எண்ணை (தாவரம்)
எண்ணை | |
---|---|
எண்ணை தாவரம், பேராதனை தாவரவியற் பூங்கா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malvales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. zeylanicus
|
இருசொற் பெயரீடு | |
Dipterocarpus zeylanicus தவைட்டெசு |
எண்ணை (Dipterocarpus zeylanicus) எனப்படுவது இலங்கைக்கு அகணியமான இருசிறகித் தாவரம் ஒன்றாகும். இருசிறகித் தாவரங்கள் சிங்கள மொழியிற் பொதுவாக ஹொர என்று அழைக்கப்படுகின்றன.
தோற்றம்
தொகு40 - 45 மீ உயரம் வரை வளரும் பெரிய மரமான இது 4 - 6 மீ சுற்றளவு வரை தடிக்கக் கூடியது. இதன் பட்டை இளம் செவ்வூதா கலந்த கபில நிறத்தில் அல்லது இளம் மஞ்சள் கலந்த கபில நிறத்திற் காணப்படும். எண்ணை மரப் பட்டையிற் குறிப்பிடத் தக்க அளவு பிசின் காணப்படும். எண்ணை இலைகள் பெரிதாகவும் முட்டை வடிவிலும் 5 முதல் 8 அங்குலம் வரை நீளத்திலும் காணப்படும். எண்ணை இலைகளின் கூரிய நுனிப் பகுதி வெள்ளி நிற மயிர்களால் மூடப்பட்டிருக்கும். சித்திரை மாதத்திற் பூக்கும் எண்ணையின் பழங்கள் காற்றிற் பறந்து செல்லத் தக்க வகையில் இருசிறகுகள் கொண்டிருக்கும். எண்ணை மரங்கள் இலங்கையின் தாழ்நில ஈரவலயப் பகுதிகள் அனைத்திலும், குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களலும் சிங்கராஜ, கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய மழைக்காடுகளிலும் காணப்படும்.
பயன்பாடு
தொகுஎண்ணை மரங்களால் மிக உறுதியான வன்பலகைகள் பெறப்படுகின்றன. இம்மரக் கட்டையின் ஒரு கன அடி 54 இறாத்தல் நிறை கொண்டிருக்கும். இம்மரத்தின் வைரம் இளம் செவ்வூதா நிறத்திலிருந்து கடும் செங்கபில நிறம் வரை வேறுபாடான நிறங்களைக் கொண்டிருக்கும். இதன் கட்டைகளைப் பாதுகாப்பதற்கான செயன்முறைகள் நிகழ்த்தப்பட்ட பின்னர் தொடருந்துப் பாதைக் கட்டைகளாகவும், மின் கம்பங்களிலும், கட்டிடங்களின் உறுதியான பலகைத் தேவைகளுக்காகவும் தச்சுத் தொழிலிலும் பயன்படுத்தப்படுகின்றன. நீரினுட் பயன்படுத்தப்படுவதற்கும் எண்ணைப் பலகை மிகச் சிறந்த தெரிவொன்றாகும்.
காப்பு
தொகுகொழும்பிலிருந்து 50 கிமீ தொலைவில் கொழும்பு-இங்கிரிய முதன்மைப் பாதையில் உள்ள ஹந்தபான்கொட என்னுமிடத்தில் உள்ள காட்டுப் பகுதியில் எண்ணைத் தாவரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. 20 ஹெக்டேயர் பரப்பில் உள்ள அதனை இலங்கை வன பரிபாலனத் திணைக்களம் பாதுகாக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- "சுந்தர சிங்ஹராஜய" - காமினி குமார விதான
- Wood & it uses - இலங்கை வன பரிபாலனத் திணைக்களம் 1962.