthur Wright, P. Gordon Newbery Electric fuses 3rd edition, Institution of Electrical Engineers (IET), 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86341-379-X, pp. 2–10
- ↑ edison.rutgers.edu/patents/ — U.S. Patent Office number 438305 "Fuse Block" (.pdf) பரணிடப்பட்டது 2016-10-19 at the வந்தவழி இயந்திரம் Edison writes, "The passage of an abnormal electric current fuses the safety-catch and breaks the circuit, as will be understood."
- ↑ "Fuse Element Fatigue" (PDF). Cooper Bussmann. Archived from the original (PDF) on 2015-05-27. பார்க்கப்பட்ட நாள் 2015-05-26.
- ↑ A. Wright, P.G. Newber (Jan 1, 2004). Electric Fuses, 3rd Edition. IET. pp. 124–125.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-01-29. பார்க்கப்பட்ட நாள் 2018-05-01.
- ↑ "Identify a fuse by its markings". Swe-Check. பார்க்கப்பட்ட நாள் 2013-09-09.