உலக சதுரங்க வாகை 2021
உலக சதுரங்க வாகை 2021 (World Chess Championship 2021) என்பது உலக சதுரங்க வாகையாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடப்பு வாகையாளர் மாக்னசு கார்ல்சன், இயான் நிப்போம்னிசி ஆகியோருக்கிடையே நடைபெற்ற சதுரங்கச் சுற்றுப் போட்டி ஆகும். பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் ஆதரவில் துபாய் நகரில் எக்சுப்போ 2020 இன் போது நடத்தப்பட்டது.[1] 2020 இல் நடத்தப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2021 இல் நடத்தப்பட்டது.[2]
துபாய் பொருட்காட்சி மையம், துபாய், ஐக்கிய அரபு அமீரகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
26 நவம்பர் – 10 திசம்பர் 2021 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நடப்பு வாகையாளர் | அறைகூவல் வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மாக்னசு கார்ல்சன் | [a] இயான் நிப்போம்னிசி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு 30 நவ. 1990 அகவை 30/31 | பிறப்பு 14 சூலை 1990 அகவை 31 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உலக சதுரங்க வாகை 2018 இன் வெற்றியாளர் | 2020–21 வேட்பாளர் சுற்றின் வெற்றியாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தரவுகோள்: 2856 (உலக இல. 1) | தரவுகோள்: 2782 (உலக இல. 5) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல் ஐந்து ஆட்டங்கள் சமனில் முடிவடைந்தது. ஆறாவது ஆட்டத்தை கார்ல்சன் 136 நகர்வுகளுடன் வென்றார், இது உலக வாகையாளர் போட்டிகளிலேயே மிக நீண்ட ஆட்டமாக இருந்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, நிப்போம்னிசியின் ஆட்ட நிலை மோசமடைந்தது. 8. 9. 11 ஆம் ஆட்டங்கள் கார்ல்சனுக்கு சார்பாக முடிந்தன. இது கார்ல்சனுக்கு நான்கு வெற்றிகள், ஏழு சமன்களுடன் உறுதியான வெற்றியைத் தந்தது.
முடிவுகள்
தொகுதரவரிசை | ஆட்டங்கள் | புள்ளிகள் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | |||
இயான் நிப்போம்னிசி (CFR) | 2782 | ½ | ½ | ½ | ½ | ½ | 0 | ½ | 0 | 0 | ½ | 0 | தேவைப்படவில்லை | 3½ | ||
மாக்னசு கார்ல்சன் (NOR) | 2856 | ½ | ½ | ½ | ½ | ½ | 1 | ½ | 1 | 1 | ½ | 1 | 7½ |
குறிப்பு: 11 போட்டிகளில் 7½ புள்ளிகளை கார்ல்சன் பெற்றதால், முழுமையான 14 ஆட்டங்கள் விளையாடப்படாமல் சுற்று முடிவடைந்தது.
குறிப்புகள்
தொகு- ↑ நிப்போம்னிசி உருசியர், ஆனால் உருசியா மீதான உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்தின் தடை காரணமாக உருசிய சதுரங்கக் கூட்டமைப்பின் கொடியில் விளையாடினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Expo 2020 Dubai to host FIDE World Chess Championship பரணிடப்பட்டது 2021-11-27 at the வந்தவழி இயந்திரம், பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு, 28 January 2021
- ↑ Doggers, Peter (2020-06-29). "World Chess Championship Match Postponed To 2021" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2021-11-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211123021857/https://www.chess.com/news/view/world-championship-match-postponed-to-2021.
வெளி இணைப்புகள்
தொகு- Official site
- Page about the championship by chess24 – contains information, news, player comparison, and tournament stream.
- Carlsen – Nepomniachtchi World Championship match on Chessgames.com
- 2021 World Championship match on Lichess