எம். ஜே. இராதாகிருட்டிணன்

எம். ஜே. இராதாகிருட்டிணன் (M. J. Radhakrishnan) (1957/1958 - சூலை 12 2019) இந்தியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளராவார். முக்கியமாக மலையாளப் படங்களில் பணிபுரிந்தார். மலையாளத் திரைப்படமான 'ஒலு' என்றத் திரைப்படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய திரைப்பட விருதினை 2018இல் பெற்றார். ஒளிப்பதிவாளரான மங்கடா இரவி வர்மா பெற்ற விருகளுக்குச் சமமாக இவரும் சிறந்த ஒளிப்பதிவுக்கான கேரள மாநில விருதை 7 முறை வென்றார். [1] முன்னதாக இவர் ஒரு புகைப்படக் கலைஞராகவும் பின்னர் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநர் ஷாஜி என். கருணிடம் உதவி இயக்குனராகவும் இருந்தார். [2]

எம். ஜே. இராதாகிருட்டிணன்
MJRadhakrishnanDOP.JPG
பிறப்புஎம். ஜே. இராதாகிருட்டிணன்
புனலூர், கொல்லம்
இறப்பு12 சூலை 2019(2019-07-12)
திருவனந்தபுரம், இந்தியா
மற்ற பெயர்கள்எம். ஜே. ஆர்
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988–2019

திரைப்பட விழாக்கள்தொகு

இவரது முக்கியமான படைப்புகளில் தேசதானம் (1996), கருணம் (1999) நாலு பென்னுங்கள் (2007) ஆகியவை அடங்கும். வீட்டிலெக்குள்ளே வழி (2010), ஆகாசிண்டே நிறம் ( 2012) போன்ற இவரது படங்கள் கான் (பிரான்சு), சாங்காய், கெய்ரோ, மொண்ட்ரியால், தெல்லூரைடு, சியோன்சூ, தொராண்டோ, சிகாகோ, ரோட் தீவு மற்றும் ராட்டர்டேம் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டன.

இவரது படைப்புகளில் ஒன்றான "மரண சிம்மாசனம்", பிரெஞ்சு: "லு ட்ரோன் டி லா மோர்ட்", 1999), 1999 கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் அன் சிலன் ரெகார்ட் பிரிவில் கேமரா டி'ஓர் (கோல்டன் விருது) வென்றது. 2019 இல் நடந்த சாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் இவரது வெயில்மரங்கள் சிறந்த கலை சாதனைக்காக கோல்டன் கோப்லெட் விருதை வென்றது. 117க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் பல ஆவணப்படங்களில் பணியாற்றிய இவர், அடூர் கோபாலகிருஷ்ணன், முரளி நாயர், ஷாஜி என். கருண், டி. வி. சந்திரன், டாக்டர் பிஜு, ஜெயராஜ் மற்றும் இரஞ்சித் உள்ளிட்ட சில முக்கிய இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுடன் பணியாற்றினார். [3]

இவர் பெரும்பாலும் கலைத் திரைப்படங்களில் பணிபுரிந்தார். மேலும், இவரது இயற்கையான ஒளியமைப்பு பாணிகளுக்காக அறியப்பட்டார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு வாழ்க்கையில், இவர் பல இளம் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் பணியாற்றினார். பெரும்பாலும் அவர்களின் முதல் முயற்சிகளில் உடன் இருந்தார். கிரண் ஜி.நாத் இயக்கிய [4] கலாமண்டலம் ஐதர் அலி பற்றிய 2019 திரைப்படத்தில் ஒளிப்பதிவு இயக்குநராக இவர் கடைசியாக பணி புரிந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

இவர், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் புனலூர் அருகே தலிக்கோடு என்ற ஊரில் பிறந்தார். இவர், தனது இளமைப் பருவத்திலேயே புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு