எகான்
அலியாயுன் தமலா பதார ஏகான் தியம் (Aliaune Damala Badara Akon Thiam (/ˈeɪkɒn/;; பிறப்பு ஏப்ரல் 16, 1973), ஏகான் என்று பரவலாக அறியப்படும் இவர், செனிகல்-அமெரிக்கப் பாடகர், இசைப்பதிவுத் தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். 2004 ஆம் ஆண்டில் இவரது முதல் பாடல் தொகுதியான ட்ரபிள் (2004) இன் முதல் தனிப்பாடலான " லாக்ட் அப் " வெளியானதைத் தொடர்ந்து பரவலாக அறியப்பட்டார்,இதைத் தொடர்ந்து இரண்டாவது தனிப்பாடலான " லோன்லி" வெளியானது.
ஏகான் | |
---|---|
2019இல் ஏகான் | |
பிறப்பு | அலியாயுன் தமலா பதார ஏகான் தியம் ஏப்ரல் 16, 1973 செயின்ட் லூயிஸ் (மிசோரி), மிசூரி, U.S. |
மற்ற பெயர்கள் |
|
குடியுரிமை |
|
கல்வி |
|
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1996–தற்போது வரை |
அமைப்பு(கள்) | ஏகான் லைட்டிங் ஆப்பிரிக்கா |
முகவர் | ஜானி ரைட் |
பிள்ளைகள் | 6 |
இசை வாழ்க்கை | |
பிறப்பிடம் | நுவார்க், U.S. |
இசை வடிவங்கள் |
|
வெளியீட்டு நிறுவனங்கள் |
|
இணையதளம் | akon |
இரண்டாவது பாடல் தொகுதியான, கான்விக்டெட் (2006), சிறந்த சமகால சொல்லிசை பாடல் தொகுதிக்கான மூன்று கிராமி விருதுக்கான பரிந்துரைகளைப் பெற்றது, மேலும் " ஸ்மாக் தட் " ( எமினெம் இடம்பெற்றது) மற்றும் " ஐ வான்னா லவ் யூ " ( ஸ்னூப் டோக் இடம்பெற்றது) ஆகியன சிறந்த சொல்லிசை பாடலுக்கான பரிந்துரையினைப் பெற்றது.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஅலியாயுன் தமலா பதார ஏகான் தியம் ஏப்ரல் 16, 1973இல் செயின்ட் லூயிஸ், மிசோரியில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். [1] [2] [3] இவரது தாயார் நடனக் கலைஞர் கைன் குயே தியாம் ( நீ குயே), மற்றும் இவரது தந்தை தாள வாத்தியக்காரர் மோர் தியாம் ஆவர்.[4][5] மோர் தியாம் செனகலின் கயோலாக்கில் உள்ள குர்ஆனிய அறிஞர்களின் ஒரு டூகோலூர் குடும்பத்தில் பிறந்தார். [6] [7] ஏகான் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை செனகலில் கழித்தார், அதை அவர் தனது "சொந்த ஊர்" என்று விவரித்தார். மேளம், கிதார் மற்றும் டிஜெம்பே உட்பட ஐந்து கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். [8] ஏழு வயதில், அவரும் அவரது குடும்பத்தினரும் யூனியன் நகரம், நியூ ஜெர்சிக்கு இடம்பெயர்ந்தனர்[9] [10] நியூ ஜெர்சியில் வளர்ந்ததால், மற்ற குழந்தைகளுடன் பழகுவதில் ஏகான் சிரமப்பட்டார். ஏகானும் அவரது மூத்த சகோதரரும் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்கச் சென்ற போது, இவரது பெற்றோர் அவர்களை ஜெர்சி நகரத்தில் விட்டுவிட்டு மற்றவர்களுடன்ஜோர்ஜியாவின் அட்லாண்டாவுக்கு குடியேறினர்.[11] ஜெர்சி நகரில் உள்ள வில்லியம் எல். டிக்கின்சன் உயர்நிலைப் பள்ளியில் ஏகான் பயின்றார்.[12]
இசை வாழ்க்கை
தொகு2003-2005
தொகுஅப்ஃப்ரண்ட் மெகாடெயின்மென்ட்டின் தலைவரான டெவின் ஸ்டீபன்ஸ், சொல்லிசைப் பாடகர் லில் ஜேன் ஏகானை, ஸ்டீபன்ஸின் ஒத்திகை மண்டபத்திற்கு அழைத்துச் சென்றபோது ஏகானைப் பற்றி முதன்முதலில் கேள்விப்பட்டார், அந்த நேரத்தில் அஷர் மற்றும் டிஎல்சி போன்ற திறமையாளர்கள் வளர்ச்சி கண்டிருந்தனர். இறுதியில்,ஸ்டீபன்ஸ் ஏகானை தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்து தொழில் ரீதியாக அவரை சீர்படுத்தத் தொடங்கினார். [13]
2006-2008 கான்விக்டெடு
தொகுஇன்டர்ஸ்கோப் ரெக்கார்ட்ஸின் கீழ் கான்லைவ் எனும் புதிய இலச்சினையின் கீழ் விநியோகத்தைத் தொடங்கினார். அவரது இரண்டாவது பாடல் தொகுதியான கான்விக்டெடு நவம்பர் 2006 இல் வெளியிடப்பட்டது மற்றும் பில்போர்டு 200 இல் இரண்டாவது இடம் இடித்தது, முதல் வாரத்தில் 286,000 பிரதிகள் விற்பனையானது. ஆறு வாரங்களுக்குப் பிறகு, கான்விக்டெடு அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் விறபனையானது, இந்த பாடல் தொகுதி ஏழு வாரங்களுக்குப் பிறகு பிளாட்டினம் சான்றிதழ் பெற்றது, மேலும் பதினாறு வாரங்களுக்குப் பிறகு அது இரட்டை பிளாட்டினம் சான்றிதழ் பெற்றது. இது பில்போர்டு 200 இன் முதல் இருபது இடங்களில் தொடர்ந்து 28 வாரங்கள் இருந்தது மற்றும் நான்கு முறை இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
ஒப்புரவு
தொகுஏகான் 2014 இல் ஏகான் லைட்டிங் ஆப்பிரிக்கா என்ற திட்டத்தைத் தொடங்கினார், இது ஆப்பிரிக்காவின் 15 நாடுகளில் மின்சாரம் வழங்குகிறது. [14] [15] [16]
கான்ஃபிடென்ஸ் அறக்கட்டளை என்ற பெயரில் ஆப்பிரிக்காவில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக தனது சொந்த தொண்டு நிறுவனத்தையும் தொடங்கினார்.
பிட்புல்லின் "ஐ பிலீவ் தட் வி வில் வின் " அதிகாரப்பூர்வ இசை நிகழ்படத்தில் விருந்தினராக ஏகான் சேர்க்கப்பட்டார், இந்தப் பாடலின் விற்பனை, ஒளிபரப்பு மற்றும் காட்சிகள் மூலம் கிடைக்கும் வருமானம் ஃபீடிங் அமெரிக்கா மற்றும் அந்தோனி ராபின்ஸ் அறக்கட்டளைக்கு கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணமாக வழங்கப்படுகிறது. [17]
சான்றுகள்
தொகு- ↑ "Akon – Music Producer, Songwriter, Singer". Biography.com. Archived from the original on August 21, 2016. பார்க்கப்பட்ட நாள் August 30, 2016.
- ↑ "Muslim celebrities". cbsnews.com. CBS News. Archived from the original on January 10, 2019. பார்க்கப்பட்ட நாள் January 10, 2019.
- ↑ "12 Black Celebrities Whose Real Names Will Surprise You". atlantablackstar.com. May 9, 2014. Archived from the original on March 26, 2019. பார்க்கப்பட்ட நாள் March 26, 2019.
- ↑ Goldsmith, Melissa Ursula Dawn; Fonseca, Anthony J.; Hip Hop around the World: An Encyclopedia [2 volumes], ABC-CLIO (2018), p. 300, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313357596. Retrieved March 14, 2020.
- ↑ Pajon, Léo (July 3, 2018). "Dix choses à savoir sur Akon, artiste multi-casquette" (in fr). Jeune Afrique. https://www.jeuneafrique.com/mag/586428/culture/dix-choses-a-savoir-sur-akon-senegal-usa-chanteur/.
- ↑ Goldsmith, Melissa Ursula Dawn; Fonseca, Anthony J.; Hip Hop around the World: An Encyclopedia [2 volumes], ABC-CLIO (2018), p. 300, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313357596. Retrieved March 14, 2020.
- ↑ .
- ↑ Bottomley, C. (May 2, 2005). "Akon: Trouble No More". VH1.com. Archived from the original on October 20, 2011.
- ↑ "Deep Grooves". Billboard. November 4, 2006. p. 36. Archived from the original on January 16, 2016. பார்க்கப்பட்ட நாள் November 3, 2011 – via Google Books.
- ↑ Kuperinksy, Amy (January 15, 2020). "Akon went from Union City to building his own city, Akon City, in Senegal". NJ.com. Archived from the original on January 16, 2020. பார்க்கப்பட்ட நாள் September 1, 2020.
- ↑ Jones, Steve (October 4, 2004). "Akon, not 'Trouble,' is his middle name". USA Today இம் மூலத்தில் இருந்து May 11, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070511060455/http://www.usatoday.com/life/music/news/2004-10-04-otv-akon_x.htm. "Akon (real name: Allaune Thiam) is the son of acclaimed Senegalese percussionist Mor Thiam, who came to the USA to tour with dancers Katherine Dunham and Alvin Ailey. Growing up, Akon had a hard time getting along with kids in New Jersey. When he and his older brother reached high school, his parents left them on their own in Jersey City and moved the family to Atlanta"
- ↑ Lin, Jonathan (November 17, 2013). "Akon stops by his Jersey City home away from home". The Jersey Journal. Archived from the original on July 1, 2019. பார்க்கப்பட்ட நாள் July 1, 2019 – via NJ.com.
Akon said Costa helped keep him out of trouble during his rougher days in Jersey City, when he attended Dickinson High School on Palisade Avenue.
- ↑ "Interview With Knobody". HitQuarters. September 27, 2005. Archived from the original on February 17, 2012. பார்க்கப்பட்ட நாள் July 1, 2010.
- ↑ Insight, News (June 2, 2015). "Akon unveils new solar campaign for Africa". Archived from the original on July 5, 2015.
{{cite web}}
:|first=
has generic name (help) - ↑ "Akon lights Africa for better future". enca. Archived from the original on August 25, 2017. பார்க்கப்பட்ட நாள் July 3, 2015.
- ↑ "Musician Akon works to light up Africa". CNN. Archived from the original on February 6, 2018. பார்க்கப்பட்ட நாள் July 3, 2015.
- ↑ "Pitbull - I Believe That We Will Win". YouTube. Archived from the original on 2020-05-08. பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)