எம். கே. நாராயணன்
மாயன்கொட்டி கேளதில் நாராயணன் அல்லது எம். கே. நாராயணன் (Mayankote Kelath Narayanan, பிறப்பு: 10 மார்ச் 1934) இந்திய காவல் பணியிலிருந்து, பின்னர் இந்திய பாதுகாப்பு ஆலோசகராகவும் (2005–2010), மேற்கு வங்காளத்தின் 24வது ஆளுநராகவும்[1] பதவி வகித்தவர் ஆவார். இவரது சேவைக்காக இந்திய அரசு 1992 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினை வழங்கியது.[2]
எம் கே நாராயணன் | |
---|---|
2013ஆம் ஆண்டில் நாராயணன் | |
24வது மேற்கு வங்க ஆளுநர் | |
பதவியில் 24 சனவரி 2010 – 30 சூன் 2014 | |
இந்தியாவின் 3வதுதேசிய பாதுகாப்பு ஆலோசகர் | |
பதவியில் சனவரி 2005 – சனவரி 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 மார்ச்சு 1934 ஒற்றப்பாலம், பாலக்காடு, கேரளம், இந்தியா |
துணைவர் | பத்மினி நாராயணன் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் இந்திய நாட்டில் கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒற்றப்பாலம் என்ற ஊரில் பிறந்தார்.[3] சென்னை லயோலா கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். இவரின் மனைவியின் பெயர் பத்மினி, இவரின் மகன் பெயர் விஜய், மகள் பெயர் மேனா ஆகும். இவரது பேரன் அஜித் நம்பியார் பீபில் (BPL Group) நிறுவனத்தில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார்.[4]
தாக்குதல்
தொகு2015 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் திகதி அன்று சென்னை மியூசிக் அகாதமியில் நடந்த கருத்தரங்கில் இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம் பற்றி உரையாற்றிவிட்டு வந்தவர் தாக்கப்பட்டார். தமிழர்களுக்கு எதிரான இலங்கைப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டார் என்று சில அமைப்புகள் வெளியில் போராட்டம் செய்து கொண்டிருந்தபோது இந்த நிகழ்வு நடந்தது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "West Bengal governor MK Narayanan quits office". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Tharakan brings glory to Palakkad". The Hindu (Chennai, India). 28 January 2005 இம் மூலத்தில் இருந்து 5 ஏப்ரல் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050405050054/http://www.hindu.com/2005/01/28/stories/2005012812380400.htm.
- ↑ "WikiLeaks: Narayanan in PMO's 'Keralite mafia'". Ibnlive.in.com. 15 March 2011. Archived from the original on 18 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ எம்.கே. நாராயணன் மீது தாக்குதல்; ஒருவர் கைது, தி இந்து தமிழ் 05 நவம்பர் 2015
வெளி இணைப்புகள்
தொகு- M. K. Narayanan by B. Raman பரணிடப்பட்டது 2010-04-23 at the வந்தவழி இயந்திரம்