உலகக் கலை நாள்

உலகக் கலை நாள் (World Art Day) என்பது நுண்கலைகளின் ஒரு பன்னாட்டுக் கொண்டாட்ட நாள் ஆகும், இது பன்னாட்டுக் கலைச் சங்கத்தால் (IAA) உலகம் முழுவதும் ஆக்கபூர்வமான கலைச் செயல்பாடு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டது.[1][2]

மெக்சிக்கோவில் குவாதலகாராவில் அமைந்துள்ள பன்னாட்டுக் கலைச் சங்கத்தின் 17வது பொதுச் சபையில் ஏப்ரல் 15-ஆம் நாளை உலகக் கலை நாளாக அறிவிக்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டது, முதல் கொண்டாட்டம் 2012 இல் நடைபெற்றது. இந்த முன்மொழிவிற்கு துருக்கிய ஓவியர் பெத்ரி பாய்க்காம் புரவலராக இருந்தார். இம்முன்மொழிவு பொதுச் சபையால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1][3][4]

லியொனார்டோ டா வின்சியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்நிகழ்விற்கான நாள் முடிவு செய்யப்பட்டது. உலக அமைதி, கருத்துச் சுதந்திரம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், பல்லினப்பண்பாடு மற்றும் கலையின் முக்கியத்துவத்தின் சின்னமாக டாவின்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][4]

உலகக் கலைக் கலை நாள் இணைய வழியிலும், முக்கியமாக கூகுள் கலைச் செயல்திட்டம் போன்றவை மூலம், முன்னெடுக்கப்படுகிறது.[5]

2012 ஏப்ரல் 15 அன்று நடந்த முதல் உலகக் கலை நாள், அனைத்து கலைச் சங்கத் தேசியக் குழுக்களாலும், பிரான்சு, சுவீடன், சிலோவாக்கியா, தென்னாப்பிரிக்கா, சைப்பிரசு, வெனிசுவேலா உட்பட்ட உலக நாடுகளின் 150 கலைஞர்களாலும் ஆதரிக்கப்பட்டது.[1][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Why World Art Day?". International Association of Art. Archived from the original on டிசம்பர் 25, 2013. பார்க்கப்பட்ட நாள் February 10, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 Gerry La Roux (April 7, 2013). "Celebrating art and creativity on World Art Day". New Zealand: Science Lens. http://sciencelens.co.nz/2013/04/15/world-art-day/. பார்த்த நாள்: February 10, 2014. 
  3. 3.0 3.1 "World Art Day to be celebrated April 15". Hürriyet Daily News (Istanbul). April 11, 2012. http://www.hurriyetdailynews.com/world-art-day-to-be-celebrated-april-15.aspx?pageID=238&nID=18099&NewsCatID=359. பார்த்த நாள்: February 10, 2014. 
  4. 4.0 4.1 4.2 "Día Mundial del Arte se celebra este sábado en Caracas". Caracas: El Universal. April 12, 2012. http://www.eluniversal.com/arte-y-entretenimiento/cultura/120412/dia-mundial-del-arte-se-celebra-este-sabado-en-caracas. பார்த்த நாள்: February 10, 2014. 
  5. Elizabeth Palermo (April 15, 2013). "Van Gogh’s 'Starry Night' Most-Loved Painting on Google". TechNewsDaily. http://www.technewsdaily.com/17753-google-art-project.html. பார்த்த நாள்: February 10, 2014. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகக்_கலை_நாள்&oldid=3928083" இலிருந்து மீள்விக்கப்பட்டது