எட்ரோபிளசு

எட்ரோபிளசு
எட்ரோபிளசு சுராடென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிச்சிலிடே
பேரினம்:
எட்ரோபிளசு

குவெயிர், 1830
மாதிரி இனம்
எட்ரோபிளசு மெலாகிரிசு
குவெயிர், 1830

எட்ரோபிளசு (Etroplus) என்பது சிச்சிலிட் மீன் பேரினம் ஆகும். இவை இந்தியாவின் தென்பகுதி மற்றும் இலங்கையினைச் சார்ந்தது. சூடெட்ரோபிளசுடன் (இது முன்னர் எட்ரோபிளசுடன் உள்ளடக்கப்பட்டிருந்தது) இப்பகுதியில் மட்டும் காணப்படும் சிச்சிலிட் இவை.[1]

இவற்றின் நெருங்கிய உறவினராக பாரெட்ரோபிளசு மடகாசுகரில் காணப்படுகின்றது. இவை இரண்டும் மீசோசூயிக் காலத்தில் பிரிந்திருக்கலாம். மடகாசுகரும் இந்தியப் புவித்தட்டும் கிரீத்தேசியக் காலத்தின் முடிவில் பிரிந்ததைப் போல, இந்த இரண்டு பரம்பரைகளும் மீசோசோயிக் காலத்தில் பிரிந்திருக்க வேண்டும்.[2]

சிற்றினங்கள்

தொகு

இந்த பேரினத்தில் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. மூன்றாவது சிற்றினமான, ஆரஞ்சு குரோமைடு, 2014-ல்[1] சூடெட்ரோபிளசுடன் இணைக்கப்பட்டது ஆனால் பிசுபேசில் இவை இன்னும் எட்ரோப்ளசில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Pethiyagoda, R., Maduwage, K. & Manamendra-Arachchi, K. (2014): Validation of the South Asian cichlid genus Pseudetroplus Bleeker (Pisces: Cichlidae). Zootaxa, 3838 (5): 595–600.
  2. Sparks, J.S. (2004): Molecular phylogeny and biogeography of the Malagasy and South Asian cichlids (Teleostei: Perciformes: Cichlidae). Molecular Phylogenetics and Evolution, 30 (3): 599–614.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்ரோபிளசு&oldid=3312866" இலிருந்து மீள்விக்கப்பட்டது