ஊர்வன தரவுத்தளம்

அனைத்து வாழும் ஊர்வன சிற்றினங்கள் பற்றிய வகைப்பாட்டியல் தரவுத் தளம்

ஊர்வன தரவுத்தளம் (Reptile Database) என்பது ஒரு அறிவியல் தரவுத்தளமாகும். இது அனைத்து வாழும் ஊர்வன இனங்கள் பற்றிய வகைப்பாட்டியல் தகவல்களைச் சேகரிக்கிறது (இதில் தொன்மா போன்ற புதை படிவ இனங்கள் குறித்த தகவல்கள் இல்லை). இத்தரவுத்தளமானது ஊர்வனச் சிற்றினங்கள் மீது கவனம் செலுத்துகிறது (குடும்பங்கள் போன்ற உயர் நிலை உயிரலகுக்கு பதிலாக). மேலும் தற்போது அங்கீகரிக்கப்பட்ட சுமார் 13,000க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் குறித்த தகவல்கள்[1] அவற்றின் துணையினங்களுக்கான உள்ளீடுகளுடன் உள்ளன. இருப்பினும் புதிதாக விவரிக்கப்பட்ட சிற்றினங்கள் குறித்து தரவுப்படுத்த சில மாதங்கள் வரை அவை வெளியிடப்பட்ட நாளிலிருந்து தாமதமாக இற்றைப்படுத்தப்பட்டு இணையத்தில் கிடைக்கும். இத்தரவுத்தளம், அறிவியல் மற்றும் பொதுவான பெயர்கள், ஒத்த பெயர்கள், ஆய்வு வெளியீட்டுக் குறிப்புகள், பரம்பல் தகவல், வகை தகவல், சொற்பிறப்பியல் மற்றும் பிற வகைபாட்டியல் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கிறது.

வரலாறு

தொகு

1995ஆம் ஆண்டு ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வக ஊர்வன தரவுத்தளமாக இந்த தரவுத்தளம் நிறுவப்பட்டது.[2] இதனை நிறுவும்போது இதன் நிறுவனர் பீட்டர் யூட்ஸ் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் (EMBL) பட்டதாரி மாணவராக இருந்தார். தூர் எட்ஸோல்ட் ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வக டி. என். ஏ. வரிசை தரவுத்தளத்திற்கான முதல் இணைய இடைமுகத்தை உருவாக்கினார். இது ஊர்வன தரவுத்தளத்திற்கான இடைமுகமாகவும் பயன்படுத்தப்பட்டது. 2006-ல் இத்தரவுத்தளம் மரபணு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (TIGR) மாற்றப்பட்டது.[3] மரபணு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஜே கிரேக் வென்டர் நிறுவனத்துடன் (JCVI) இணைக்கப்படும் வரை சிறிது காலம் மரபணு ஆராய்ச்சி நிறுவன தரவுத்தளமாகச் செயல்பட்டது. இங்கு யூட்ஸ் 2010 வரை இணைப் பேராசிரியராக இருந்தார்.[4] 2010ஆம் ஆண்டு முதல் பீட்டர் யூட்ஸ் மற்றும் செக் நிரலாளர் ஜிரி ஹோசெக் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் செக் குடியரசில் உள்ள வழங்கியில் இத்தரவுத்தளம் பராமரிக்கப்பட்டது. ஊர்வன தரவுத்தளமானது தன் 25வது ஆண்டு விழாவை 20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய ஆம்பிபியன்வெப்புடன் (நீர் நில வாழ்வன வலை) இணைந்து 2021-ல் கொண்டாடியது.[5]

உள்ளடக்கம்

தொகு
 
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேரினங்கள் கொண்ட ஊர்வன வகைகளின் எண்ணிக்கை. பெரும்பாலான பேரினங்களில் ஒன்று அல்லது சில இனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் சிலவற்றில் நூற்றுக்கணக்கான சிற்றினங்கள் இருக்கலாம். ஊர்வன தரவுத்தளத்தின் தரவுகளின் அடிப்படையில் (மே 2015 வரை).

செப்டம்பர் 2020 நிலவரப்படி, ஊர்வன தரவுத்தளம் சுமார் 1200 பேரினங்களின் கீழ் சுமார் 11,300 சிற்றினங்களுடன் (இன்னொரு ~2,200 துணையினங்கள் உட்பட) பட்டியலிடப்பட்டுள்ளது (படத்தைப் பார்க்கவும்). மேலும் 50,000க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைக் குறிப்புகள் மற்றும் சுமார் 15,000 புகைப்படங்கள் உள்ளன. முந்தைய தசாப்தத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 100 முதல் 200 புதிய சிற்றினங்கள் விவரிக்கப்பட்டதன் மூலம் தரவுத்தளம் தன் தொடக்க நிலையிலிருந்து தொடர்ந்து வளர்ந்து வருகிறது.[6] சமீபத்தில், தரவுத்தளமானது முதன்மை வகை மாதிரிகளின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ முழுமையான பட்டியலைச் சேர்த்தது.[7]

பிற தரவுத்தளங்களுடனான உறவு

தொகு

ஊர்வன தரவுத்தளம் சிற்றினங்கள் 2000 திட்டத்தில் உறுப்பினராக உள்ளது. இது 150க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் தரவுத்தளங்களின் மேல் தரவுத்தளமான உயிரி பட்டியலை (CoL) உருவாக்கியுள்ளது. இது இந்தக் கிரகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பட்டியலிடுகிறது.[8] உயிரி பட்டியலானது உயிரி கலைக்களஞ்சியத்திற்கு (EoL) வகைப்பாட்டியல் தகவலை வழங்குகிறது. ஊர்வன தரவுத்தளம் கடல் உயிரினங்களின் உலகப் பதிவேட்டுடன் (WoRMS), குடிமக்கள் அறிவியல் திட்டமான ஐநேட்டுரலிசுடன் ஒத்துழைத்துச் செயல்படுகிறது.[9] மேலும் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய உயிர்தொழில்நுட்பவியல் தகவல் மைய வகைப்பாட்டியல் தரவுத்தளத்துடன் ஊர்வன தரவுத்தளம் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Uetz, Peter; Stylianou, Alexandrea (2018). "The original descriptions of reptiles and their subspecies". Zootaxa 4375 (2): 257–264. doi:10.11646/zootaxa.4375.2.5. பப்மெட்:29689772. http://www.mapress.com/j/zt/article/viewFile/zootaxa.4375.2.5/13578. 
  2. Uetz, P.; Etzold, T. (1996). "The EMBL/EBI Reptile Database". Herpetological Review 27 (4): 174–175. 
  3. Uetz, P.; J. Goll; J. Hallermann (2007). "Die TIGR-Reptiliendatenbank". Elaphe 15 (3): 22–25. 
  4. Abraham, S.A. (Jan 9, 2015). "VCU professor manages comprehensive database to map reptilian lineage". Across the Spectrum. Virginia Commonwealth University.
  5. Uetz, Peter (16 June 2021). "A Quarter Century of Reptile and Amphibian Databases.". Herpetological Review 52: 246–255. https://www.researchgate.net/publication/352462027. 
  6. Uetz, P. (2010). "The original descriptions of reptiles". Zootaxa 2334 (1): 59–68. doi:10.11646/zootaxa.2334.1.3. http://mapress.com/zootaxa/2010/f/zt02334p068.pdf. 
  7. Uetz, Peter; Cherikh, Sami; Shea, Glenn; Ineich, Ivan; Campbell, Patrick D.; Doronin, Igor V.; Rosado, José; Wynn, Addison et al. (2019-11-12). "A global catalog of primary reptile type specimens" (in en). Zootaxa 4695 (5): 438–450. doi:10.11646/zootaxa.4695.5.2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. பப்மெட்:31719333. https://www.biotaxa.org/Zootaxa/article/view/zootaxa.4695.5.2. 
  8. Catalogue of Life Source databases பரணிடப்பட்டது 2020-09-17 at the வந்தவழி இயந்திரம், accessed Aug 2015
  9. "iNaturalist". Inaturalist.org. பார்க்கப்பட்ட நாள் 9 June 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்வன_தரவுத்தளம்&oldid=3707750" இலிருந்து மீள்விக்கப்பட்டது