என்னவோ புடிச்சிருக்கு

எம். மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என்னவோ புடிச்சிருக்கு (Ennavo Pudichirukku) மீனாக்ஷி சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படம். இதில் காதல் கொண்டேன் படத்தில் நடித்த சுதீப் சாரங்கி, அறிமுக நடிகர் பரணி மற்றும் சிந்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கருணாஸ், புவனேஸ்வரி, விட்டல் ராவ், எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் மதன் பாப் போன்றோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ். ஸ்ரீஸ்கந்தராஜாவின் தயாரிப்பிலும், சுபாஷ் ஜவகரின் இசையிலும் இத்திரைப்படம் சனவரி26, 2004இல் வெளிவந்தது.[1][2]

என்னவோ புடிச்சிருக்கு
இயக்கம்மீனாக்ஷி சுந்தரம்
தயாரிப்புஎஸ். ஸ்ரீஸ்கந்தராஜா
கதைமீனாக்ஷி சுந்தரம்
ஜி. பிரகாஷ்(வசனம்)
இசைசுபாஷ் ஜவகர்
நடிப்பு
  • சுதீப் சாரங்கி
  • பரணி
  • சிந்தூரி
ஒளிப்பதிவுசாய்நேத்ரா
படத்தொகுப்புஎம். சாய்கிருஷ்ணன்
கலையகம்எஸ் எஸ் எஸ் குட் லுக் பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 26, 2004 (2004-01-26)
ஓட்டம்100 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தொழிலதிபரான முத்தையாவிற்கு சந்தோஷ் (சுதீப் சாரங்கி) மற்றும் விஷ்வா (பரணி) என இரு மகன்கள். சகோதரர்களாகிய இருவரும் மாறுபட்ட குணங்களையுடையவர்கள். இதில் சந்தோஷ் பெண் பித்தனாகவும், பெண்களை வசீகரிக்க பணம் ஒன்றே போதுமானது என்ற கருத்தை உடையவனாக இருக்கிறான். தனது தந்தையின் நிறுவனத்தில் பொறுப்பாக வேலை செய்யும் விஷ்வா, காதல் தூய்மையானது மற்றும் அழகானது என்று கருதுகிறான்.

விஷ்வா மற்றும் சங்கீதா (சிந்தூரி) ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். சங்கீதா நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள். அவள் தனது சகோதரர் (எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா) மற்றும் பேராசை குணம் கொண்ட அண்ணி சரோஜாவுடன் (புவனேஸ்வரி) வாழ்ந்து வந்தாள். ஒருநாள், சந்தோஷ் சங்கீதாவைக் கண்டு அவளின் அழகில் மயங்கி அவளை அடைய கீழ்த்தரமான செயலைச் செய்கிறான். அதனால் கோபமடைந்த சங்கீதா அவனைப் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து விடுகிறாள். இதற்குமுன் இவ்வாறு அவமானப்படாத சந்தோஷ் சங்கீதாவை திருமணம் செய்துகொண்டு அவளைப் பழி வாங்கப் போவதாக சபதம் செய்கிறான். அதற்காக அவளின் அண்ணி சரோஜாவிடம் அவனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளப் பணம் கொடுக்கிறான்.

பின்னர் சங்கீதாவும் விஷ்வாவும் காதலர்கள் என்கிற விபரம் அவனுக்கு தெரியவருகிறது. ஆனாலும் சங்கீதாவை உரிமையாக்கிக்கொள்ள முயலுகிறான். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் கதையின் முடிவாக அமைகிறது.

நடிப்பு

தொகு
  • சுதீப் சாரங்கி - சந்தோஷ்
  • பரணி - விஷ்வா
  • சிந்தூரி - சங்கீதா
  • கருணாஸ் - பீலா மகன்
  • புவனேஸ்வரி - சரோஜா
  • விட்டல் ராவ் - முத்தையா
  • எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா - சங்கீதாவின் சகோதரர்
  • மதன் பாப்
  • வெள்ளை சுப்பையா - ஐயர்
  • கோவை செந்தில் - குருக்கள்
  • மதுரை செல்வம்
  • செல்லதுரை
  • விஜய் கணேஷ் - தேநீர் விற்பவர்
  • ராதா ராணி - அன்னபூரணி
  • நிந்து - ஐஸ்வர்யா
  • நீபா

தயாரிப்பு

தொகு

"என்னவோ புடிச்சிருக்கு" திரைப்படத்தை தயாரித்தவர் வெளிநாடு வாழ் இந்தியரான எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா. கனடாவிலிருந்து வந்த பரணி இதில் இரண்டாவது கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப் படத்தின் மூலம் சுபாஷ் ஜவகர் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இப் படத்தின் பாடல் காட்சிகள் புதுச்சேரி (நகரம்), மூணார், சாலக்குடி மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டன.[2]

பாடல்கள்

தொகு
என்னவோ புடிச்சிருக்கு
பாடல்
சுபாஷ் ஜவஹர்
வெளியீடு2004
ஒலிப்பதிவு2004
இசைப் பாணிபாடல்கள்
நீளம்15:24
இசைத் தயாரிப்பாளர்சுபாஷ் ஜவஹர்

இப் படத்திற்கு இசை அமைத்தவர் சுபாஷ் ஜவகர். இப் படத்தின் பாடல்களை ராசி அழகப்பன், சுகுமார், பாரதி பிரியன் மற்றும் இளையகுமார் எழுதியுள்ளனர்.

எண் பாடல் பாடியவர்கள் காலம்
1 'அழகு அழகே' கலைகுமார் 3:38
2 'வாடா வாடா' கலைகுமார், லலிதா ஜவகர் 3:40
3 'இரு விழி' நித்யஸ்ரீ மகாதேவன் 2:34
4 'திதிக்க திதிக்க' திப்பு, சுஜாதா மோகன் 3:03
5 'காசுக்கு' கார்த்திக், சுஜாதா மோகன் 2:29

வரவேற்பு

தொகு

இத் திரைப்படம் எதிர்மறையான வரவேற்பை பெற்றுள்ளது.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Tamil Films Released In 2004". lakshmansruthi.com. Archived from the original on 2018-03-24. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.
  2. 2.0 2.1 "Preview - Ennavo Pudichirukku". geetham.net. Archived from the original on 2014-08-15. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.
  3. Balaji Balasubramaniam. "ENNAVO PUDICHIRUKKU". bbthots.com. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.
  4. "BizHat.com - Ennavo Pudichirukku Review". movies.bizhat.com. Archived from the original on 2018-04-16. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்னவோ_புடிச்சிருக்கு&oldid=3710183" இலிருந்து மீள்விக்கப்பட்டது