எராப்பிரகடா எராண்ணா (Errapragada Erranna, தெலுங்கு: ఎఱ్రాప్రగడ என்பவர் ஒரு தெலுங்குக் கவிஞர் ஆவார். இவர் புரோலயா வேமா ரெட்டியின் (1325–1353) பேரரசில் அரசவைக் கவிஞராக இருந்தவர். இவர் "பிரபந்த பரமேசுவரா" என்று புகழப்பட்டவர்.[1]

எராப்பிரகடா

சமசுகிருத மகாபாரதத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தவர்களில் இவரும் ஒருவர்.[2] தெலுங்கில் முக்கவிகளில் இவரும் ஒருவர். மற்றவர்கள் நன்னய்யா, திக்கனா ஆகியோர் ஆவர். அரி வம்சம், இராமாயணம் ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார். நரசிம்ம புராணம் என்ற சொந்த நூலையும் எழுதினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Vaishanava yugamu" (PDF). Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  2. Errapragada (1926). Harivamsamu (in Telugu). Madras: Vavilla Ramaswamy Sastrulu and Sons. பார்க்கப்பட்ட நாள் 16 June 2020.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எராப்ரகடா&oldid=3882456" இலிருந்து மீள்விக்கப்பட்டது