உ. ரா. வரதராசன்

இந்திய அரசியல்வாதி

உ. ரா. வரதராஜன் (9 சூலை 1945 – 11 பிப்ரவரி 2010) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தொழிற்சங்க உறுப்பினர். இவர் இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மையக்குழு உறுப்பினரும்,[1] இந்திய தொழிற் சங்க மையத்தின் அகில இந்திய செயலாளரும் ஆவார்.[2]

டபிள்யூ. ஆர். வரதராஜன்
W. R. Varadarajan
W. R. Varadarajan.jpg
பிறப்புசூலை 9, 1945(1945-07-09)
உளியநல்லூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு11 பெப்ரவரி 2010(2010-02-11) (அகவை 64)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்

உ. ரா. வரதராஜன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த ம. பொ. சிவஞானத்துடன் இணைந்து துவக்கினார். இவர் ஒரு பட்டயக் கணக்கறிஞர் மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) ஊழியர். 1963ல் பொதுவுடமைக் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் 1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் இவர் பெற்ற 99571 வாக்குகள் இத்தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 46.77% ஆகும்.[3]

1991 சட்டமன்றத் தேர்தலில் இவர் தன்னுடைய தொகுதியை இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஈ. காலன் என்பவரிடம் இழந்தார். இத்தேர்தலில் இவர் 71,963 வாக்குகள் பெற்று (33.79%) இரண்டாம் இடத்தை அடைந்தார்.[4]

இறப்புதொகு

2010 பிப்ரவரி 14ஆம் நாள் இவர் காணாமல் போனதாக இவரது துணைவியார் தகவல் அளித்துள்ளார், மேலும் இவர் கையொப்பம் இடாத இரண்டு குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.[5] இவர் தன்னுடைய பிப்ரவரி 6ஆம் நாளிட்ட தற்கொலை கடிதத்தில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளின் காரணமாகவே தான் இந்த முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் இந்திய பொதுவுடமைக் (மார்க்சியம்) கட்சியின் மையக்குழு  உறுப்பினர் பதவியிலிருந்து காரணம் குறிப்பிடப்படாமலேயே நீக்கப்பட்டார். பல்வேறு தேடல்களுக்குப் பின் உ. ரா. வரதராஜனின் உடல் போரூர் ஏரியில் பிப்ரவரி 13ல் கண்டெடுக்கப்பட்டதாகவும் பின்னர் இராயப்பேட்டை மருத்துவமனை பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும் பிப்ரவரி 21ஆம் நாள் தமிழ்நாடு காவல்துறை அறிவித்தது. விரல்குறி சோதனைகள் மூலமாகவும் வரதராஜனின் மனைவி நேரில் பார்த்து சொன்னதன் அடிப்படையிலும் அவரது உடல் அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. அவர் இறக்கும்போது அவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருந்தனர்.[6][7][8]

மேற்கோள்கள்தொகு

  1. "Unleash Struggles & Build An Alternative". pd.cpim.org.
  2. "Consensus eludes EPF meet". www.tribuneindia.com.
  3. "ECI: Statistical Report 1989 elections".
  4. "ECI: Statistical Report 1991 elections".
  5. "Special teams formed to locate W.R. Varadarajan". தி இந்து (19 February 2010). பார்த்த நாள் 22-02-2010.
  6. Kolappan, B. (21-02-2010). "Body from lake identified as that of CPI(M) leader". The Hindu. பார்த்த நாள் 22-02-2010.
  7. "Body found in lake may be of missing CPM leader WR". இந்தியன் எக்சுபிரசு (22-02-2010). பார்த்த நாள் 22-02-2010.
  8. Das, Swati (20-02-2010). "Veteran CPM leader from TN missing". The Pioneer. பார்த்த நாள் 22-02-2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உ._ரா._வரதராசன்&oldid=2306667" இருந்து மீள்விக்கப்பட்டது