எதிரும் புதிரும்
தரணி இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
எதிரும் புதிரும் 1999 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. ரமணி எனும் தனது சொந்தப் பெயரில் தரணி இயக்கிய இப்படத்தில் மம்மூட்டி, சங்கீதா, நெப்போலியன், மனோரமா, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
எதிரும் புதிரும் | |
---|---|
இயக்கம் | தரணி |
தயாரிப்பு | ஜி. எசு. மது |
கதை | ஈ. இராமதாஸ் (உதையாடல்) |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | மம்மூட்டி சங்கீதா நெப்போலியன் நாசர் கவுண்டமணி செந்தில் சிம்ரன் |
ஒளிப்பதிவு | அ. கார்த்திக் ராஜா |
விநியோகம் | மது பிலிம் இன்டர்நேசனல் |
வெளியீடு | 4 மார்ச்சு 1999 |
ஓட்டம் | 165 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- மம்மூட்டி - மாவட்ட ஆட்சியர் கண்ணன்
- சங்கீதா - செல்வி
- நெப்போலியன் - அரசப்பன்
- நாசர் - வீரையன்
- ராதிகா - மருத்துவர் செயந்தி
- கவுண்டமணி
- செந்தில்
- மனோரமா - கண்ணனின் தாயார்
- சிம்ரன் - ("தொட்டுத் தொட்டு" பாடலில் சிறப்புத் தோற்றம்)
- சங்கிலி முருகன்
- மதன் பாப்
- சண்முகசுந்தரம்
- சரண்ராஜ் - தேவராசு
- உதய் பிரகாஷ் - காவல் ஆய்வாளர்
- குமரிமுத்து
தயாரிப்பு தொகு
இத்திரைப்படம் தொடக்கத்தில் மாஸ்டர் என பெயரிடப்பட்டது. தயாரிப்பு தாமதமானதால் படத்தின் வெளியீடும் தாமதமானது. கதாநாயகியாக சௌந்தர்யா நடிப்பதாக இருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு சிம்ரன் நடனமாடியிருந்தார். ஆனால் முன்னதாக ரம்பா நடமாடுவதாக இருந்தது.[1][2]