எரிக்கா பெர்னாண்டஸ்

எரிகா பெர்னாண்டஸ் (பிறப்பு 7 மே 1993)[1] இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார். குச் ரங் பியார் கே ஐஸ் பீ தொலைக்காட்சித் தொடரில் டாக்டர் சோனாக்சி போஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தமைக்காகவும், கசவ்தி சிந்தகி கே என்ற தொலைக்காட்சி தொடரில் என்ற கதாபாத்திரத்தை ஏற்றமைக்காகவும் பரவலாக அறியப்படுகின்றார்.

ஆரம்பகால வாழ்க்கைதொகு

பெர்னாண்டஸ் கொங்கனி மங்களூர் கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்த ரால்ப் பெர்னாண்டஸ் மற்றும் லவினா பெர்னாண்டஸ் ஆகியோருக்கு பிறந்தார்.[2] மும்பையின் குர்லாவில் பிறந்து வளர்ந்தார். குர்லாவின் ஹோலி கிராஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பைச் நிறைவுச் செய்தார். சியோனின் எஸ்ஐஇஎஸ் கல்லூரியில் தனது முன் பட்டப்படிப்பை முடித்தார். பாந்த்ராவின் செயின்ட் ஆண்ட்ரூஸ் கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றார். மாதிரி அழகியாக பணி புரிவதற்கான படிப்பை நிறுத்தினார்.

பணிதொகு

2010 ஆம் ஆண்டு முதல் பாண்டலூன்ஸ் ஃபெமினா மிஸ் மகாராஷ்டிரா 2011 போன்ற அழகிப் போட்டி அணிவகுப்புகளில் பங்கேற்கத் தொடங்கினார்.[3]

இயக்குனர் குமாரின் மகனான புதுமுக இயக்குனர் சுஜீவின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான விரட்டு / தேகா என்ற திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.[4]

மீரா கதிரவனின் அலுவலகத்தில் எரிக்காவின் புகைப்படங்களை பார்த்து இயக்குனர் சசி அவரை ஐந்து ஐந்து ஐந்து என்ற படத்திற்காக தெரிவு செய்தார். இந்த படத்தில் எரிக்காவுக்கு மென்பொருள் பொறியியலாளரின் கதாப்பாத்திரத்தை சசி வழங்கினார். அவரது ஏனைய திரைப் படங்களின் தாமதம் காரணமாக, ஐந்து ஐந்து ஐந்து என்ற திரைப்படம் அவரது முதல் வெளியீடாக ஆனது. 2014 ஆம் ஆண்டில் கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நின்னிண்டேல் திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர் நிலா மாதாப் பாண்டா இயக்கத்தில் முதல் இந்தி திரைப்படமான பாப்லூ ஹேப்பி ஹை என்ற திரைப்படத்தில் நடித்தார்.[5] விரட்டு திரைப்படம் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத இறுதியில் வெளியானது. இருப்பினும் அதன் தெலுங்கு பதிப்பு 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்கு தள்ளப்பட்டது. மேலும் கலிபதம் என்ற அவரது தெலுங்கு திரைப்படம் முதல் தெலுங்கு வெளியீடாக மாறியது. இந்த படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. எரிக்கா பெர்னாண்டஸின் முதிர்ச்சியான நடிப்பு பாராட்டப்பட்டது.[6]

மீரா கதிரவன் இயக்கத்தில் எரிக்கா நடித்த விழித்திரு என்ற திரைப்படம் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 6 அன்று வெளியானது. இத் திரைப்படத்தில் கிருஷ்ணா , வெங்கட் பிரபு மற்றும் சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.[7]

2016 ஆம் ஆண்டில் எரிக்கா பெர்னாண்டஸ் சோனி தொலைக்காட்சியின் குச் ரங் பியார் கே ஐஸ் பீ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதில் டாக்டர் சோனாக்சி போஸ் என்ற கதாபாத்திரத்தில் ஷாஹீர் சேக்கின் ஜோடியாக நடித்தார்.[8] எரிக்கா, சேக் ஜோடி பாராட்டப்பட்டனர்.[9] அந்த தொடரின் அவர்களின் நடிப்பிற்காக ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆசிய பார்வையாளர்கள் தொலைக்காட்சி விருதையும் , சிறந்த திரை ஜோடிக்கான லயன்ஸ் தங்க விருதையும் வென்றனர.

2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பார்த் சம்தானுக்கு ஜோடியாக ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியின் கசவ்தி தி ஜிண்டகி கே தொலைக்காட்சி தொடரில் பிரேர்னா ஷர்மாவாக நடித்து வருகிறார்.[10] அவரது நடிப்பிற்காக மிகவும் பிரபலமான நடிகைக்கான கலகர் விருதையும் , சிறந்த திரை ஜோடி பிரபலத்திற்கான இந்திய டெலி விருதையும், சிறந்த நடிகைக்கான தங்க விருதையும் வென்றார்.

ஊடகங்களில்தொகு

2017 ஆம் ஆண்டில் இந்திய தொலைக்காட்சி பட்டியலில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் 20 மிகவும் விரும்பத்தக்க பெண்களில் பெர்னாண்டஸ் 4 வது இடத்தைப் பிடித்தார்.[11]

2018 ஆம் ஆண்டில், பிஸ் ஆசியாவின் தொலைக்காட்சி ஆளுமைக்கான பட்டியலில் அவர் 15 வது இடத்தைப் பிடித்தார்.[12] 2018 ஆம் ஆண்டின் இந்திய தொலைக்காட்சி பட்டியலில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் சிறந்த 20 மிகவும் விரும்பத்தக்க பெண்களில் 3 வது இடத்தைப் பிடித்தார்.[13]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்கா_பெர்னாண்டஸ்&oldid=2867073" இருந்து மீள்விக்கப்பட்டது