உரூத் தூரர்
உரூத் தூரர் (Ruth Durrer)(பிறப்பு 1958) ஜெனீவா பல்கலைக்கழகத்தில் அண்டவியல் பேராசிரியராக உள்ளார். அவர் அண்ட நுண்ணலை பின்னணி, பிரேன் அண்டவியல், திரள்நிலை ஈர்ப்பு ஆகியவற்றில் பணியாற்றுகிறார்.
பிறப்பு | 1958 (அகவை 65–66) கெர்ன்சு |
---|---|
Alma mater | சூரிச் பல்கலைக்கழகம் |
துறை ஆலோசகர் | நார்பெர்ட் சுட்டிராமன் |
இளமையும் கல்வியும்
தொகுஇவர் கெர்ன்ஸில் பிறந்தார்.[1] அவர் தனது உயர்நிலைப் பள்ளி பட்டயத்தை கான்ட்டொனல்லசு இலெகிரெர்செமினாரில் பெற்றார். இவர் சூரிச் பல்கலைக்கழகத்தில் படித்தார்.[1] 1988 ஆம் ஆண்டில் சூரிச் பல்கலைக்கழகத்தில் நோர்பர்ட் சுட்டுர்ரூமனுடன் சிற்றுலைவுக் கோட்பாட்டில் த முனைவர் பட்டத்தை முடித்தார்.[2][3] 1989 ஆம் ஆண்டில் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்பு அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் முதுமுனைவர் ஆராய்ச்சியாளராக இருந்தார்.[4] இவர் 1991 இல் சூரிச் நகருக்குத் திரும்பினார், தன் முதுமுனைவர் முனைவர் பட்டத்தை முடித்தார்.[2]
ஆராய்ச்சியும் தொழிலும்
தொகுதூரர் 1992 இல் சூரிச் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும் , 1995 இல் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் முழு பேராசிரியராகவும் பணியில் அமர்த்தப்பட்டார்.[2] அவர் கோட்பாட்டு இயற்பியலுக்கான பெரிமீட்டர் நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளார்.[5] அவர் அண்ட நுண்ணலை பின்னணியிலும் திரள்நிலை ஈர்ப்பிலும் வேலை செய்கிறார்.[6][7] திரள்நிலை ஈர்ப்பு என்பது திரள் ஈர்ப்பன்கள்வழி விரிவடைந்து வரும் அண்டத்தை விளக்குகிறது. இது பெருநிலை அளவுகளில் ஈர்ப்பை வலுவிழக்கச் செய்கிறது.[8] தூரர் பொது சார்பியலுக்கான ஒரு செய்முறையில் அண்டவியல் நோக்கீடுகளைப் பயன்படுத்துகிறார்.[9]
இடவியல் குறைபாடுகள் பற்றிய கோட்பாட்டுப் புரிதலுக்கு தூரர் விரிவாக பங்களித்துள்ளார். அண்ட நுண்ணலை பின்னணியின் கோணத் திறன் நிறமாலையின் ஒலி உச்சங்களை அண்ட கட்டமைப்புகள் அடக்க முடியும் என்பதை இவர் காட்டினார்.[10] இந்த முடிவுகள் , கட்புல அண்டத்தில் பொருளின் பரவலுக்கு அண்ட கட்டமைப்புகள் பொறுப்பல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றன. தொடக்க கால ழண்டத்தில் அண்டவியல் பொருள்நிலை மாற்றங்களை அறிய நிலக்கோள ஆய்வக அடிப்படையிலான செய்முறைகளைப் பயன்படுத்த முடியும் என்பதை நிறுவ அவர் நீல் துரோக் உடன் பணிபுரிந்தார்.[11] சர வலைப்பின்னல்களின் அளவீட்டு தீர்வுகளைப் படிக்க, நீர்மப் படிகங்களைப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.[11] தொடக்க கால அண்டத்தில்த்தில் அடர்த்தி அலைவுகள்(ஏற்ற இறக்கங்கள்) அண்டவியல் காந்தப்புலங்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் அவர் நிறுவியுள்ளார்.[12][13][14] இந்த முதன்மையான காந்தப்புலங்களின் அளவிடுதல் பண்புகளை காரணமுடைமை வாதங்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பதை அவர் காட்டினார்.[15]
60 பில்லியன் மண்டலங்களாகப் பிரித்து, ஒரு விரிவான.விண்வெளிப் பகுதியை தூரர் ஆய்வு செய்தார். மேலும் இதற்காக, தனிப்பட்ட துகள்களின் இயக்கத்தைப் படிக்க, ஒரு மீக்கணினியில் சி++ நூலக இலாட் ஃபீல்ட் 2 நிரலைப் பயன்படுத்தினார்.[16] நியூட்டனின் முறைகளின் கணிப்புடன் ஒப்பிடுகையில் மெட்ரிக் விண்வெளியில் உள்ள தொலைவைக் கணக்கிட ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளைப் பயன்படுத்தினார்.[16] அவர் இருண்ட ஆற்றலையும் ஆராய்ந்துள்ளார்.[17]
தூரர் 2012 ஆம் ஆண்டில் சுவிசு தேசிய அறிவியல் அறக்கட்டளையால் கல்விசார் வலையத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பொது சார்பியல், ஈர்ப்புக்கான தூய, பயன்பாட்டு இயற்பியல் பன்னாட்டுக் கழகத்தின் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[18] பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகம் , பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் , பாரிசு- சுது பல்கலைக்கழகம் , கலிலியோ கலிலி நிறுவனம் ஆகியவற்றில் வருகை தரும் கல்விப் பதவிகளில் இருந்துள்ளார்.[1]
புத்தகங்கள்
தொகு- Durrer, Ruth; García-Bellido, Juan; Shaposhnikov, Mikhail (2001). Cosmology and Particle Physics. Melville, New York: American Institute of Physics. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1563969866. இணையக் கணினி நூலக மைய எண் 46930644.
- Durrer, Ruth (2008). The Cosmic Microwave Background. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780511817205. இணையக் கணினி நூலக மைய எண் 297170401.[19]
தகைமைகளும் விருதுகளும்
தொகுஅவரது தகைமைகளும் விருதுகளும் பின்வருமாறு:
- 1992 சுவிசு அறிவியல் கல்வ்க்கழக சேப்லி விருது[20]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதூரருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.[1] அவர் ஜெர்மன் , ஆங்கிலம் , பிரெஞ்சு சுவிசு ஜெர்மன் மொழிகளில் பேசுகிறார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Prof. Ruth Durrer - AcademiaNet". www.academia-net.org. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ 2.0 2.1 2.2 "Ruth Durrer | Cosmology and Astroparticle Physics - University of Geneva". cosmology.unige.ch (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ "Ruth Durrer - The Mathematics Genealogy Project". www.genealogy.ams.org. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
- ↑ "Ruth Durrer". Institute for Advanced Study (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ "Ruth Durrer | Perimeter Institute". perimeterinstitute.ca. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ "Ruth Durrer | SwissMAP". www.nccr-swissmap.ch. Archived from the original on 2019-05-08. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ "Cosmology and the cosmic microwave background | Cours de physique théorique". courses.ipht.cnrs.fr. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Ruth Durrer". www.colloquium.phys.ethz.ch (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ "Testing General Relativity with Cosmological observations - Ruth Durrer". Media Hopper Create - The University of Edinburgh Media Platform (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ Durrer, Ruth; Gangui, Alejandro; Sakellariadou, Mairi (1996-01-22). "Doppler Peaks in the Angular Power Spectrum of the Cosmic Microwave Background: A Fingerprint of Topological Defects". Physical Review Letters 76 (4): 579–582. doi:10.1103/PhysRevLett.76.579. பப்மெட்:10061495. Bibcode: 1996PhRvL..76..579D.
- ↑ 11.0 11.1 Yurke, Bernard; Turok, Neil; Durrer, Ruth; Chuang, Isaac (1991-03-15). "Cosmology in the Laboratory: Defect Dynamics in Liquid Crystals" (in en). Science 251 (4999): 1336–1342. doi:10.1126/science.251.4999.1336. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:17816188. Bibcode: 1991Sci...251.1336C.
- ↑ Durrer, Ruth (2006-02-10). "Is the Mystery of Cosmic Magnetic Fields Solved?" (in en). Science 311 (5762): 787–788. doi:10.1126/science.1122395. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:16469908. http://archive-ouverte.unige.ch/unige:946.
- ↑ "North of the Big Bang". www.newscientist.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ "Members in the Media". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ Durrer, Ruth; Caprini, Chiara (2003-11-19). "Primordial magnetic fields and causality". Journal of Cosmology and Astroparticle Physics 2003 (11): 010. doi:10.1088/1475-7516/2003/11/010. பன்னாட்டுத் தர தொடர் எண்:1475-7516. Bibcode: 2003JCAP...11..010D.
- ↑ 16.0 16.1 "Spacetime and Gravitational Waves Yield a New View of the Universe". The Daily Galaxy (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ Durrer Ruth (2011-12-28). "What do we really know about dark energy?". Philosophical Transactions of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 369 (1957): 5102–5114. doi:10.1098/rsta.2011.0285. பப்மெட்:22084297. Bibcode: 2011RSPTA.369.5102D.
- ↑ "AC2: Members | IUPAP: The International Union of Pure and Applied Physics". iupap.org. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
- ↑ Reviews of The Cosmic Microwave Background:
- ↑ "Ruth Durrer". Institute for Advanced Study (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.