எட்வின் அர்னால்டு
சர் எட்வின் அர்னால்டு (Sir Edwin Arnold) (10 சூன் 1832 – 24 மார்ச் 1904) ஆங்கிலக் கவிஞர், ஊடகவியலாளர் மற்றும் இதழாசியர் எனும் பன்முகங்கொண்ட இங்கிலாந்து நாட்டவர் ஆவார். கௌதம புத்தரின் வரலாற்றை ஆசியாவின் ஜோதி எனும் பெயரில் நூல் எழுதியமைக்காக உலக முழுவதும் அறியப்பட்டவர்.[1]
சர் எட்வின் அர்னால்டு | |
---|---|
பிறப்பு | கிரேவ்செண்ட், கெண்ட், இங்கிலாந்து | 10 சூன் 1832
இறப்பு | 24 மார்ச்சு 1904 லண்டன், இங்கிலாந்து | (அகவை 71)
தொழில் | ஊடகவியலாளர், இதழாசிரியர், கவிஞர் |
தேசியம் | இங்கிலாந்து |
கல்வி | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆசியாவின் ஜோதி |
கையொப்பம் | |
வரலாறு
தொகுஇங்கிலாந்து நாட்டு ஆங்கிலேயரான எட்வின் அர்னால்டு, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்தவர். பின்னர் 1856இல் இந்தியாவில் உள்ள புனே சமசுகிருத மொழிக் கல்லூரியின் முதல்வராக ஏழு ஆண்டுகள் பணி புரிந்தார்.
பின்னர் இங்கிலாந்து திரும்பிய எட்வின் அர்னால்டு, 1861இல் த டெயிலி டெலிகிராப் நாளிதழில் ஊடகவியலாளராகச் சேர்ந்து, அந்நாளிதழின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார்.[2] கௌதம புத்தரின் வாழ்க்கை குறித்து இவர் எழுதிய உலகப் பெற்ற படைப்பான ஆசியாவின் ஜோதி அல்லது பெருந்துறவு எனும் கவிதை நூல், இந்தி மற்றும் பிற உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.[3] இவரது ஆசியாவின் ஜோதி நூல் மூலம், மேற்கு உலக மக்கள் புத்தரின் தத்துவங்களை முதன் முதலாக அறிந்து கொள்ள முடிந்தது.
இந்நூலை தேசிக விநாயகம் பிள்ளை, தமிழில் ஆசிய ஜோதி எனும் பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.
பிற படைப்புகள்
தொகு- உலகின் ஜோதி (The Light of the World – 1891)
- இந்தியக் கவிதைகளின் கவிதை (Indian Song of Songs -1875)
- நம்பிக்கையின் முத்துக்கள் (Pearls of the Faith - 1883)
- வானுலக கவிதை (The Song Celestial - 1885)
- சடியுடன் தோட்டத்தில் (With Sadi in the Garden - (1888)
- போத்திபாரின் மனைவி (Potiphar's Wife - 1892)
- ஜப்பானியனின் மனைவி (The Japanese Wife - 1893)
- இந்தியக் கவிதைகள் ("Indian Poetry" - 1904)
மொழிபெயர்ப்பு நூல்கள்
தொகு- பகவத் கீதையை வானுலக கவிதை நூலில் மொழிபெயர்த்துள்ளார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sir Edwin Arnold த நியூயார்க் டைம்ஸ், 25 March 1904
- ↑ Notices of 'The Light of Asia' www.phx-ult-lodge.org.
- ↑ The Oxford Companion to English Literature, 6th Edition. Edited by Margaret Drabble, Oxford University Press, 2000 Pp 42
- ↑ Arnold, Sir Edwin (2005). Bhagavad-Gita : or The song celestial : translated from the Sanskrit text. Stilwell, KS: Digireads.com Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1420926012. Archived from the original on 2016-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-11-11.