என். டென்னிஸ்

என். டென்னிஸ் (23 சனவரி 1929 - 21 சூன் 2013) என்பவர் இந்திய அரசியல்வாதியுயாவார். இவர் நாகர்கோயில் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1980, 1984, 1989, 1991 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1996, 1998 தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராகவும் நாகர்கோயில் தொகுதியில் இருந்து மக்களவைக்கு ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] [4] [5] [6] [7] [8] உடல் நலக்குறைவால் இவர் 2013 இல் இறந்தார். [9]

என். டென்னிஸ்
நாகர்கோவில் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–1984
பதவியில்
1984–1989
பதவியில்
1989–1991
பதவியில்
1991–1996
பதவியில்
1996–1998
பதவியில்
1998–1999
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 23, 1929(1929-01-23)
திரிவிதாங்கூர் இராச்சியம், கீழ்குளம் கிராமம் (விளவங்கோடு)
இறப்பு 21 சூன் 2013(2013-06-21) (அகவை 84)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, நாகர்கோவில்,
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) டபிள்யூ. கிளேடியாஸ்
பிள்ளைகள் 1 மகள் 2 மகள்கள்
இருப்பிடம் மார்த்தாண்டம்
கல்வி எம்.ஏ., பி.எல்.
படித்த கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக கல்லூரி, கல்கத்த
தொழில் வழக்கறிஞர், விவசாயி, அரசியல், தொழிற்சங்கம் (ம) சமூகப்பணியாளர்

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

இவர் பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் கல்வி பயின்றார். கல்கத்தா (மேற்கு வங்கம்) பல்கலைக்கழக கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். அதே நேரத்தில் எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மற்றும் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் (கேரளம்) சட்டப் படிப்பைப் படித்தார். [8]

பொது வாழ்க்கைதொகு

 • 1964-68 : துணைத் தலைவர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, கீழ்குளம் பேரூராட்சித் தலைவர். [8]
 • 1965-76 : கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்தலைவர்.
 • 1971-76 : தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்.
 • 1972-73 : நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறு வரையரை ஆணைய இணை உறுப்பினர்.
 • 1975-78 : காங்கிரஸ் (இ) தலைவர், கன்னியாகுமரி, தமிழ்நாடு
 • 1980 : 7 வது மக்களவை உறுப்பினர்
 • 1984 : 8 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2 வது முறை)
 • 1988-95 : துணைத் தலைவர், பிரதேச காங்கிரஸ் கமிட்டி (இ), தமிழ்நாடு
 • 1989 : 9 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (3 வது முறை)
 • 1991 : 10 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (4 வது முறை)
 • 1996 : 11 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (5 வது முறை)
 • 1998 : 12 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (6 வது முறை)

குறிப்புகள்தொகு

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._டென்னிஸ்&oldid=3163383" இருந்து மீள்விக்கப்பட்டது