எண்கண் ஆதிநாராயண பெருமாள் கோயில்
ஆதிநாராயண பெருமாள் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தின் எண்கண் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.
எண்கண் ஆதிநாராயண பெருமாள் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°48′48″N 79°32′33″E / 10.813271°N 79.542385°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவாரூர் |
அமைவிடம்: | எண்கண் |
சட்டமன்றத் தொகுதி: | திருவாரூர் |
மக்களவைத் தொகுதி: | நாகப்பட்டினம் |
ஏற்றம்: | 38.41 m (126 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | ஆதிநாராயண பெருமாள் |
தாயார்: | ஸ்ரீதேவி, பூதேவி |
குளம்: | உண்டு |
சிறப்புத் திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, கருட பஞ்சமி, இராம நவமி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 38.41 மீட்டர்கள் (126.0 அடி) உயரத்தில் (10°48′48″N 79°32′33″E / 10.813271°N 79.542385°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
சிறப்பு
தொகுமூலஸ்தானத்தில் மூலவர் ஆதிநாராயண பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.[1]
பெருமாளும் கருடனும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அருள்பாலிப்பது இக்கோயிலின் இன்னொரு சிறப்பாகும்.[2]
முக்கியத்துவம்
தொகுமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கோயிலில் வழிபட்டு பரிகாரம் செய்து கொள்ளும் தலமாக விளங்குகிறது.[3]
புராண முக்கியத்துவம்
தொகுமுற்காலத்தில் வன்னி மரங்கள் நிறைந்த பகுதியில் பிருகு முனிவர் தவம் இயற்றினார். ஆழ்ந்த தவத்தில் மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்து கொண்டிருந்த அவருக்கு, அச்சமயம் அங்கு சிங்க வேட்டைக்கு வந்த சோழமன்னன் ஒருவனின் படைகள் எழுப்பிய சப்தம் இடையூறு ஏற்படுத்தி தவத்தைக் கலைத்தது. அதனால் கோபமுற்ற பிருகு முனிவர், சோழ மன்னனைச் சபித்து, சிங்க வேட்டைக்கு வந்த அவன் சிங்க முகம் கொண்டு உருமாறச் செய்தார். அதன் பின்னர் மனம் வருந்தி மன்றாடிய சோழனின் வேண்டுகோளை ஏற்று, அதற்குப் பரிகாரமாக விருத்த காவிரி என்ற வெற்றாற்றில் நீராடி, இப்போதைய எண்கண் திருத்தலத்தில் பெருமாளை மனமுருகி வேண்டினால் அவர் அருளால் முன்பு போல் தோற்றமளிக்கலாம் என பிருகு முனிவர் பணித்தார். சோழனும் அவ்வாறே மகாவிஷ்ணுவைத் தியானித்தார். மகாவிஷ்ணு ஆதிநாராயண பெருமாளாக கருட வாகனத்தில் காட்சியருளி, சோழனுக்கு மீண்டும் மனித உருவம் தோன்றச் செய்தார். சோழனின் வேண்டுகோளை ஏற்று, கருட வாகனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் இங்கு கோயில் கொண்டுள்ளார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "எண்கண் ஆதிநாராயணபெருமாள் கோவில்". ௳ (முகப்பு) (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.
- ↑ "Aadhinarayanaperumal Temple : Aadhinarayanaperumal Aadhinarayanaperumal Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.
- ↑ admin (2017-05-30). "Enkan Sri Adi Narayana Perumal Temple - A Must Visit Temple for Mirugaseerisha Starers". Gosthala (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.
- ↑ "Shri Adhi Narayana Perumal Temple: Vishnu on Garuda & Remedies". www.southtourism.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.