உலகம் (சிற்றூர்)

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

உலகம் (Ulagam) என்பது தமிழ்நாடு மாநிலம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் பங்கனஹள்ளி ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர்[1]. இது உலகம் ஊராட்சிக்கு உட்பட்டது. இந்த ஊர் விவசாய செழிப்பு மிக்க ஊராகும். தக்காளி, புதினா, கொத்துமல்லி, சாமந்திமலர் என்று அடிப்படையான விவசாயப்பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. ஆயுதபூசை திருவிழாவின் போது வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு விளையும் சாமந்திப்பூவினை வாங்குவதற்காக வியாபாரிகள் வருகை தருகின்றனர்[சான்று தேவை].

உலகம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635117
மரம் வளர்ப்போம்

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 288 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1031 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4242 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2183, பெண்களின் எண்ணிக்கை 2059 (48.5 % ) என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 51.6 % ( 2190) என உள்ளது.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015. பக்க எண்: 2081
  2. "Ulagam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகம்_(சிற்றூர்)&oldid=3657028" இலிருந்து மீள்விக்கப்பட்டது