எல். பி. ஆர். வர்மா

இந்திய பாடலாசிரியர், இசை இயக்குனர் மற்றும் நடிகர் (1926-2003)

இலட்சுமிபுரம் அரண்மனை திருநாள் ரவி வர்மா (Lakshmipuram Palace Pooram Thirunal Ravi Varma) (1926–2003) ஓர் கருநாடக இசைக் கலைஞரும், பாடலாசிரியரும், இசை இயக்கநரும், பாடகரும், திரைக்கதை ஆசிரியரும் மற்றும் நடிகரும் ஆவார்.

இலட்சுமிபுரம் அரண்மனை திருநாள் ரவி வர்மா
எல். பி. ஆர். வர்மா
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1927-02-18)18 பெப்ரவரி 1927
பிறப்பிடம்சங்கனாச்சேரி, திருவிதாங்கூர்
இறப்பு6 சூலை 2003(2003-07-06) (அகவை 76) [1]
தொழில்(கள்)பாடலாசிரியர், இசை இயக்குநர், நடிகர், பின்னணிப் பாடகர்
இசைக்கருவி(கள்)இந்தியப் பாரம்பரிய இசை

வாழ்க்கை

தொகு

வர்மா, இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள ( திருவிதாங்கூர் மாநிலத்திலிருந்தது) சங்கனாச்சேரியில் புழவத்து லட்சுமிபுரம் அரண்மனையில் பிறந்தார். இவர் தனது எட்டு வயதில் இசையைக் கற்கத் தொடங்கினார். முத்தையா பாகவதர் , செம்மங்குடி சீனிவாச ஐயர் மற்றும் மதுரை கேசவ பாகவதர் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார்.

இவர் தென்னிந்தியாவில் ஏராளமான கருநாடக இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பல மலையாளத் திரைப்படங்களுக்கும் மற்றும் தொழில்முறை நாடகங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவரது குடும்பர்ம் பரப்பனங்கடி அரச குடும்பத்தைச் சேர்ந்தது (வடக்கு கேரளாவின் ஒரு பகுதியான மலபார் ). பின்னர் அவர்கள் சங்கனாசேரியில் குடியேறினர். இவர் பொதுவாக மலையாள மொழியில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். 1978 ஆம் ஆண்டில், இவர் கேரள சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார்.[2]

மோகன்லால் விசுவநாத பாகவதராக நடித்த அயிதம் (1988) என்ற மலையாளத் திரைப்படத்தில் இவரும் நடித்துள்ளார்.

இறப்பு

தொகு

வர்மா தனது 76வது வயதில் 2003 ஜூலை 6 அன்று காலமானார்.  

மேற்கோள்கள்

தொகு
  1. "L.P.R. Varma cremated". தி இந்து. 2003-07-08. Archived from the original on 2013-11-10. பார்க்கப்பட்ட நாள் 2014-02-05.
  2. "Kerala Sangeetha Nataka Akademi Award: Classical Music". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._பி._ஆர்._வர்மா&oldid=4009284" இலிருந்து மீள்விக்கப்பட்டது