எரிக் மைக்கேல் ரெய்ன்ஸ்
எரிக் மைக்கேல் ரெய்ன்ஸ் (Eric Michael Rains)1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி பிறந்தார். இவர் ஒரு அமெரிக்கக் கணிதவியலாளர் ஆவார். இவர் குறியீட்டு கோட்பாடு மற்றும் சிறப்பு சார்பு ஆகியவற்றில் ஆய்வு செய்தார்.[1]
கல்வியும் பணியும்
தொகுஎரிக் ரெய்ன்ஸ் 1987 ஆண்டில் தனது 14 வயதில் உயர் கல்வியைத் தொடங்கினார். இவர் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் இயற்பியலில் இளங்கலைப் பட்டத்தையும், கணிதத்தில் முதுகலைப் பட்டத்தையும் தனது 17 ஆம் வயதில் முடித்தார்.[2]
சர்ச்சில் உதவித்தொகை மூலம் இவர் 1991-1992 ஆம் கல்வியாண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தையும் இயற்பியலையும் கற்றார்.[3] கணிதத்தில் உயர்கல்விக்கான சான்றிதழைப் பெற்றார். பெர்சி டியாகோனிஸின் மேற்பார்வையின் கீழ் 1995 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் லீ குலங்களில் நிகழ்தகவு தலைப்பில் ஆய்வேடு சமர்பித்து தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். 1995ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை, ரெயின்ஸ் பிரின்ஸ்டனில் உள்ள சர்வதேச வளர்ச்சி சங்கத்தில் உள்ள தகவல் தொடர்பு ஆராய்ச்சி மையத்தில் (CCR) பணியாற்றினார்.[4] 1996ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை இவர் AT&T ஆய்வகங்களில் ஆராய்ச்சியாளராக இருந்தார். 2002 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை இவர் பிரின்ஸ்டனில் உள்ள CCRக்கு திரும்பினார். 2003ஆம் ஆண்டில், ரெயின்ஸ் டேவிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். 2007-2023 ஆம் ஆண்டு வரை, ரெயின்ஸ் கால்டெக்கில் பேராசிரியராகவும், 2019 முதல் 2022 வரை கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் கணிதத் துறையின் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். இவர் 2023 ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில், ரெயின்ஸ் அவர்களின் இணையதளத்தின்படி கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் ஓய்வு பெற்ற கௌரவ பேராசிரியராக இருந்தார். 2006 தொடக்க காலத்தில் இவர் மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தின் வருகைப் பேராசிரியராக இருந்தார்.[3] இவர் கேப்ரியல் நெபே மற்றும் நீல் ஜேஏ ஸ்லோன் ஆகியோருடன் 2006 ஆம் ஆண்டின் சுய-இரட்டைக் குறியீடுகள் மற்றும் மாறாத கோட்பாட்டின் இணை ஆசிரியராக இருந்தார்.[5]
ரெய்ன்ஸ் 2007ஆம் ஆண்டில், அமெரிக்க கணிதவியல் சங்கத்தின் மேற்கத்திய பிரிவு கூட்டத்தில் ரெய்ன்ஸ் பேச்சாளராக இருந்தார்.[3] இவர் 2010 இல் ஐதராபாத்தில் நடந்த அனைத்துலகக் கணித அறிஞர் பேரவைக்கு அழைக்கப்பட்ட சிறப்பு பேச்சாளராவார்.[6] "குறியீட்டுக் கோட்பாட்டிற்கான பங்களிப்புகள், அணிகளின் வாய்ப்பு கோட்பாடு, சிறப்பு சார்புகளின் ஆய்வு, பரிமாறா வடிவியல் மற்றும் எண் கோட்பாடு" ஆகியவற்றிற்காக இவர் 2018 ஆம் ஆண்டின் அமெரிக்க கணித சங்கம் கௌரவ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]
தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்
தொகு- Calderbank, A. R.; Rains, E. M.; Shor, P. W.; Sloane, N. J. A. (1997). "Quantum Error Correction and Orthogonal Geometry". Physical Review Letters 78 (3): 405–408. doi:10.1103/PhysRevLett.78.405. Bibcode: 1997PhRvL..78..405C.
- Rains, E.M. (1998). "Shadow bounds for self-dual codes". IEEE Transactions on Information Theory 44: 134–139. doi:10.1109/18.651000. https://resolver.caltech.edu/CaltechAUTHORS:20170927-074638028.
- Calderbank, A.R.; Rains, E.M.; Shor, P.M.; Sloane, N.J.A. (1998). "Quantum error correction via codes over GF(4)". IEEE Transactions on Information Theory 44 (4): 1369–1387. doi:10.1109/18.681315. https://authors.library.caltech.edu/81821/1/00681315.pdf. (This article has over 1200 citations.)
- Rains, E.M. (1999). "Nonbinary quantum codes". IEEE Transactions on Information Theory 45 (6): 1827–1832. doi:10.1109/18.782103.
- Rains, E. M. (1999). "Rigorous treatment of distillable entanglement". Physical Review A 60 (1): 173–178. doi:10.1103/PhysRevA.60.173. Bibcode: 1999PhRvA..60..173R.
- Rains, E. M. (1999). "Bound on distillable entanglement". Physical Review A 60 (1): 179–184. doi:10.1103/PhysRevA.60.179. Bibcode: 1999PhRvA..60..179R.
- Bennett, Charles H.; DiVincenzo, David P.; Fuchs, Christopher A.; Mor, Tal; Rains, Eric; Shor, Peter W.; Smolin, John A.; Wootters, William K. (1999). "Quantum nonlocality without entanglement". Physical Review A 59 (2): 1070–1091. doi:10.1103/PhysRevA.59.1070. பன்னாட்டுத் தர தொடர் எண்:1050-2947.
- Baik, Jinho; Rains, Eric M. (2000). "Limiting distributions for a polynuclear growth model with external sources". Journal of Statistical Physics 100 (3/4): 523–541. doi:10.1023/A:1018615306992. https://authors.library.caltech.edu/82254/.
- Odlyzko, A. M.; Rains, E. M. (2000). "On longest increasing subsequences in random permutations". Contemporary Mathematics 251: 439–452. doi:10.1090/conm/251/03886. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780821811481. https://books.google.com/books?id=P08bCAAAQBAJ&pg=PA439.
- Rains, E.M. (2001). "A semidefinite program for distillable entanglement". IEEE Transactions on Information Theory 47 (7): 2921–2933. doi:10.1109/18.959270. https://authors.library.caltech.edu/81816/1/00959270.pdf.
- Rains, E. M.; Sloane, N. J. A. (2002). Self-Dual Codes. Bibcode: 2002math......8001R.
- Rains, E. M.; Sloane, N. J. A.; Rains, Eric M.; Krysta Svore (2004). A logarithmic-depth quantum carry-lookahead adder. Bibcode: 2004quant.ph..6142D.
- Borodin, Alexei; Rains, Eric M. (2005). "Eynard–Mehta Theorem, Schur Process, and their Pfaffian Analogs". Journal of Statistical Physics 121 (3–4): 291–317. doi:10.1007/s10955-005-7583-z. Bibcode: 2005JSP...121..291B.
- Rains, Eric M. (2010). "Transformations of elliptic hypergeometric integrals". Annals of Mathematics 171 (1): 169–243. doi:10.4007/annals.2010.171.169. https://authors.library.caltech.edu/18651/3/0309252.pdf.
- Poonen, Bjorn; Rains, Eric (2012). "Random maximal isotropic subspaces and Selmer groups". Journal of the American Mathematical Society 25 (1): 245–269. doi:10.1090/S0894-0347-2011-00710-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0894-0347.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Eric M. Rains". The Division of Physics, Mathematics and Astronomy, Caltech (caltech.edu).
- ↑ "Alum who graduated at age 17 with three degrees returns to CWRU for talk". The Daily, Case Western Reserve University. 16 September 2013.
- ↑ 3.0 3.1 3.2 "Eric M. Rains, Curriculum Vitae" (PDF). caltech.edu.
- ↑ கணித மரபியல் திட்டத்தில் எரிக் மைக்கேல் ரெய்ன்ஸ்
- ↑ Gabriele Nebe; Eric M. Rains; Neil J. A. Sloane (20 May 2006). Self-Dual Codes and Invariant Theory. Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-30731-0.
- ↑ Rains, Eric M. (2011). "Elliptic Analogues of the Macdonald and Koornwinder Polynomials". Proceedings of the International Congress of Mathematicians 2010 (ICM 2010). Vol. 4. pp. 2530–2554. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1142/9789814324359_0157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4324-30-4.
- ↑ "New Class of Fellows of the AMS". Notices of the AMS 65 (3): 346–348. March 2018. http://ams.org/profession/ams-fellows/Fell-list-2018.pdf.