உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, மலேசியா - 2011
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியா - 2011, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் 2011 மே 20 முதல் மே 22 வரை நடைபெற்றது. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் ஏற்கனவே இந்தியாவிலும், இலங்கையிலும் பல முறை நடத்தப்பட்டுள்ளன. மலேசியாவில் நடைபெற்றமை இது முதல் முறையாகும்.
நோக்கம்
தொகுதமிழ் இலக்கியத்துக்கு வலிமையும், துடிப்பும் மிக்க ஒரு பங்காளியாளராக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இயக்கம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளது. இந்தப் பங்களிப்புப் பல வகைகளில் தொடரும் அதேவேளை, இவ்வியக்கம் குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் முனைப்புடனே திகழ்கின்றன. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார், குவைத். சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் அடங்கலாக, அமெரிக்க, ஐரோப்பா, பிரித்தானியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து வரையிலும் விரிந்துள்ள புலம்பெயர் தமிழுலகமும் இதில் பெருமுனைப்புக் காட்டிவருகிறது.
ஏற்பாடு
தொகுமலேசியா வாழ் தமிழ் முஸ்லிம் தலைவர்கள், நிறுவனங்கள், இஸ்லாமியத் தமிழ் இலக்கியவாணர்கள் ஒன்றிணைந்த தேசிய குழு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. சமுதாயத் தலைவர்கள், மூத்த தேசிய முன்னோடிகள், தேசிய அளவிலும் மாநில அளவிலும் செயற்படும் பொது அமைப்புகள் ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேசிய முயற்சியாகும். முன்னிலைப் பெருமக்களையும் இலக்கியத் துறையறிஞர்களையும் கொண்ட 20 பேர் அடங்கிய வழிநடத்துங்குழு, இந்த மாநாட்டிற்குரிய அரங்கங்களைத் தெரிவுசெய்து முறைப்படுத்தும் பணிகளுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது.
ஆதரவு
தொகுஇந்த மாநாடு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் அவர்களின் சிறப்பு ஆதரவுடன் நடைபெற்றது.
மாநாட்டுக் கருப்பொருள்
தொகு- இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்
ஆரம்ப வைபவம்
தொகுகோலாலம்பூர் புத்ரா உலக வணிக மையதிலுள்ள மெர்டேக்க மண்டபத்தில் மே 20 2011 இரவு 8.00 மணிக்கு தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மலேசிய பிரதமர் துறை அமைச்சர் டான்ஸ்ரீ நூர் முகம்மது யாக்கோப் கலந்துகொண்டார். ஆய்வரங்கத் தொடக்க விழா மலாயாப் பல்கலைக்கழகப் 'பெர்டானா சிஸ்வா' மண்டபத்தில் 2011 மே 20 திகதி ஆரம்பமானது.
ஆய்வரங்கம் 1
தொகுஅறிஞர் அல்லாமா கரீம் கனி அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 21, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த முனைவர் ஹாஜா கனி தலைமை தாங்கினார்.
- அமர்வு 01
முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் கையாண்ட இலக்கிய வடிவங்கள்
ஆய்வுரை நடத்தியவர்: அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஹாஜி மு.சாயபு மரைக்காயர்
- அமர்வு 02
இலங்கை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்கள்
ஆய்வுரை நடத்தியவர்: இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக முனைவர் எம். எஸ். எம். அனஸ்
- அமர்வு 03
தமிழக இலக்கியத்துறையில் இரண்டாம் இருண்டகாலத்தில் இஸ்லாமியக் காப்பியங்களின் எழுச்சி
ஆய்வுரை நடத்தியவர் : திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகக் கல்லூரி ஓய்வுபெற்ற தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எம். மீரான் பிள்ளை
ஆய்வரங்கம் 2
தொகுமகதூம் சாயபு அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 21, 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு இலங்கையைச் சேர்ந்த டாக்டர் தாசீம் அஹமது தலைமை தாங்கினார்.
- அமர்வு 01
இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் தமிழிலக்கிய மரபுகள்
ஆய்வுரை நடத்தியவர்: இணைப் பேராசிரியர் முஃஅப்துல் சமது
- அமர்வு 02
இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் திருமண நடைமுறை
ஆய்வுரை நடத்தியவர்: முனைவர் ஜே. ராஜா முகம்மது
- அமர்வு 03
சீறா புராணத்தில் உலா - பழைமையும், புதுமையும்
ஆய்வுரை நடத்தியவர்: இலங்கை, பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் வ. மகேஸ்வரன்
ஆய்வரங்கம் 3
தொகுஹாஜி அப்துல்லாஹ் - மாஸா அரங்கம், மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 21, 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு மலேசியா அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக டாக்டர் அஹமது காமில் மைதீன் மீரா தலைமை தாங்கினார்.
- அமர்வு 01 -
முன்சி அப்துல்லாவின் வாழ்வும் பணியும்
ஆய்வுரை நடத்தியவர்: மலாய்ப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை பேராசிரியர் முனைவர் ராஜேந்திரன்
- அமர்வு 02
மலேசியாவில் தமிழ் முஸ்லிம்களின் இஸ்லாமியப் பணி
ஆய்வுரை நடத்தியவர்: கோலாலம்பூர் அனைத்துல இஸ்லாமியப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் தமீம் உஸாமா
- அமர்வு 03
மலேசிய ஊடகத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு
ஆய்வுரை நடத்தியவர்: கோலாலம்பூர் அனைத்துல இஸ்லாமியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் ஹாஜா முஹையத்தீன்
ஆய்வரங்கம் 4
தொகுபண்டிட் மு. அப்துல் மஜீது அரங்கம், மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 21, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த கேப்டன் என். ஏ. அமீர் அலி தலைமை தாங்கினார்.
- அமர்வு 01
தமிழகக் கலாசாரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு
ஆய்வுரை நடத்தியவர்: முனைவர் கவிக்கோ அப்துல் ரகுமான்
- அமர்வு 02
தமிழிசைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு
ஆய்வுரை நடத்தியவர்: மதுரை இசை ஆய்வாளர் இறையறிஞர் நா. மம்மது
- அமர்வு 03
இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் சமய நல்லிணக்கம்
ஆய்வுரை நடத்தியவர்: புதுவைப் பல்கலைக்கழக தொலைக்கல்வித்துறை இயக்குநர் பேராசிரியர் முனைவர் ம. அறிவுநம்பி
ஆய்வரங்கம் 5
தொகுசெய்குத்தம்பிப் பாவலர் அரங்கம், மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 21, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு ஓய்வுபெற்ற மலேசியாக் கல்வித்துறை அதிகாரி சாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.
- அமர்வு 01
மலேசியாவின் தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு
ஆய்வுரை நடத்தியவர்: மலேசிய முதுநிலை எழுத்தாளர் சை. பீர் முகம்மது
- அமர்வு 02
மலேசியத் தமிழிலக்கியத்துறையில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு
ஆய்வுரை நடத்தியவர்: மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் கிருஸ்ணன் மணியம்
- அமர்வு 03
சிங்கைமொழி, இலக்கிய வளர்ச்சியில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு
ஆய்வுரை நடத்தியவர்: சிங்கை முதுநிலை எழுத்தாளர் ஜே. எம். சாலி
ஆய்வரங்கம் 6
தொகுகன்னல்கவி நக்கம்பாடி கரீம் அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு இலங்கையைச் சேர்ந்த எஸ். எச். எம். ஜெமீல் தலைமை தாங்கினார்.
- அமர்வு 01
இஸ்லாமிய தமிழ் இலக்கிய படைப்பில் மகளிர் பங்களிப்பு
ஆய்வுரை நடத்தியவர்: காரைக்கால் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி ஓய்வுபெற்ற கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் சா. நசீமா பானூ
- அமர்வு 02
50 ஆண்டுகால இஸ்லாமிய தமிழலக்கியம், ஆய்வுப் போக்குகளும், ஆற்ற வேண்டிய பணிகளும்
ஆய்வுரை நடத்தியவர்: மதுரை காமராசப் பல்கலைக்கழ இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுத்துறை தலைவர் முதுநிலைப் பேராசிரியர் பீ.மு. அஜ்மல்கான்
ஆய்வரங்கம் 7
தொகுகலாநிதி டாக்டர் ம. மு. உவைஸ் அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு மலேசியா பேராசிரியர் முனைவர் ரெ. கார்திகேசு தலைமை தாங்கினார்.
- அமர்வு 01
20, 21ம் நூற்றாண்டு இஸ்லாமியத் தமிழிலக்கியம் ஒரு பார்வை
ஆய்வுரை நடத்தியவர்: சென்னைப் புதுக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் எச். நத்தர்சா மரைக்காயர்
- அமர்வு 02
இலங்கை இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு
ஆய்வுரை நடத்தியவர்: இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் கே.ரகுபரன்
ஆய்வரங்கம் 8
தொகுசித்தி லெவ்வை அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு மலேசிய முனைவர் முரசு. நெடுமாறன் தலைமை தாங்கினார்.
- அமர்வு 01
தமிழக ஊடகத்துறையில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு
ஆய்வுரை நடத்தியவர்: சென்னை புதுக்கல்லூரி தமிழ் முதுநிலை மற்றும் ஆய்வியல்துறை இணைப்பேராசிரியர் முனைவர் எம். ஐ. அஹமது மரைக்கார்.
- அமர்வு 02
மலேசிய தமிழ் ஊடகத்துறையில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு
ஆய்வுரை நடத்தியவர்: மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை இணைப்பேராசிரியர் முனைவர் வே. சபாபதி
ஆய்வரங்கம் 9
தொகுபுலவர்மணி சர்புதீன் அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு டாக்டர் அ. சையது இபுராகிம் தலைமை தாங்கினார்.
- அமர்வு 01
மலேசிய மேம்பாட்டில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு
ஆய்வுரை நடத்தியவர்: மலாய்ப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன்
- அமர்வு 2
சிங்கை சமூக வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு
ஆய்வுரை நடத்தியவர்கள்: சிங்கப்பூர் முனைவர் எச். எம். சலீம், சிங்கப்பூர் எழுத்தாளர் முகம்மது இலியாஸ்
நூல்வெளியீட்டு விழா
தொகுடத்தோ சிக்கந்தர் பாட்சா அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 21, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு எஸ். எம். ஹிதாயதுல்லா தலைமை தாங்கினார். இவ்வரங்கில் 7 நூல்கள் வெளியிடப்பட்டன.
கருத்தரங்கம்
தொகுஜே. எம். ஹசைன் அரங்கம் மலாயாப் பல்கலைக்கழக பெர்னாடா சிஸ்வா மண்டபத்தில் மே 21, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு ஹாஜி முகம்மது இஸ்மாயில் சரீப் தலைமை தாங்கினார். கருத்தரங்கத் தலைப்பு இஸ்லாம் காட்டும் இலட்சிய வாழ்வும் எதிர்நோக்கும் சவால்களும். இவ்வரங்கில் பாத்திமா முஸாஃபர் (தமிழ்நாடு), பாரதி கிருஸ்ண குமார் (தமிழ்நாடு), பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா (தமிழ்நாடு), ஜாமிஆ நளீமிய்யா பேராசிரியர் அகார் முகம்மது (இலங்கை) ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
ஆலிம்களின் அரங்கம்
தொகுகாதர் முஹையத்தீன் கப்பித்தான் அரங்கம் மலாயாப் பல்கலைக்கழகக் கலைத்துறை மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு மலேசிய தமிழ் மின்னூடகப் பிரிவுத் தலைவர் உஸ்தாத் ஜமால் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். இவ்வரங்கில் கோலாலம்பூர் மிஸ்பாகுல் ஹதா மத்ரஸா உஸ்தாத் கம்பம் பீர்முகம்மது பாகவி, கோலாலம்பூர் இந்திய மஸ்ஜித் பிரதான இமாம் மௌலவி நாசில் அலி. கோலாலம்பூர் மத்ரஸா ஸ்தாப்பா ஜெயா மௌலவி சம்பை ஹிதாயத்துல்லாஹ் அரூசி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
கவியரங்கம்
தொகுபெரும்புலவர் காதர் முஹையத்தீன் மரைக்காயர் அரங்கம் மலாயாப் பல்கலைக்கழக பெர்னாடா சிஸ்வா மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு கவிக்கோ முனைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார்.இவ்வரங்கில் புலவர் ப. மு. அன்வர் (மலேசியா), கவிஞர் மாலிறையன் (தமிழ்நாடு), கவிஞர் எம். எம். நஜ்முல் ஹசன் (இலங்கை), கவிஞர் க. து. மு. இக்பால் (சிங்கை), கவிஞர் மைதீ. சுல்தான் (மலேசியா), கவிஞர் கே. ஏ. ஹாஜா மைதீன் (மலேசியா), கவிஞர் ஏம்பல் தஜம்முல் மகம்மது (தமிழ்நாடு), கவிஞர் பொத்துவில் முகம்மது அஸ்மின் (இலங்கை), கவிஞர் செ. சீனி நைனா முகம்மது மலேசியா ஆகியோர் கவி பாடினர்.
நிறைவுவிழா
தொகுமுன்சி அப்துல்லா அரங்கம் இம்மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி மலாயாப் பல்கலைக்கழக பெர்னாடா சிஸ்வா மண்டபத்தில் மே 22, 2011இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மலேசிய தோட்டத்தொழில் மூலப்பொருள் துணையமைச்சர் டத்தோ ஜி. பழனிவேலு கலந்துகொண்டார்.