எடுவார்ட் மனே

எடுவார்ட் மனே (Édouard Manet, ஜனவரி 23,1832 - ஏப்ரல் 30, 1883) பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஓர் ஓவியர். 19ஆம் நூற்றாண்டில் நவீன வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்களை வரைந்த ஓவியர்களில் இவரும் ஒருவர். மேற்கத்திய ஓவியப் பாணி யதார்த்தவாதம்/இயல்பித்திலிருந்து உணர்வுப்பதிவுவாதம் பாணிக்கு மாறக் காரணமானவர். இவர் தொடக்க காலத்தில் வரைந்த சிறந்த ஓவியங்கள் “தி லஞ்சியன் ஆன் தி கிராஸ் (Le déjeuner sur l'herbe) மற்றும் ஒலிம்பியா (Olympia) ஆகும். இவரது ஓவியங்கள் பெரும் சர்ச்சைக்குரியனவாக அப்போது இருந்தாலும், இளம் ஓவியர்கள் இவரது “இம்பரஷனிஸம்“ போல வரையத் தொடங்கினர். இன்றைக்கு இது வாட்ஷெட் ஓவியங்கள் எனப்படுகின்றன. இதுவே, “மாடர்ன் ஆர்ட்“ எனப்படும் நவீன ஓவியத்திற்கு வித்திட்டது.

எடுவார்ட் மனே
எடுவார்ட் மனே (வரைந்தவர்: நாடர், 1874)
பிறப்புஎடுவார்ட் மனே
தேசியம்பிரஞெசுக் காரர்
அறியப்படுவதுஓவியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Le déjeuner sur l'herbe, 1863

Olympia, 1863
Le Bar aux Folies-Bergère, 1882

Le Fifre, 1866
அரசியல் இயக்கம்உணர்வுப்பதிவுவாதம், யதார்த்தவாதம்

வாழ்க்கை வரலாறு

தொகு

மனே அரசியலுக்கு மிகவும் நெருக்கமான ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். எனினும், வேறெந்த துறையிலும் அவருக்கு நாட்டமில்லை. ஒரு தலைசிறந்த ஓவியராக வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. அவரின் வாழ்நாளின் கடைசி 20 ஆண்டுகளில் வரைந்த ஓவியங்கள், அவர் எவ்வாறு பிற மாபெரும் ஓவியர்களின் பாணியிலிருந்து வேறுபட்டு தனக்கென்று ஒரு புதுமையான தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டார் என்பதைக் காட்டுகின்றன. இதனால், பிற்பாடு தோன்றிய ஓவியர்களின் ஓவியங்களில் இவரது தாக்கம் இருந்தது.

இளமைப் பருவம்

தொகு

எடுவார்ட் மனே 21.1.1832ஆம் நாள் பாரீசில் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்ற ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாயார் யுஜேனி-டெஸிரே ஃபுர்னியர் ஸ்வீடன் நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷார்லஸ் பெர்னாதோத் என்பவரின் மகள் ஆவார். அவரது தந்தையார் அகஸ்த் மனே ஒரு பிரஞ்சு நீதிபதி. ஆகவே, அவர் தம் மகன் எடுவார்ட் மனே சட்டத் துறையில் பணிபுரிய வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவரது மாமன் ஷார்லஸ் ஃபுர்னியர் அவர் ஓவியம் பயிலுவதற்கு ஊக்கம் அளித்தார். அவர் அவரை லூவ்ருக்கு (Louvre) அழைத்துச் செல்வார். 1841ஆம் ஆண்டு அவரை காலேஸ் ரோலின் இடைநிலைப் பள்ளியில் சேர்த்தனர். 1845ஆம் ஆண்டு அவரது மாமனின் யோசனையின்படி ஒரு ஓவிய சிறப்பு வகுப்பில் சேர்ந்தார். அவ்விடத்தில்தான், தமது நீண்டகால வாழ்நாள் நண்பரும், பிற்காலத்தில் நுண்கலை அமைச்சராகவும் இருந்த அந்தோனின் புரூஸ்த்தை சந்தித்தார்.

1848ஆம் ஆண்டு அவர்தம் தந்தையின் யோசனைப்படி, அவர் பயிற்சிக் கப்பலில் ரியோ டி ஜெனய்ரோ சென்றார். அவர் கடற்படையில் சேருவதற்கான தேர்வில் இரண்டு முறை தோல்வியுற்றார். எனவே, அவரது தந்தையார் எடுவார்ட் மனேவின் விருப்பப்படி ஓவியக் கல்வி கற்க விட்டுவிட்டார். 1850-56 வரை தாமஸ் கூதூய்ர் என்ற ஓவிய ஆசிரியரிடம் ஓவியம் கற்றார். ஓய்வுநேரத்தில் லூவ்ருவில் உள்ள முன்னாள் ஓவிய ஆசிரியர்களின் ஓவியத்தைப் பார்த்து வரைந்தார்.

1853-56 வரை செருமனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, டச்சு ஓவியரான பிரான்ஸ் ஹால்ஸ், ஸ்பானிய ஓவியர்களான திகோ வேலாஸ்குயிஸ், பிரான்ஸிஸ்கோ ஜோஸி டி கோயா ஆகியோரின் ஓவியங்களை உன்னிப்பாக கவனித்து வந்தார்.

1856-இல் மனே தமது சொந்த ஓவியக் கூடத்தைத் தொடங்கினார். இக்காலகட்டத்தில், தளர்ச்சியான தூரிகையைக் கொண்டு எளிய நடையில் ஓவியங்களைத் தீட்டினார். குஸ்தாவ் குர்பெத் என்ற ஓவியரின் அப்போதைய யதார்த்தப் பாணி ஓவியத்தை மனே பின்பற்றினார். அவர் The Absinthe Drinker (1858–59) என்ற ஓவியத்தை தீட்டினார். அத்துடன் பிச்சைக்காரர்கள், பாடகர்கள், நாடோடிகள், உணவுவிடுதியில் மக்கள், காளைமாட்டுச் சண்டை போன்ற ஓவியங்களையும் அவர் தீட்டினார். அவர்தம் தொடக்க காலத்தில், மதம், புராணம், வரலாறு சம்பந்தப்பட்ட ஓவியங்களை அவ்வளவாக தீட்டவில்லை எனலாம். உதாரணம், தற்போது சிகாகோ, ஆர்ட் இன்ஸ்டிடியுட்டில் உள்ள கிறிஸ்ட் மாக்ட் என்ற ஓவியம், நியுயார்க், மெட்ரோபாலிடன் மியுசியம் ஆஃப் ஆர்ட்டில் உள்ள கிறிஸ்ட் வித் ஏஞ்சல்ஸ் ஆகியவற்றை மட்டும் உதாரணமாகச் சொல்லலாம்.

மியூசிக் இன் தி டுய்லெரிஸ்

தொகு

மனேவின் தொடக்ககால ஓவிய பாணிக்கு மியூசிக் இன் தி டுய்லெரிஸ் ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. ஹால்ஸ், வேலேஸ்குய்ஸ் ஆகியோரின் தாக்கத்தை இதில் காணலாம். வாழ்நாள் பூராவும் அவருக்கு ஓய்வு என்ற தலைப்பில் ஆர்வம் இருந்தது என்பதற்கு இந்த ஓவியம் ஓர் எடுத்துக்காட்டு.

இந்த ஓவியம் முற்றிலுமாக முடிக்கப்படவில்லை என்று சிலர் கருதுகிறார்கள். என்றபோதிலும், அந்த காலத்தில் டுய்லெரிஸ் தோட்டம் எவ்வாறு இருந்தது என்பதையும், இசையும் உரையாடலும் எவ்வாறு இருந்தன என்பதையும் எவர் ஒருவரும் கற்பனை செய்து பார்க்கவியலும்.

இதில் மனே தமது நண்பர்கள், ஓவியர்கள், எழுதியவர்கள், கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோரையும் தமது உருவத்தையும் வடித்துள்ளார்.

தி லஞ்சியன் ஆன் தி கிராஸ்

தொகு

இவரது தொடக்க காலத்திய பெரும் படைப்பு தி இலஞ்சியன் ஆன் தி கிராஸ் ஆகும். 1863ல் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இதை காட்சிக்கு வைக்க பாரீஸ் ஸலோன் மறுத்துவிட்டது. அதே ஆண்டின் பிற்பகுதியில், இவ்வோவியத்தை ஸலோன் டி ரெபியுஸேவில் மனே காட்சிக்கு வைத்தார். 1863ல் மொத்தம் 4000 ஓவியங்களை காட்சிக்கு வைக்க பாரீஸ் ஸலோன் மறுத்துவிட்டது. ஆகவே, அவ்வாறு மறுக்கப்பட்ட ஓவியங்களைக் காட்சிக்கு வைக்க பேரரசர் மூன்றாம் நெப்போலியன் ஸலோன் டி ரெபியுஸேவைத் தொடங்கி வைத்தார்.

ஒன்றிணைந்த நிலையில் ஆடையுடன் இரண்டு ஆண்களையும் நிர்வாண நிலையில் ஒரு பெண்ணையும் அவர் வரைந்தது சர்ச்சைக்கு உள்ளானது. இவருக்கு முந்தைய இத்தாலி ஓவியர் ஜியோர்ஜயோன் அல்லது டைட்டியன் வரைந்த பாஸ்ட்ரல் கான்செர்ட் (1510), தி டெம்பஸ்ட் ஆகியவற்றை ஒத்திருந்தது.

ஒலிம்பியா

தொகு
 
ஒலிம்பியா, 1863

மனே தமது லஞ்சியன் ஆன் தி கிராஸ் ஓவியத்தை அடுத்து இன்னொரு நிர்வாண நிலையில் படுத்திருக்கும் ஒரு பெண்ணின் உருவத்தை ஒலிம்பியா (1863) வரைந்தார். இந்நிலையானது டைட்டியனின் ஓவியமான வீனஸ் ஆஃப் அர்பினோவை (1538) ஒத்திருந்தது. மேலும், பிரான்ஸிஸ் கோயாவின் தி நியுட் மஜா (1800) போலவும் இருந்தது.

சமூக நிகழ்வுகளின் ஓவியங்கள்

தொகு
 
ரேஸ் ஆப் லாங்க்கேம்ப், 1864.

மனெட் மேல்தட்டு மக்களின் பொழுதுபோக்கு ந்டவடிக்கைகளை காட்டும் ஓவியங்களையும் வரைந்திருந்தார்.

மாஸ்க்டு பால் அட் ஓபரா மனெட் என்ற ஓவியத்தில் ஒரு விருந்தை மக்கள் உற்சாக கொண்டடுவதை காட்டுகிறது.முகமூடிகள் அணிந்த பெண்களயும் அவ்ர்களுடன் பேசும் ஆண்கள் நீண்ட தொப்பிகள் மற்றும் கருப்பு அங்கியை அணிந்த வண்ணம் வரைந்திருந்தார்.

ரேஸ் ஆப் லாங்க்கேம்ப் என்ற ஓவியத்தில் ஓட்டப்பந்தயங்களில் முன்னோக்கி சீற்றத்துடன் வரும் குதிரைகளை வரைந்திருந்தார்.

ஸ்கேட்டிங் என்ற ஓவியத்தில் நன்றாக உடையணிந்த ஒரு பெண் தரையில் நிற்பது போலவும் மற்றவர்கள் அவளின் பின்னால் உள்ள பனி தரையில் சறுக்கி விளையாடுவது போலவும் அமைக்கப்பட்டிருந்தது.

வியூ ஆஃப் இன்டர்நேஷ்னல் எக்ஸ்பிசன் என்ற ஓவியத்தில் ஒரு சர்வதேச கண்காட்சியில் பல வீரர்கள் ஓய்வெடுப்பது,ஜோடிகளுக்கு பேசுவது, குதிரையின் மீது உள்ள ஒரு பெண்,தோட்டக்காரர்,சிறுவன் மற்றும் ஒரு நாய் என நகரில் வசிக்கும் பல்வேறு தரப்பு மக்களையும் ஒரே ஓவியத்தில் கொண்டு வந்திருந்தார்.

மனேயின் ஓவியங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேலதிக வாசிப்புக்கு

தொகு

Short introductory works:

Longer works:

"https://ta.wikipedia.org/w/index.php?title=எடுவார்ட்_மனே&oldid=3593760" இலிருந்து மீள்விக்கப்பட்டது