முதன்மை பட்டியைத் திறக்கவும்

சரோஜினி வரதப்பன்[1], தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகி. தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மகளாவார்.

சரோஜினி வரதப்பன்
Sarojini-varadappan.jpg
பிறப்புநவம்பர் 21 1921
சென்னை
இறப்பு17 அக்டோபர் 2013(2013-10-17) (அகவை 92)
சென்னை
பணிசமூக சேவகி
வாழ்க்கைத்
துணை
வரதப்பன்

பொருளடக்கம்

இளமைக் காலம்தொகு

சரோஜினி செப்டம்பர் 21, 1921-ம் ஆண்டு பக்தவத்சலம், ஞானசுந்தராம்பாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[2] ஒன்பதாம் வகுப்பு வரை லேடி சிவசாமி பெண்கள் பள்ளியில் படித்த இவர், அதன் பிறகு படிப்பை கைவிட்டார்.[2][3] இவர் தனி ஆசிரியர் மூலமாக இந்தியில் விசாரத் பயின்றார்.[2] இவர் இந்திய தேசிய காங்கிரசு அமைப்பிலும் காங்கிரசு சேவை தளத்திலும் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தார்.[2]

சிறிய வயதிலேயே தன்னுடைய உறவினரான வரதப்பன் என்பவரை மணந்தார்.[2]

சரோஜினி தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு மைசூர் பல்கலைக்கழகம் வாயிலாக அரசறிவியல் துறையில் முதுகலை பயின்றார்.[2] சென்னைப் பல்கலைக்கழகத்தில் வைஷ்ணவத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். தன்னுடைய 80-வது அகவையில் "சமூக சேவை மற்றும் நாராயணன் இயக்கம்" என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான முன்மொழிவை வைத்தார்.[2]

இசைதொகு

சரோஜினி, பாரூர் சுந்தரம் ஐயர் என்பவரிடம் இசையை முறையாக பயின்றார். இவர் காங்கிரசு கூட்டங்களில் வாழ்த்துப் பாடல்களை பாடியுள்ளார். இவர் சத்ரிய பாடங்களையும், தமிழ்ப் பாடங்களையும் மைலாப்பூர் கவுரி அம்மாவிடமும், பாரதியார் பாடல்களை கிருஷ்ணா ஐயரிடமும், இந்தி பஜன்களை வீனா விசாலாக்‌ஷியிடமும் பயின்றார்.[2]

சமூக சேவைதொகு

தன்னுடைய சிறிய வயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய தாயார் ஞானசுந்தராம்பாள் வுமன்ஸ் இந்தியா அசோசியேசன் (Women's India Association (WIA)) என்ற அமைப்பில் இருந்ததால் சரோஜினியும் அவருடன் இணைந்து கொண்டார்.[2] அவ்வமைப்பின் தலைவராக உயர்ந்தார்.[2] சரோஜினியின் தலைமையில், இவ்வமைப்பின் கிளை நான்கிலிருந்து எழுபத்தியாறாக உயர்ந்தது.[2] இவர் மைலாப்பூர் அகாதமியின் தலைவராகவும் இருந்தார்.[2]

சரோஜினி, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் 35 வருடத்திற்கு மேலாக இருந்தார்.[2] மாரி சன்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோது இவர் இச்சங்கத்தின் தலைவராக நியமிக்கப்படார்.[2] அதுவரையில் ஆளுநர்களின் மனைவியரே அப்பதவியை ஏற்றுவந்தனர்;[2] சன்னா ரெட்டியின் மனைவியும் சரோஜினிக்கு ஆதரவு தெரிவித்தார்.[2]

விருதுகள்தொகு

சரோஜினிக்கு, 1973-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.[2] 2004-ம் ஆண்டிற்கான ஜானகிதேவி பஜாஜ் விருது,[4] 2009-ம் ஆண்டு, பத்ம பூசன் ஆகியவை இவருடைய சமூக சேவையை பாராட்டி வழங்கப்பட்டது.[5]

இறப்புதொகு

உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 92-வது அகவையில், 2013-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் நாள் இறந்தார்.[6][7][8]

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜினி_வரதப்பன்&oldid=2683377" இருந்து மீள்விக்கப்பட்டது