உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி வங்கி
உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி வங்கி (Infrastructure Development Finance Bank|IDFC Bank) மும்பை நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக செயல்படும் வங்கியாகும். இவ்வங்கி உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி நிறுவனத்தின் (Infrastructure Development Finance Company) ஒரு அலகாக செயல்படுகிறது.
வகை | தனியார் வங்கி |
---|---|
நிறுவுகை | அக்டோபர், 2015 |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரா, இந்தியா |
முதன்மை நபர்கள் | ராஜிவ் லால் (மேலாண்மை இயக்குநர் & தலைமை செயல் அலுவலர் அனில் பைஜல் (செயல் படா தலைவர் (தன்னாட்சி இயக்குநர்) |
தொழில்துறை | வங்கித் தொழில், நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | வணிக வங்கித் தொழில் |
இணையத்தளம் | www |
இவ்வங்கி 19 அக்டோபர் 2015 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் துவக்கி வைக்கப்பட்டது.[1]சூலை 2015-இல் ஐடிஎப்சி வங்கி உலக அளவில் வங்கித் தொழில் தொடங்க இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றுள்ளது. [2] [3][4] 6 நவம்பர் 2015 முதல் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இவ்வங்கியின் பங்குகள் விற்கத் தொடங்கியது.[5]
வரலாறு
தொகுஉள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி நிறுவனம் (Infrastructure Development Finance Company) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 9 சூன் 1997 முதல் இயங்கி வருகிறது. 1998 -இல் இந்நிறுவனத்தை வங்கி சாரா நிதி நிறுவனமாக இந்திய ரிசர்வ் வங்கியால் பதிவு செய்யப்பட்டது. 1999 முதல் பொது நிதியுதவி நிறுவனமாக செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் ஒரு அலகான ஐடிஎப்சி வங்கி மத்தியப் பிரதேசத்தில் 23 கிளைகளுடனும் மற்றும் தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, புனே சென்னை, அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவிலும் செயல்படுகிறது. மக்கள் தொகை 10,000க்கும் குறைவாக உள்ள 15 ஊர்களில் இவ்வங்கியின் கிளைகள் செயல்படுகிறது. [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sinha, Shilpy (29 September 2015). "IDFC banks on psychometric tests for senior level hirings". Economic Times. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.
- ↑ "IDFC Bank to start operations from Oct 1 | Business Standard News". Business-standard.com. 2015-07-25. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.
- ↑ "Narendra Modi inaugurates IDFC Bank, talks of banking reforms". Livemint. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.
- ↑ "PM inaugurates IDFC Bank | Business Standard News". Business-standard.com. 2015-10-19. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.
- ↑ "De-merger listing: IDFC Bank debuts at Rs 72 on NSE". Moneycontrol.com. 2015-11-08. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.
- ↑ "IDFC Bk to start ops with few branches by Oct 1: Rajiv Lall". Moneycontrol.com. 2015-04-12. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.