எஸ். கே. வேதரத்தினம்
எஸ். கே. வேதரத்தினம் (S. K. Vedarathinam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், வேதாரண்யம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
எஸ்.கே.வேதரெத்தினம் | |
---|---|
பிறப்பு | 18 மார்ச்சு 1958 தேத்தாகுடி தெற்கு, வேதாரண்யம் |
இருப்பிடம் | வேதாரண்யம் |
தேசியம் | இந்தியர் |
பணி | அரசியல்வாதி, விவசாயி |
சொந்த ஊர் | தேத்தாகுடி தெற்கு நாகப்பட்டினம் மாவட்டம் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பெற்றோர் | கைலாசக்கவுண்டர்-சாரதாம்பாள் |
வாழ்க்கைத் துணை | இசையரசி |
பிள்ளைகள் | ஐஸ்வர்யா (மகள்) , இமயவரம்பன் (மகன்) |
2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், வேதாரண்யம் தொகுதி, திமுக கூட்டணியில் இருந்த பாமகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அதிருப்தி அடைந்த இவர், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு, இரண்டாம் இடம் பெற்றார். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், 2016 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். 2016இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பாஜகவில் மாநில செயலாளராக பொறுப்பு வகித்த இவர், அரசியல் பலம் வாய்ந்த இவர் பின்னாளில் ஓரங்கட்டப்பட்ட சூழலில் பாஜகவில் இருந்து விலகி, மறுபடியும் தாய்கழகம் ஆன திராவிட முன்னேற்றக் கழகத்தில், 22 சூலை 2020 அன்று, வேதாரண்யம் நகர திமுக அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி முறையில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1996 Tamil Nadu Election Results பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம், Election Commission of India
- ↑ 2001 Tamil Nadu Election Results பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம், Election Commission of India
- ↑ 2006 Tamil Nadu Election Results பரணிடப்பட்டது 2018-06-13 at the வந்தவழி இயந்திரம், Election Commission of India
- ↑ "திமுகவிலிருந்து பாஜக போனார்.. மீண்டும் திரும்பி வந்த வேதரத்தினம்.. ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு". ஒன் இந்தியா தமிழ் (சூலை 22, 2020)
- ↑ "பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைகிறார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம்". தினமணி (சூலை 22, 2020)