எச்சைலன்
எப்சைலன் (Epsilon, கிரேக்கம்: έψιλον) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் ஐந்தாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது ஐந்து என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான ஈயிலிருந்தே () எச்சைலன் பெறப்பட்டது. எச்சைலனிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்து E, சிரில்லிய எழுத்து E என்பனவாகும். பேரெழுத்து எச்சைலன் இலத்தீன் Eஐ ஒத்ததாகக் காணப்படுகின்றது.
கிரேக்க நெடுங்கணக்கு | |||
---|---|---|---|
Αα | அல்ஃபா | Νν | நியூ |
Ββ | பீற்றா | Ξξ | இக்சய் |
Γγ | காமா | Οο | ஒமிக்ரோன் |
Δδ | தெலுத்தா | Ππ | பை |
Εε | எச்சைலன் | Ρρ | உரோ |
Ζζ | சீற்றா | Σσς | சிகுமா |
Ηη | ஈற்றா | Ττ | உட்டோ |
Θθ | தீற்றா | Υυ | உப்சிலோன் |
Ιι | அயோற்றா | Φφ | வை |
Κκ | காப்பா | Χχ | கை |
Λλ | இலமிடா | Ψψ | இப்சை |
Μμ | மியூ | Ωω | ஒமேகா |
அநாதையாய் | |||
Ϝϝ | டிகாமா | Ϟϟ | கோப்பா |
Ϛϛ | சிடீகுமா | Ϡϡ | சாம்பை |
Ͱͱ | ஹஈற்றா | Ϸϸ | உஷோ |
Ϻϻ | சான் |
வரலாறு
தொகுபினீசிய எழுத்தான ஈயிலிருந்தே எச்சைலன் பெறப்பட்டது. பண்டைய கிரேக்க எழுத்து முறையில் எச்சைலனும் ஈயும் ஒரே மாதிரியாகவே காணப்பட்டன. ஆனால், தற்போது ஈயின் கண்ணாடி விம்பத்தை ஒத்ததாகவே எச்சைலன் எழுதப்படுகின்றது.
பயன்பாடுகள்
தொகுபேரெழுத்து எச்சைலன் இலத்தீன் Eஐ ஒத்திருப்பதால் கிரேக்க மொழியைத் தவிர ஏனைய இடங்களில் பெரிதாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
கணிதம்
தொகுகணிதத்தில் உலகத்தொடையைக் குறிப்பதற்குச் சிற்றெழுத்து எச்சைலன் பயன்படுத்தப்படுகின்றது.[3] தொடையில் மூலகம், மூலகமன்று என்பனவற்றைக் காட்டுவதிலும் எச்சைலனின் மாறுபட்ட வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.[4]
வானியல்
தொகுஉடுக்கூட்டமொன்றில் ஐந்தாவது துலக்கமான உடுவைக் குறிப்பதற்கு எச்சைலன் பயன்படுத்தப்படுகின்றது.
ஒருங்குறி
தொகுஒருங்குறி | மாதிரி | விளக்கம் |
---|---|---|
U+0395 | Ε | கிரேக்கப் பேரெழுத்து எச்சைலன் |
U+03B5 | ε | கிரேக்கச் சிற்றெழுத்து எச்சைலன் |
U+0045 | E | இலத்தீன் பேரெழுத்து ஈ |
U+0065 | e | இலத்தீன் சிற்றெழுத்து ஈ |
U+2208 | ∈ | மூலகம் |
U+2209 | ∉ | மூலகமன்று |
மேற்கோள்கள்
தொகு- ↑ கிரேக்க நெடுங்கணக்கு (ஆங்கில மொழியில்)
- ↑ கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ தொடைகள்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ["தொடைகள் (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2012-06-17. பார்க்கப்பட்ட நாள் 2012-04-25. தொடைகள் (ஆங்கில மொழியில்)]