உலக வசிப்பிட நாள்
உலக வசிப்பிட நாள் (World habitat day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நாள் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாக அறிவிக்கப்பட்டு முதன் முதலாக 1986 ஆம் ஆண்டில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நாளின் நோக்கம் நமது நகரங்களில் அடிப்படை மனித உரிமைகளுடன் போதுமான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும். வாழ்விடத்தின் அவசியம் குறித்து எதிர்காலத் தலைமுறையினருக்கு ஞாபகப்படுத்தும் கூட்டுப் பொறுப்பையும் இது வலியுறுத்துகிறது.
உலக வசிப்பிட நாள் கொண்டாடப்பட்ட நாட்கள்
தொகுஆண்டு | கருப்பொருள் | இடம் | முக்கிய விருந்தினர் |
---|---|---|---|
2013 | நகர்ப்புறப் போக்குவரத்து | ||
2012 | நகரங்களை மாற்றுதல், வாய்ப்புகளை ஏற்படுத்தல் | இஸ்லாமாபாத் | |
2011 | நகரங்களும் காலநிலை மாற்றமும் | அகுவாஸ்காலியான்டெசு, மெக்சிக்கோ | |
2010 | சிறந்த நகரம், சிறந்த வாழ்க்கை | சாங்காய் | |
2009 | நமது நகர்ப்புறத்துக்கான எதிர்கால திட்டத்தை வகுத்தல் | வாசிங்டன், டி. சி. | |
2008 | களிப்புறு நகரங்கள் | லுவாண்டா | ஒசே எடுவார்டோ டொசு சாண்டோசு, அங்கோலா அரசுத்தலைவர் |
2007 | ஒரு பாதுகாப்பான நகரம் ஒரு நடுநிலை நகரம் | டென் ஹாக், நெதர்லாந்து | விம் டீட்மன், ஏக் நகர முதல்வர் |
மொண்டெரே, மெக்சிக்கோ | |||
2006 | நகரங்கள், நம்பிக்கைக்கான காந்தங்கள் | நாபொலி | |
கசான், தத்தர்ஸ்தான், உருசியா | |||
2005 | மிலேனியம் அபிவிருத்தி இலக்கும், நகரமும் | ஜகார்த்தா | அரசுத்தலைவர் சுசீலோ பாம்பாங் யுதயோனோ |
2004 | நகரங்கள் - கிராமப்புற மேம்பாட்டுக்கான இயந்திரங்கள் | நைரோபி | முவாய் கிபாக்கி, கென்ய அரசுத்தலைவர் |
2003 | நீரும் நகரங்களில் சுகாதாரமும் | இரியோ டி செனீரோ | சேசர் மாய்யா, ரியோ டி செனீரோ நகர முதல்வர் |
2002 | நகரத்தில் இருந்து நகரத்துக்கான கூட்டுறவு | பிரசெல்சு | இளவரசர் பிலிப்பு |
2001 | சேரிகள் அற்ற நகரங்கள் | ஃபுக்கோக்கா, யப்பான் | வட்டாரு ஆசோ, ஆளுனர் |
2000 | நகரப்புற ஆளுமையில் பெண்கள் | யமேக்கா | செய்மோர் மலிங்சு, பிரதிப் பிரதமர் |
1999 | அனைவருக்கும் நகரங்கள் | தாலியான், சீனா | |
1998 | பாதுகாப்பான நகரங்கள் | துபை | |
1997 | எதிர்கால நகரங்கள் | பான், செருமனி | |
1996 | நகரமயமாக்கல், குடியுரிமை மற்றும் மனித ஒருமைப்பாடு | புடாபெஸ்ட் | அங்கேரி உட்துறை அமைச்சர் |
1995 | எங்கள் அயல்பகுதி | குரிட்டாபா, பிரேசில் | நகர முதல்வர் |
1994 | வூடும் குடும்பமும் | டக்கார் | அப்டூ டியோஃப், செனிகல் அரசுத்தலைவர் |
1993 | பெண்களும் வசிப்பிட அபிவிருத்தியும் | நியூயார்க் நகரம் | பூட்ரோசு பூட்ரோசு-காலி, ஐநா செயலர் |
1992 | வசிப்பிடமும் நிலையான அபிவிருத்தியும் | நியூயார்க் நகரம் | பூட்ரோசு பூட்ரோசு-காலி, ஐநா செயலர் |
1991 | வசிப்பிடமும் வாழும் சுற்றுச்சூழலும் | ஹிரோஷிமா | நகர முதல்வர் |
1990 | வசிப்பிடமும் நகரமயமாக்கலும் | இலண்டன் | |
1989 | வசிப்பிடன், சுகாதாரம், குடும்பம் | ஜகார்த்தா | சுகார்ட்டோ, அரசுத்தலைவர் |
1988 | வசிப்பிடமும் சமூகமும் | இலண்டன் | ராபர்ட் ரூன்சி, காண்டர்பரி ஆயர் |
1987 | வீடற்றோருக்கு வசிப்பிடம் | நியூ யோர்க் மாநிலம் | சேவியர் பெரெசு டி குவேலர், ஐநா செயலர் |
1986 | வசிப்பிடம் நமது உரிமை | நைரோபி |