மு. பக்தவத்சலம்

தமிழக முன்னாள் முதல்வர்
(எம். பக்தவச்சலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மு. பக்தவத்சலம் (M. Bhakthavatsalam)(9 அக்டோபர் 1897 – 13 பிப்ரவரி 1987) சென்னை மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.[1] விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு மதராஸ் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர். இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர்.[2]

மு. பக்தவத்சலம்
M. Bhakthavatsalam
1954-ல் மு. பக்தவத்சலம்
4-ஆவது தமிழ்நாடு முதல்வர்
பதவியில்
2 அக்டோபர் 1963 – 5 மார்ச்சு 1967
முன்னையவர்காமராசர்
பின்னவர்கா. ந. அண்ணாதுரை
தமிழ்நாடு மாநிலக் கல்வி அமைச்சர்
பதவியில்
3 மார்ச்சு 1962 – 2 அக்டோபர் 1963
உட்துறை அமைச்சர்
பதவியில்
13 ஏப்பிரல் 1957 – 15 மார்ச்சு 1962
முன்னையவர்காமராசர்
பின்னவர்காமராசர்
வேளாண்மை-உழவர் நலத்துறை
பதவியில்
13 ஏப்பிரல் 1954 – 15 மார்ச்சு 1962
பின்னவர்பி. கக்கன்
பொதுப்பணித்துறை அமைச்சர்- சென்னை மாநிலம்
பதவியில்
24 மார்ச்சு 1947 – 6 ஏப்பிரல் 1949
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1897-10-09)9 அக்டோபர் 1897
நசரத்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு13 பெப்ரவரி 1987(1987-02-13) (அகவை 89)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இளைப்பாறுமிடம்பெரியவர் பக்தவத்சலம் நினைவிடம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஞானசுந்தராம்பாள்
பிள்ளைகள்சரோஜினி வரதப்பன்
வேலைஅரசியல்வாதி

1960ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரு மனிதாபிமான உணர்வோடு, மனிதநேய உணர்வோடு வாழ்ந்து காட்டியவர்.

நினைவிடம்

தொகு

தமிழ்நாடு அரசு எம்.பக்தவத்சலம் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைத்து, எம்.பக்தவத்சலம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

எழுதிய நூல்கள்

தொகு
  • குடியரசும் மக்களும்[3]
  • சமுதாய வளர்ச்சி
  • வளரும் தமிழகம்

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article6483938.ece/amp/
  2. "காங்கிரசு கட்சியின் முன்னால் தமிழக முதல்வர் பக்தவச்சலம்".
  3. "புத்தகத் திருவிழா 2022 முதல்வர்களின் வரலாறுஏன் வாசிக்கப்பட வேண்டும்?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
  • "Biography: M.Bhaktavatsalam". Kamat Research Database. Kamat's Potpourri. பார்க்கப்பட்ட நாள் 27 December 2008.
  • Bhaktavatsalan, Fifty Years of Public Life: Being a Commemoration Volume Issued on the Occasion of the Seventy-sixth Birth Day of Sri M. Bhaktavatsalam, Madras, October 1972. Kondah Kasi Seetharamon. 1972.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._பக்தவத்சலம்&oldid=3968041" இலிருந்து மீள்விக்கப்பட்டது