எலத்தூர், கோழிக்கோடு

எலத்தூர் (Elathur) என்பது இந்திய மாநிலமான கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோழிக்கோடு மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். எலத்தூர் நகரம் கோழிக்கோடு-கண்ணூர் தேசிய நெடுஞ்சாலை எண் 17 இல் கோழிக்கோடு நகருக்கு வடக்கே சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேற்கில் அரபிக் கடலும் கோரபுழா நதி எனப்படும் எலத்தூர் நதி வடக்கிலும் இந்நகரை சூழ்ந்துள்ளன [1]. எலத்தூர் நதி பொதுவாக முன்னாள் மலபார் மாவட்டத்தில் வடக்கு மலபார் மற்றும் தெற்கு மலபார் இடையேயான ஓர் எல்லையாகக் கருதப்பட்டது.

எலத்தூர்
Elathur
நகரம்/துணை நகரம்/கோழிக்கோடு மாநகராட்சியின் பகுதி
எலத்தூர் பகவதி கோயில் 1900 ஆம் ஆண்டில்
எலத்தூர் பகவதி கோயில் 1900 ஆம் ஆண்டில்
எலத்தூர் Elathur is located in கேரளம்
எலத்தூர் Elathur
எலத்தூர்
Elathur
இந்தியாவில் கேரளாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°20′0″N 75°44′0″E / 11.33333°N 75.73333°E / 11.33333; 75.73333
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோழிக்கோடு மாவட்டம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்41,326
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அ.கு.எண்673303
தொலைபேசிக் குறியீடு0495
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-KL
எலத்தூர் இரயில் நிலையம்

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எலத்தூர் பஞ்சாயத்தின் மொத்த மக்கள் தொகை 41,326 ஆகும்[2]. இத்தொகையில் கிட்டத்தட்ட சரிபாதியாக இந்துக்களும் இசுலாமியர்களும் கலந்திருந்தனர். எலத்தூர் பஞ்சாயத்தின் மொத்தப் பரப்பளவு 13.58 சதுர கிலோமீட்டர்களாகும். ஆனால் இதன் பெரும்பகுதியை தேசிய நெடுஞ்சாலை 17, மாநில நெடுஞ்சாலை, ஆறுகள் மற்றும் இந்திய இரயில்வே துறை போன்றவை எடுத்துக் கொண்டன.

சாலை வழியாகவும் இரயில் பாதை வழியாகவும் எலத்தூர் நகரம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இப்பஞ்சாயத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை 17 செல்கிறது. இத்தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கில் எலத்தூர் இரயில் நிலைய சந்திப்பு அமைந்துள்ளது[3]. இந்துசுத்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் கோழிக்கோடு மண்டல பிராந்திய அலுவலகம் இரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கிறது [4].

அரபிக் கடல் எலத்தூருக்கு மேற்கே அமைந்துள்ளது. எலத்தூர் கடற்கரை புத்தியானிராதே முதல் கோரபுழா வரை நீண்டுள்ளது . கடலின் இந்த பகுதியில் கடல் சிப்பி இனங்கள் ஏராளமாக காணப்படுகின்றன.

கோழிக்கோடு நகரின் வடக்குப் பகுதியில் எலத்தூர் அமைந்துள்ளது. வர்த்தக மையம் நதக்காவு, மேற்கு மலை, புதியங்காடி போன்ற கோழிக்கோடு மாநகரத்தின் புறநகர் பகுதிகள் எலத்தூர் சாலையில் அமைந்துள்ளன. அகில இந்திய வானொலியின் உள்ளூர் வானொலி நிலையம் இதே வழியில் இருக்கும் குண்டுபறம்பாவில் அமைந்துள்ளது. பவங்காடு சந்திப்பில், இச்சாலை கிழக்கு நோக்கி அதோலிக்கும் வடக்கு நோக்கி நேரான சாலை எலத்தூருக்கும் இரண்டாகப் பிரிந்து செல்கிறது. வெங்கலி சாலை மேம்பாலம் கடந்த கால போக்குவரத்து பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளது, மேலும் பாலம் முடிந்தபின், எலத்தூர் நகரம் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கொனொலி கால்வாய் தொகு

முந்தைய பிரித்தானிய ஆட்சியின் போது மலபார் ஆட்சித்தலைவராக இருந்த என்றி வாலண்டைன் கொனொலியின் பெயரிடப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த கொனோலி கால்வாய் எலத்தூர் வழியாக செல்கிறது. இது 1848 ஆம் ஆண்டில் அவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது, மேலும் 1950 களின் பிற்பகுதி வரை கோழிக்கோடு மாவட்டத்தில் பொருட்களை அனுப்பவும் பயணிகளை ஏற்றிச்செல்லவும் ஒரு பெரிய நீர்வழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டது[5]. கால்வாய் இணைப்புகள் கோரப்புழாவை கல்லாயி நதியுடன் இணைக்கின்றன. இம்மொத்த வலையமைப்பும் சேர்ந்து எலத்தூர் உப்பங்கழிகளை உருவாக்குகிறது.

வள்ளிக்காட்டு காவு தொகு

வள்ளிக்காட்டு காவு என்பது எலத்தூருக்கு அருகிலுள்ள எடக்காராவின் ஒலெய்ன்மால் சிக்கிலோடில் சதுப்பு நிலத்தில் 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு புனித தோப்பு ஆகும். குரங்குகள், மயில்கள், காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றிகள், காட்டு கோழிகள், பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள், ஏராளமான மலர் இனங்களை இங்கே காணலாம். பட்டாம்பூச்சிகளின் வடிவத்தில் இலைகளைக் கொண்ட ஒரு வகை மூலிகை இங்கே உள்ளது.

சுற்றுப்புறம் தொகு

  • வடக்கு: சேமஞ்சேரி, தலக்குளத்தூர் ஊராட்சிகள்
  • தெற்கு: கோழிக்கோடு நகராட்சி
  • கிழக்கு: கோழிக்கோடு நகராட்சி, கக்காடி ஊராட்சி
  • மேற்கு: அரபிக்கடல்

எலத்தூரின் துணை நகரங்கள் தொகு

•சுங்கம், அதானிக்கல், புதியங்காடி •பவங்காடு, புத்தூர், வெங்கலி •புதியநீராற்று, அனந்தபுரம் •செட்டிக்குளம், சலத்நகர் •திருவாங்கூர், கொல்லம் கிராமம் •ஆனக்குளம், முத்தாடி, நந்திகிராமம் •கோரப்புழா, கட்டில்பீடிகா, வேங்களம் •வெட்டில்பாறா, பூக்காடு, சேமஞ்சேரி

மேற்கோள்கள் தொகு

  1. Kerala with Lakshadweep: Outlook traveller getaways (Illustrated ). Outlook Publishing. 2005. https://books.google.com/books?id=yJJuAAAAMAAJ&q=elathur&dq=elathur. பார்த்த நாள்: 2009-08-16. 
  2. "City Corporation considering proposal to extend boundaries". தி இந்து. 2008-09-05 இம் மூலத்தில் இருந்து 2008-09-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080916141541/http://www.hindu.com/2008/09/05/stories/2008090550860300.htm. பார்த்த நாள்: 2009-08-16. 
  3. "Elathur railway gate an obstacle to road users". The Hindu. 2007-09-09 இம் மூலத்தில் இருந்து 2008-09-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080920101938/http://www.hindu.com/2007/09/09/stories/2007090953570300.htm. பார்த்த நாள்: 2009-08-16. 
  4. "HPCL Kozhikode". Archived from the original on 2009-09-27. பார்க்கப்பட்ட நாள் 2009-08-16.
  5. "Reviving the historic Canoly Canal". The Hindu. 2005-01-05 இம் மூலத்தில் இருந்து 2010-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100923092718/http://www.hindu.com/pp/2008/01/05/stories/2008010550730300.htm. பார்த்த நாள்: 2009-08-16. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=எலத்தூர்,_கோழிக்கோடு&oldid=3315042" இலிருந்து மீள்விக்கப்பட்டது