எக்சோன் மோபில் கோபுரம்

கோலாலம்பூர் மாநகர மையத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டிடம்

எக்சோன் மோபில் கோபுரம் (மலாய்; Menara ExxonMobil; ஆங்கிலம்: ExxonMobil Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும். முன்பு மெனாரா எஸ்ஸோ (Menara Esso) என்று அழைக்கப்பட்டது.[2]

எக்சோன் மோபில் கோபுரம்
ExxonMobil Tower
எக்சோன் மோபில் கோபுரம்
Map
முந்திய பெயர்கள்Menara Esso
பொதுவான தகவல்கள்
வகைவணிக அலுவலகங்கள்
இடம்கோலாலம்பூர் மாநகர மையம், மலேசியா
ஆள்கூற்று3°09′15″N 101°42′57″E / 3.1541°N 101.7157°E / 3.1541; 101.7157
நிறைவுற்றது1997
உரிமையாளர்கேஎல்சிசி புராப்பர்டீஸ்
(KLCC Properties)
மேலாண்மைகேஎல்சிசி புராப்பர்டீஸ்
(KLCC Properties)
உயரம்
கூரை126 m (413 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை30
தளப்பரப்பு21,168 sq ft (1,966.6 m2)
உயர்த்திகள்16
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கும்புலான் செனி ரேக்கா
(Kumpulan Senireka Sdn Bhd)
மேற்கோள்கள்
[1]

இந்தக் கட்டிடம் தற்போது மலேசிய எக்சோன் மோபில் (ExxonMobil Malaysia) நிறுவனத்தின் தலைமையகமாக உள்ளது.

பொது

தொகு

இந்த எக்சோன் மோபில் கோபுரம்தான், கோலாலம்பூர் மாநகர மையத்தில் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டிடமாகும்.[3]

இந்தக் கோபுரத்தை கட்டிய பிறகுதான், கேஎல்சிசி பூங்கா, சூரியா கேஎல்சிசி, மெக்சிஸ் கோபுரம், பெட்ரோனாஸ் கோபுரங்கள் கட்டப்பட்டன.[4]

30-அடுக்கு மாடிகளைக் கொண்ட எக்சோன் மோபில் கோபுரம், செவ்வக வடிவத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதன் உயரம் 126 மீ (413 அடி).

அமைவு

தொகு

எக்சோன் மோபில் கோபுரத்தின் சுற்றுப்புறங்கள் மென்மையான இயற்கைத் தன்மையைப் பிரதிபலிகின்றன.

இங்கிருந்து கேஎல்சிசி பூங்காவிற்குச் செல்லும் நடைபாதையின் இரு மருங்கிலும் அழகிய மரங்கள் வரிசை வரிசையாக நடப்பட்டு உள்ளன.

காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Emporis building ID 105886". Emporis. Archived from the original on March 3, 2016.
  2. "Menara ExxonMobil - The Skyscraper Center". www.skyscrapercenter.com. பார்க்கப்பட்ட நாள் 12 November 2024.
  3. "Menara Exxon Mobil @ KLCC | CorporateOffice.my". www.corporateoffice.my. பார்க்கப்பட்ட நாள் 12 November 2024.
  4. "🌎 Malaysia "ExxonMobil - It is the first building to be completed in the Kuala Lumpur City Centre development before KLCC Park, Suria KLCC, Maxis Tower and Petronas Twin Towers". www.vtourmap.com. பார்க்கப்பட்ட நாள் 12 November 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சோன்_மோபில்_கோபுரம்&oldid=4140950" இலிருந்து மீள்விக்கப்பட்டது