எல் (தெய்வம்)

எல் தெய்வம் பண்டைய அண்மைக் கிழக்கின் கானான் மற்றும் அனதோலியா பகுதிகளில் வணங்கப்பட்ட தெய்வமாக கருதப்பட்டது.[2] அக்காதியம் மற்றும் அமோரித்து மொழிகளில் இத்தெய்வத்தின் பெயர் குறிப்பிட்டுள்ளது. ஆதி வடமேற்கு செமித்திய மொழியில் எல் எனும் சொல்லிற்கு கடவுள் என்று பொருளாகும்..[3]

El-ஆங்கிலம்
אֵל‎ (எபிரேயம்)
إلّ‎ (அரபு மொழி)
எல் தெய்வத்தின் சிற்பம்
அதிபதிகடவுள்களின் அரசன்
வேறு பெயர்கள்எல்யோன், எல் சத்தாய், அதோன்
இடம்லேல் குன்று
துணைஆசெரா
குழந்தைகள்அனத், அஷ்தர், பால், மோத், சலீம், சாப்சு, யாம்
சமயம்லெவண்ட் (குறிப்பாக கானான் மற்றும் அனதோலியா பிரதேசங்கள்
கெபல் எல்-அராக் கத்தியில் இரண்டு சிங்கங்களுக்கு இடையே எல் தெய்வத்தின் புடைப்புச் சிற்பமாக கருதப்படுகிறது, காலம் கிமு 3450[1]

எல், அல் அல்லது 'இல் எனப்படும் குறிப்பிடும் தெய்வமானது பண்டைய கானானியர்களின் உச்சக் கடவுள் ஆவார். மேலும் மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்தில் கிழக்கு செமிடிக் மொழி பேசுபவர்களின் உச்ச கடவுள் எல் எனப்படும் இல் தெய்வம் ஆகும்.

ஹுரியத் & லெவண்ட் பகுதிகளில் தொகு

கானானியர்கள் மற்றும் பண்டைய லெவண்ட் பகுதி மக்கள் எல் அல்லது இல் தெய்வத்தை மனிதகுலம் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் தந்தை, உயர்ந்த கடவுள் என்று அழைத்தனர்...[27] மேலும் எல் தெய்வம் பல துணைக் கடவுள்களை உருவாக்கினார், ஹுரியத் காலத்திய களிமண் பலகைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அஷேரா எனும் பெண் தெய்வத்தின் கணவர் எல் தெய்வம் ஆவார்.

எல் தெய்வத்தை எருது கடவுள் வடிவில் கானான் தேசத்தில் வழிபட்டனர். எல் தெய்வத்தை உயிரினங்களின் தந்தை மற்றும் தெய்வங்களின் அரசன் எனப்போற்றப்பட்டார். "எல்" (சொர்க்கத்தின் தந்தை) மற்றும் அவரது முக்கிய மகன்: ஆதாத் (பூமியின் தந்தை), இருவரும் காளையால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். மேலும் இருவரும் தங்கள் தலைக்கவசத்தில் காளைக் கொம்புகளை அணிந்துள்ளனர்.[4][5][6][7]யூதர்களின் புனித நூலான டனாக்கில், எலோஹிம் என்பது ஒரே கடவுளுக்கு இம் என்று கொடுக்கப்பட்ட சாதாரணச் சொல்லாகும். .

மேற்கோள்கள் தொகு

  1. du Mesnil du Buisson, Robert (1969). "Le décor asiatique du couteau de Gebel el-Arak" [The Asian decor of the Gebel el-Arak knife] (PDF). BIFAO (in பிரெஞ்சு). Vol. 68. Institut Français d'Archéologie Orientale. pp. 63–83. பன்னாட்டுத் தர தொடர் எண் 0255-0962. Archived from the original (PDF) on 21 Feb 2014. பார்க்கப்பட்ட நாள் 30 Oct 2014.
  2. "Online Phoenician Dictionary". Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் May 11, 2022.
  3. Kogan, Leonid (2015), Genealogical Classification of Semitic: The Lexical Isoglosses. Berlin, Germany: De Gruyter. p. 147.
  4. Caquot, André; Sznycer, Maurice (1980). Ugaritic Religion. Iconography of religions. Vol. 15: Mesopotamia and the Near East. Leiden, Netherlands: Brill. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-06224-5. LCCN 81117573. இணையக் கணினி நூலக மைய எண் 185416183.
  5. van der Toorn, Becking & van der Horst 1999, ப. 181.
  6. Schwabe, Calvin W. (1978). Cattle, Priests, and Progress in mMdicine. Minneapolis, Minnesota: University of Minnesota Press. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8166-0825-6. LCCN 77084547. இணையக் கணினி நூலக மைய எண் 3835386.
  7. Falk, Avner (1996). A Psychoanalytic History of the Jews. Cranbury, New Jersey: Associated University Presses. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8386-3660-2. LCCN 95002895. இணையக் கணினி நூலக மைய எண் 32346244.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்_(தெய்வம்)&oldid=3850047" இலிருந்து மீள்விக்கப்பட்டது