உரூக் குவளை

விக்கிப்பீடியா:பட்டியலிடல்


உரூக் ஜாடி அல்லது வர்க்கா குவளை (Warka Vase or Uruk vase) தற்கால ஈராக் நாட்டில் இருந்த பண்டைய சுமேரியாவின் உரூக் தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காலம் கிமு 3200 - 3000 இடைப்பட்டது. ஜிப்சம் களிமண்னால் ஆன இக்குவளை பெண் தெய்வமான இஷ்தர் கோயில் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தொல்பொருள் பண்டைய எகிப்தின் நார்மெர் கற்பலகை காலத்திற்கு சமமானது.[1]

உரூக் குவளை
உரூக் குவளை, காலம் கிமு 3200–3000, ஈராக் அருங்காட்சியகம், மார்ச் 2019
செய்பொருள்ஜிப்சம்
உருவாக்கம்கிமு 3200–3000
கண்டுபிடிப்புவார்க்கா கிராமம், உரூக், ஈராக்
தற்போதைய இடம்ஈராக் அருங்காட்சியகம்

குவளையின் அடியில் உள்ள காணப்படும் பேரீச்சம்பழம், பார்லி மற்றும் கோதுமை போன்ற தாவரங்கள் உள்ளிட்டவைகள் வாழ்க்கையின் இயற்கையான கூறுகளைக் காட்டுகிறது. அதன் மேற்பகுதியில் ஆட்டுக்கிடாக்கள் மற்றும் சினைமாடுகள் அணிவகுத்துச் செல்கின்றது. நடுப் பகுதியில் நிர்வாண மனிதர்கள் பிரசாதங்களைக் குறிக்கும் உணவுப் பொருட்களின் கூடைகளை எடுத்துச் செல்வதைக் காட்டுகிறது. கடைசியாக, மேற்புறத்தில் இஷ்தர் பெண் கடவுள் பக்தர்களின் படையலை ஏற்றுக்கொள்வதாக சித்தரிக்கிறது.[2]

உரூக் நகரத்தின் தொடர்ச்சியான உயிர்ச்சக்தியை உறுதிசெய்யும் வகையில் பெண் கடவுள் இஷ்தர் மற்றும் ஆண் கடவுள் துமுசித் இடையேயான திருமணச் சடங்கு இதில் விளக்கப்படுகிறது.[2] T குவளையில் உருவங்கள் வரிசை முறையில் இருப்பதற்கு, மானுடவியலாளர் சூசன் பொல்லாக்கின் கூற்றுப்படி,மெசொப்பொத்தேமியாவில் சமூகம் மற்றும் இயற்கையான படிநிலைகள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று ஒத்திருந்தன என்பதைக் காட்டுகிறது.[3]

கண்டுபிடிப்பு தொகு

உடைந்த நிலையில் உரூக் ஜாடியை ஜெர்மானிய தொல்லியல் அறிஞர் 1933/34ம் ஆண்டுகளில் உரூக் நகரத்தின் அருகில் உள்ள வார்க்கா எனும் கிராமத்தில் நடத்திய அகழாய்வில் கண்டுபிடித்தார்.[4] ஜிப்சம் களிமண்ணால் ஆன இக்குவளை 1 மீட்டர் உயரம் கொண்டது.[1][1]</ref>[5]

உரூக் குவளை
1 மீட்டர் உயரம் கொண்ட உரூக் ஜாடி
உரூக் குவளியின் மேற்புறத்தில் பெண் கடவுள் இஷ்தருக்கு படையல் போடும் காட்சிகள்

உரூக் குவளையின் காட்சிகள் தொகு

உரூக் குவளையின் மேல் பகுதியின் காட்சிகள்[6]
 
எண் விளக்கம் ஆதி-ஆப்பெழுத்து ஆப்பெழுத்து அடையாளப் பெயர் சுமேரியம் அக்காடியம்
1 அறிப்படாத பொருள் உருவம் ஆப்பெழுத்து EN சுமேரியம் அக்காடியம்
2 எருது உருவம் ஆப்பெழுத்து URU சுமேரியம் அக்காடியம்
3 இஷ்தர் கடவுள் வழிபாடு உருவம் ஆப்பெழுத்து எழுத்தின் பெயர் சுமேரியம் அக்காடியம்
4 அறுவடைக் காட்சி உருவம் ஆப்பெழுத்து எழுத்தின் பெயர் சுமேரியம் அக்காடியம்
5 ஆட்டுக்கிடாரி உருவம் ஆப்பெழுத்து எழுத்தின் பெயர் சுமேரியம் அக்காடியம்
6 சிங்கம் உருவம் ஆப்பெழுத்து எழுத்தின் பெயர் சுமேரியம் அக்காடியம்
7 அறிப்படாத பொருள் உருவம் ஆப்பெழுத்து ME சுமேரியம் அக்காடியம்
 
உரூக் குவளையின் மாதிரி, பெர்கமோன் அருங்காட்சியகம், ஜெர்மனி

இதனையும் காண்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Warka Vase
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Kleiner, Fred S.; Mamiya, Christin J. (2006). Gardner's Art Through the Ages: The Western Perspective – Volume 1 (12th ). Belmont, California, USA: Thomson Wadsworth. பக். 20–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-495-00479-0. https://archive.org/details/gardnersartthrou00fred. 
  2. 2.0 2.1 Stokstad, Marilyn (2018). Art History. Upper Saddle River: Pearson. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780134479279. https://archive.org/details/isbn_2900135570660. 
  3. Pollock, Susan (1999). Ancient Mesopotamia: The Eden that Never Was. Cambridge: Cambridge University Press. பக். 189–191. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0521575680. https://archive.org/details/ancientmesopotam0000poll. 
  4. Ralf B. Wartke, "Eine Vermißtenliste (2): Die "Warka-Vase" aus Bagdad பரணிடப்பட்டது 28 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்", Frankfurter Allgemeine Zeitung 26 April 2003, Nbr 97, page 39.. English translation here. (The author is a deputy director of the Berliner Vorderasiatischen Museums).
  5. Oriental Institute, Chicago,Lost Treasures from Iraq-Warka Vase பரணிடப்பட்டது 2014-05-30 at the வந்தவழி இயந்திரம், website accessed 8 June 2007.
  6. Cooper, J.S. (2008). Taylor, P.. ed. Incongruent corpora: Writing and art in ancient Iraq. Warburg Institute Colloquia. 13. London: The Warburg Institute. பக். 69–94. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூக்_குவளை&oldid=3848589" இலிருந்து மீள்விக்கப்பட்டது