தீப்புண் (Burn) அல்லது தீக்காயம் என்பது ஒரு வகையான புண். இது நெருப்பு, மின்சாரம், இரசாயனம், கதிரியக்கம், அல்லது தேய்மானம் போன்ற காரணங்களால் உருவாகலாம்.[1][2][3] பெரும்பாலான தீப்புண்கள் தோல்களை மட்டுமே பாதிக்கின்றது. மிக சில தருணங்களில் மட்டுமே ஆழமான, தசைகளை, எலும்புகளை மற்றும் இரத்த குழாய்களை பாதிக்கக்கூடிய புண்கள் ஏற்படுகின்றது. சாதாரண தீப்புண்களை முதலுதவியின் மூலமாக சரிசெய்து விடலாம். முடியாத பட்சத்தில் மருத்துவமமனைக்குச் சிகிச்சைக்காக செல்லலாம்.

தீப்புண்
கையில் ஏற்பட்ட தீப்புண்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஅவசர மருத்துவம்
ஐ.சி.டி.-10T20.-T31.
ஐ.சி.டி.-9940-949
ம.பா.தD002056

தீப்புண்பட்டவர்கள் பொதுவாக வலியால் அவதியுறுவார்கள். சில நேரங்களில் தீவிரமான தீப்புண் அடைந்தவர்கள் வடு, ஊனம் அல்லது மரணம் போன்ற பெருங்கொடுமைகளையும் அடைய நேரிடும்.

வகைப்படுத்தல்

தொகு

தீப்புண்ணுடைய ஆழம், அளவு மற்றும் அதனுடன் தொடர்புடைய புண்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.

ஆழத்தின் அடிப்படையில் வகைப்படுத்துதல்

தொகு

தற்போது, தீப்புண்கள் புண்ணின் ஆழத்தின் படி விவரிக்கப்படுகிறது. முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது நிலை என்று வகைப்படுத்தப்படுகின்றன. பிரஞ்சு முடிதிருத்துனர் - அறுவை சிகிச்சை மருத்துவர் அம்ப்ராய்சு பிரே என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இன்றும் பயன்பாட்டில் உள்ளது. என்றாலும், துல்லியமாக தீப்புண்ணின் ஆழத்தை தீர்மானிப்பது சிக்கலாகவே இருக்கின்றது.

பின்வரும் அட்டவணையில் தீப்புண் நிலைகளும் உதாரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

 
தீப்புண்ணின் மூன்று நிலைகள்
பெயர் நிலை தோற்றம் இழையமைப்பு வலி சரிசெய்வதற்கான காலம் சரிசெய்வதில் பிரச்சனை உதாரணம்
முதல் நிலை மேல்புறத்தோல் செந்தடிப்பு உலர்ந்தது வலி மிகுதி ஒரு வாரம் அல்லது அதற்கும் குறைவாக எதுவுமில்லை  
இரண்டாம் நிலை (மேலோட்டமான பகுதியளவு தடிப்பு) மேலோட்டமாக (சதைக்காம்புபோன்ற) அடித்தோல் வரை நீட்டிக்கப்பட்டது சிவந்தக் கொப்புளங்கள். அழுத்தும்போது வெளிறும் ஈரப்பசையுடன் உள்ளது வலி மிகுதி 2-3 வாரங்கள் உள்ளிட நோய்த்தொற்று/சீழ்ப்புரை

 

இரண்டாம் நிலை (ஆழமான பகுதியளவு தடிப்பு) ஆழமாக (நுண்வலைய) அடித்தோல்வரை நீட்டிக்கப்பட்டது சிவந்த, வெண்ணிற இரத்த கொப்புளங்கள். குறைந்த வெளுப்பு. ஈரப்பசையுடன் உள்ளது வலி மிகுதி வாரங்கள் - மூன்றாம் நிலைக்கு இட்டுச்செல்ல வாய்ப்பு அதிகம் வடு, சுருக்கங்கள் (பாதிக்கப்பட்ட தோலை நீக்கி புதிய தோல் ஒட்டு போடுதல் தேவைப்படலாம்)  
மூன்றாம் நிலை (முழுமையானத் தடிப்பு) அடித்தோல்வரை முழுமையாக நீட்டிக்கப்பட்டது இறுகியது, வெண்ணிறம்/பழுப்பு உலர்ந்தது, தோல்போன்றது வலியின்மை தோல் நீக்கம் தேவை வடு, சுருக்கங்கள், உறுப்பு நீக்கம்  
நான்காம் நிலை சருமத்தினுள்-தோலுக்கடியிலுள்ள திசுக்கள், அதனடியிலுள்ள தசை, எலும்பு வரை நீட்டிக்கப்பட்டது கருப்புத் தோற்றம்; கருகிய தீப்பொருக்கு உலர்ந்தது வலியின்மை தோல் நீக்கம் தேவை உறுப்பு நீக்கம், குறிப்பிடத்தக்க அளவு செயல்முறை பழுதுபடல், சதையழுகக்கூடிய சாத்தியம், சில நேரங்களில் இறப்பு

தீவிரத்தன்மை

தொகு
அமெரிக்க தீப்புண் அமைப்பின் தீவிரத்தன்மை வகைப்பாடு
சிறிய அளவு நடுத்தர அளவு பாரிய அளவு
வயது வந்தோர் <10% TBSA வயது வந்தோர் 10-20% TBSA வயது வந்தோர் >20% TBSA
இளையோர் அல்லது முதியோர் < 5% TBSA இளையோர் அல்லது முதியோர் 5-10% TBSA இளையோர் அல்லது முதியோர் >10% TBSA
<2% முழுமையான தடிப்புத் தீப்புண் 2-5% முழுமையான தடிப்புத் தீப்புண் >5% முழுமையான தடிப்புத் தீப்புண்
உயர் மின்னழுத்தக் காயம் உயர் மின்னழுத்தத் தீப்புண்
சாத்தியமான சுவாச பாதிப்பிற்குட்பட்ட காயம் தெரிந்த சுவாச பாதிப்பிற்குட்பட்ட காயம்
வட்ட வடிவிலான தீப்புண் முகம், மூட்டுக்கள், கைகள் அல்லது கால்கள் ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க தீப்புண்
ஏனைய சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்புடைய காயங்கள்

நோய் தொற்று அறிவியல்

தொகு
 
Disability-adjusted life years for fires per 100,000 inhabitants in 2004.
  no data
  < 50
  50–100
  100–150
  150–200
  200–250
  250–300
  300–350
  350–400
  400–450
  450–500
  500–600
  > 600

2004 ஆம் ஆண்டளவில் 11 மில்லியன் தீப்புண் காயங்கள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதுடன் 300,000 பேர் தீப்புண்ணினால் உயிரிழந்தனர். இதுவே அதிக எண்ணிக்கையான காயங்களில் தீவிரவாதம் மற்றும் சாலை விபத்திற்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் உள்ளது. 90% இற்கும் அதிகமான தீ விபத்துக்கள் வளர்ந்துவரும் நாடுகளிலேயே நடைபெறுகின்றன. சன நெரிசலும் பாதுகாப்பற்ற சமையல் நடவடிக்கைகளுமே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. அண்ணளவாக 60% ஆன உயிருக்கு ஆபத்தான தீக்காயங்கள் தென்கிழக்காசியாவில் 100,000 பேருக்கு 11.6 என்ற வீததில் நடைபெறுகின்றது. 1990 ஆம் ஆண்டில் 280,000 ஆக இருந்த உயிருக்கு ஆபத்தான தீக்காயங்கள் 2010 ஆம் ஆண்டளவில் 338,000 ஆக அதிகரித்துள்ளது.

வளர்ந்த நாடுகளில் வயது வந்த ஆண்கள் பெண்களிலும் இரண்டுமடங்காகத் தீக்காயங்களால் உயிரிழக்கின்றனர். இது அவர்களின் ஆபத்து அதிகமான தொழில்கள் மற்றும் நடவடிக்கைகளின் காரணமாக ஏற்படுகின்றது. வளர்ந்துவரும் நாடுகளில் பெண்கள் வயது வந்த ஆண்களிலும் இரண்டுமடங்காகத் தீக்காயங்களால் உயிரிழக்கின்றனர். இவ்வகையான தீக்காயங்கள் பெரும்பாலும் சமையலறைத் தீவிபத்தினாலேயே ஏற்படுகின்றது. சிறுவர்களில் வளர்ந்த நாடுகளை விட வளர்ந்துவரும் நாடுகளில் பத்து மடங்கானோர் தீக்காயங்களால் உயிரிழக்கின்றனர். ஒட்டுமொத்தமாக சிறுவர்களில் தீக்காயமானது இறப்பை ஏற்படுத்தும் முதல் முக்கிய பதினைந்து காரணிகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. 1980 களிலிருந்து 2004 வரை பெரும்பாலான நாடுகளில் உயிருக்கு ஆபத்தான தீக்காயங்கள் மற்றும் பொதுவான தீக்காயங்கள் குறைந்து வருகின்றன.

இவற்றையும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. medlineplus. "தீப்புண் - ஆங்கிலத்தில்". பார்க்கப்பட்ட நாள் 2010-09-22.
  2. WebMD (January 7, 2009). "தீப்புண் பற்றிய தொகுப்பு- ஆங்கிலத்தில்". முதலுதவி மருத்துவம் - ஆங்கிலத்தில். பார்க்கப்பட்ட நாள் 2010-09-22.
  3. Total Burn Care, 3rd Edition, Edited by David Herndon, Saunders, 2007.

மேலும் படிக்க

தொகு

ஹெர்ன்டான், டேவிட் (2007). தீக்காயம் பற்றிய ஆங்கிலப்புத்தகம். Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4160-3274-8.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிகாயம்&oldid=3848803" இலிருந்து மீள்விக்கப்பட்டது