ஊர் நகரத்தின் வில் யாழ்கள்

ஊர் நகரத்தின் வில் யாழ்கள் (Lyres of Ur or Harps of Ur) நான்கு கம்பி இசைக்கருவிகளான வில் யாழ்களின் தொகுதியாகும். இந்த வில் யாழ்கள் தற்கால ஈராக் நாட்டின் தென் பகுதியில் உள்ள மெசொப்பொத்தேமியாவின் ஊர் நகரத்தின் அரச குடும்பத்தினர் கல்லறையை அகழாய்வு செய்த போது கண்டெடுக்கப்பட்டது. இவைகள் மெசொப்பொத்தேமியாவின் மூன்றாம் வம்சத்தின், கிமு 2550 - கிமு 2450க்கும் இடைப்பட்ட பழமையான தொல்பொருள் ஆகும். இதுவே உலகின் தொன்மையான தற்போது வரை இருக்கும் கம்பி இசைக்கருவியான வில் யாழ்கள் ஆகும்.[1]இவைகள் தற்போது இராக் மற்றும் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [2] வில் யாழ்களின் மரச்சட்டங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.[3]

மெசொப்பொத்தேமியாவின் ஊர் நகரத்தின் அரச குடும்பத்தினர் கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்திலான வில் யாழ், ஈராக் அருங்காட்சியகம்
கீழ் மெசொப்பொத்தேமியாவின் ஊர் நகரத்தின் அரசவை கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட இராணியின் வெள்ளியிலான வில் யாழ், பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
மெசொப்பொத்தேமியாவின் ஊர் நகரத்தின் வில் யாழ்

இதனை 1929ல் பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர் லியோனார்டு வுல்லி என்பவர் ஈராக் நாட்டின் ஊர் நகரத்தின் அகழாய்வில் கண்டுபிடித்தார்.[4][5] இந்த வில் யாழ்கள் 4,500 ஆண்டுகள் பழமையானவை.[2] [6][7]

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Michael Chanan (1994). Musica Practica: The Social Practice of Western Music from Gregorian Chant to Postmodernism. Verso. பக். 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85984-005-4. https://archive.org/details/musicapracticaso0000chan. 
  2. 2.0 2.1 "Queen's Lyre". British Museum. பார்க்கப்பட்ட நாள் 2017-03-22.
  3. Lawergren, Bo (November 2005). "Two Lyres from Ur". Bulletin of the American Schools of Oriental Research. doi:10.1086/BASOR25066917. http://research.kcai.edu:2177/ehost/pdfviewer/pdfviewer?vid=3&sid=cc8d79f2-3153-47c1-b193-2539601d320f%40sessionmgr115&hid=125. பார்த்த நாள்: 21 October 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. University of Liverpool(28 July 2005). "Ancient Iraqi harp reproduced by Liverpool engineers". செய்திக் குறிப்பு.  “A team of engineers at the University of Liverpool has helped reproduce an ancient Iraqi harp - the Lyre of Ur”
  5. Taylor, Bill. "Golden Lyre of Ur". Archived from the original on 2011-06-11.
  6. "Lyre with bearded bull's head and inlaid panel". With Art Philadelphia. பார்க்கப்பட்ட நாள் 2015-09-26.
  7. Aruz, J.; Wallenfels (2003). Art of the First Cities: The third millennium B.C. from the Mediterranean to the Indus. New York, NY: The Metropolitan Museum of Art.