எம். எஸ். குருபாதசாமி

இந்திய விடுதலைப் போராட்டக் கன்னடர்

எம். எஸ். குருபாதசாமி (M. S. Gurupadaswamy) (8 சனவரி 1923 – 10 மே 2011) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் டிசம்பர் 1989 முதல் நவம்பர் 1990 முடிய இந்திய மாநிலங்களவைத் தலைவராகவும், மார்ச் 1971 முதல் ஏப்ரல் 1972 மற்றும் சூன் 1991 முதல் சூலை 1991 முடிய இரண்டு முறை மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர்.[1][2]

எம். எஸ். குருபாதசாமி
மாநிலங்களவைத் தலைவர்
பதவியில்
டிசம்பர் 1989 – நவம்பர் 1990
முன்னையவர்பி. சிவ சங்கர்
பின்னவர்யஷ்வந்த் சின்கா
மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர்
பதவியில்
மார்ச் 1971 – ஏப்ரல் 1972
முன்னையவர்சியாம நந்தன் மிஸ்ரா
பின்னவர்கமலாபதி திரிபாதி
பதவியில்
சூன் 1991 – சூலை 1991
முன்னையவர்பி. சிவ சங்கர்
பின்னவர்எஸ். ஜெய்பால் ரெட்டி
இந்தியர் நாடாளுமன்றம்
மைசூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
1952–1957
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 சனவரி 1923
மலாங்கி, மைசூர் இராச்சியம்]], பிரித்தானிய இந்தியா(தற்கால இந்தியா)
இறப்பு10 மே 2011(2011-05-10) (அகவை 88) [1]
பெங்களூரு, கர்நாடகா, இந்தியா[1]
அரசியல் கட்சிஜனதா கட்சி
இந்திய தேசிய காங்கிரசு
விவசாய தொழிலாளர் மக்கள் கட்சி
துணைவர்இராஜஸ்ரீ
முன்னாள் கல்லூரிமைசூர் மகாராஜா கல்லூரி
கானிங் கல்லூரி, இலக்னோ

அரசியல்

தொகு

எம். எஸ். குருபாதசாமி பல இந்திய விடுதலை இயக்கங்களில் பங்கெடுத்துச் சிறை சென்றவர். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் விவசாய தொழிலாளர் மக்கள் கட்சியில் இணைந்து, 1952-இல் மைசூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விவசாய தொழிலாளர் மக்கள் கட்சி 1952-இல் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்ததால், குருபாதசாமி சோசலிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குருபாதசாமி 1966 முதல் 1992 முடிய நான்கு முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3]

1967 – 1969 முடிய இந்திரா காந்தியின் முதல் அமைச்சரவையில் 1967 – 1969 முடிய வேளாண்மை மற்றும் உணவு அமைச்சராக இருந்தவர்.[1]

1969-இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி இரண்டாக பிளவுண்ட போது, குருபாதசாமி இந்திராகாந்தி அமைச்சரவையிலிருந்து வெளியேறி, மக்களவை எதிர்கட்சித் தலைவராக பணியாற்றினார். ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர் குருபாதசாமி ஆவார்.[1]

வி. பி. சிங் அமைச்சரவையில் குருபாதசாமி பெட்ரோலியத்துறை அமைச்சராக 1989 முதல் 1990 முடிய பதவி வகித்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "M. S. Gurupadaswamy passes away". The Hindu. 10 May 2011 இம் மூலத்தில் இருந்து 14 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110514150121/http://www.hindu.com/2011/05/11/stories/2011051164730600.htm. பார்த்த நாள்: 22 March 2013. 
  2. "Former Union Minister M. S. Gurupadaswamy dies of heart attack". The Economic Times. 10 May 2011. http://articles.economictimes.indiatimes.com/2011-05-10/news/29528180_1_parliamentary-party-psp-gurupadaswamy. பார்த்த நாள்: 22 March 2013. 
  3. "Rajya Sabha Members' Biographical Sketches 1952 - 2003" (PDF). Rajya Sabha Secretariat, Parliament House, New Delhi.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._குருபாதசாமி&oldid=3917334" இலிருந்து மீள்விக்கப்பட்டது