எம். கிருட்டிணன் நாயர் (எழுத்தாளர்)
எம். கிருஷ்ணன் நாயர் (M. Krishnan Nair) (பிறப்பு: 1923 மார்ச் 3 - இறப்பு: 2006 பிப்ரவரி 23) இவர் ஓர் இந்திய கல்வியாளரும், சொற்பொழிவாளரும், இலக்கிய பத்திரிகையாளரும் மற்றும் மலையாள இலக்கியத்தின் விமர்சகருமாவார். இவர் முதலில் மலையாளநாடு வார இதழிலும், பின்னர் கலாகெளமுதியிலும், இறுதியாக மலையாள வாசகர்களுக்கு உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்திய சமகாலிகா மலையாள வாரிகாவிலும் எழுதிய சாகித்ய வராபலம் என்ற வார கட்டுரையில் அறியப்பட்டார். இவர் சௌந்தரியதின்டே சன்னிதாநத்தில், அடுனிகா மலையாள கவிதா மற்றும் வயனக்காரா, நீங்கள் ஜீவிச்சிரிகுன்னோ? உட்பட பல புத்தகங்களையும் வெளியிட்டார். ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்கான கேரள சாகித்ய அகாதமி விருதையும், இலக்கிய இதழியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக பி. டி. கோயங்கா விருதையும் பெற்றுள்ளார்.
எம். கிருட்டிணன் நாயர் | |
---|---|
பிறப்பு | திருவனந்தபுரம், கேரளம், இந்தியா | மார்ச்சு 3, 1923
இறப்பு | பெப்ரவரி 23, 2006 | (அகவை 82)
தொழில் | இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர், எழுத்தாளர் |
மொழி | மலையாளம் |
தேசியம் | இந்தியன் |
குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
துணைவர் | விஜயாம்மா |
குடும்பத்தினர் |
|
சுயசரிதை
தொகுகிருட்டிணன் நாயர் தென்னிந்திய மாநிலமான கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் 1923 மார்ச் 3, அன்று வி.கே. மாதவன் பிள்ளை மற்றும் சாரதா அம்மா ஆகியோருக்கு பிறந்தார். [1] திருவிதாங்கூரில் பள்ளி கல்வியைப் பெற்ற இவர், 1945 இல் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கேரள அரசு செயலகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்தார். [2] திருவனந்தபுரம் அரசு சமசுகிருதக் கல்லூரியில் விரிவுரையாளராக சேர 1950இல் அரசுப் பணியில் இருந்து விலகிய இவர், 1969ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியான தான் படித்தக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். பின்னர், திருவனந்தபுரம், அரசு கல்லூரி மற்றும் பாலக்காட்டில் உள்ள அரசு விக்டோரியா கல்லூரியிலும், எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியிலும் பணியாற்றினார். அங்கு மலையாளத் துறையின் தலைவராக பணியாற்றினார். பின்னர், முதல் தர பேராசிரியராக இருந்த இவர் 1978 ஆம் ஆண்டில் கல்வி சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
இவரை அறிந்தவர்களுக்கு விருந்தோம்பும் நபரான நாயர், [3] 2006 பிப்ரவரி 23, அன்று, தனது 82 வயதில், [4] திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நுறையீரல் அழற்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து இதய செயலிழப்புக்கு ஆளானார். [5] இவருக்கு விஜயாம்மா என்ற மனைவியும், [6] மற்றும் ஐந்து மகள்கள் உள்ளனர்; [2] இவரது மகன் முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். [7] [8]
இலக்கிய வாழ்க்கை
தொகுகிருஷ்ணன் நாயர் சிறுவனாக இருந்தபோது இவருக்கு குஞ்சன் நம்பியாரின் படைப்புகள் இவரது தந்தையால் இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறியப்பட்டது. [2] இவர் படிக்கும்படி செய்யப்பட்ட புத்தகங்களுக்கு விளக்கவுரைகளையும் எழுதும்படி செய்யப்பட்டது. ஒரு சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் பத்திரிகையாளரும் , மலையாள நாளேடான கேரளகௌமுதியை தொடங்கிய சி.வி. குஞ்ஞுராமன் நடத்திவந்த நவஜீவன் என்ற வார இதழில் வெளிவந்த விமர்சனக் கட்டுரை இவரது முதல் வெளியிடப்பட்ட படைப்பாகும். [1] [9] பி.கே. சகோதரர்கள் வெளியிட்டுள்ள இவரது முதல் புத்தகம், அடுனிகா என்ற நவீன மலையாள கவிதை, திருவனந்தபுரம் அரசு சமசுகிருதக் கல்லூரியில் படித்த நாட்களில் கேரளகௌமுதியில் இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். மேலும் இவர் 'அடுனிகா மலையாள கவிதா, எம். கிருட்டிணா நாயுருடே பிரபந்தங்கள் மற்றும் பிரதிபாயுத் ஜுவாலக்னி போன்ற பல புத்தகங்களையும் வெளியிட்டார்.
சாகித்ய வாரபலம்
தொகுகிருட்டிணன் நாயர், கேசரி பாலகிருஷ்ண பிள்ளைக்குப் பிறகு, உலக இலக்கியங்களை மலையாள வாசகருக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் அப்பத்திரிக்கையில் 35 ஆண்டுகளாக வாரம் ஒருமுறை கட்டுரை எழுதி மிகவும் பிரபலமானவர். [10] இவர் 1969 இல் மலையாளாநாடு என்ற வார இதழில் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். [5] வாராந்திர கலாகௌமுதியில் சேருவதற்கு முன்னர் இதில் பல ஆண்டுகள் பணியாற்றினார். [11] இறுதியாக சமகாலிகா மலையாள வாரிகாவில், 2006 இல் தான் இறக்கும் வரை பணியாற்றி வந்தார். [12] இவரது கட்டுரையானது மேலோட்டமானது என விமர்சிக்கப்பட்ட போதிலும், லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து இலக்கிய உலகிற்கு கேரள வாசகர்களில் மிகப் பெரிய பகுதியினருக்கு இந்த கட்டுரை உதவியது. சாகித்ய வாரபலம் ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்டு இணையத்திலும் கிடைக்கிறது.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
தொகு1979 ஆம் ஆண்டில் பி.டி. கோயங்கா விருது நிறுவப்பட்டபோது, இலக்கிய இதழியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக கிருட்டிணன் நாயர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [11] கேரள சாகித்ய அகாதமி இவருக்கு 2000 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்காக அவர்களின் வருடாந்திர கௌரவத்தை வழங்கியது. [13]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Professor M. Krishnan Nair". www.keralaculture.org (in ஆங்கிலம்). 2019-02-04. பார்க்கப்பட்ட நாள் 2019-02-04.
- ↑ 2.0 2.1 2.2 "Quintessential critic to the last". The Hindu (in Indian English). 2006-02-24. பார்க்கப்பட்ட நாள் 2019-02-04.
- ↑ "In pursuit of excellence". The Hindu (in Indian English). 2006-03-10. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ "M. Krishnan Nair (writer) on Veethi". veethi.com. 2019-02-05. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ 5.0 5.1 "M. Krishnan Nair on Sayahna". Sayahna. 2019-02-05. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ "Cooperation Minister, G. Sudhakaran receiving a book from the collection of Prof.M. Krishnan Nair". thehinduimages.com. December 29, 2006. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "എം.കൃഷ്ണന് നായര്, വായിക്കാതെ പോയ പുസ്തകം". Indian Express Malayalam (in மலையாளம்). 2017-02-23. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ "Author Details". www.puzha.com. 2019-02-05. Archived from the original on 2019-02-07. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ Online, Kerala Kaumudi. "Kerala Kaumudi Online". keralakaumudi.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
Please read "About us"section"
- ↑ "Welcome to Kerala window". www.keralawindow.net. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ 11.0 11.1 "Literary journalism at its best". www.tribuneindia.com. March 5, 2006. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ kerala, The Incredulous Hulkwrote in; kerala 2006-02-23 20:20:00, 2006-02-23 20:20:00 The Incredulous Hulk quizling. "The Day Literary Criticism Died". kerala.livejournal.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Kerala Sahitya Akademi Award for Overall Contributions". Kerala Sahitya Akademi. 2019-02-05. Archived from the original on 5 July 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
வெளி இணைப்புகள்
தொகு- "M. Krishnan Nair - Marikkatha Pranayam". YouTube. ACV Channel. January 25, 2014. பார்க்கப்பட்ட நாள் 2019-02-04.
M Krishnan Nair's family talks about the late writer and literary critic
- literarycriticm (October 6, 2008). "Prof. M. Krishnan Nair". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.