தேத்தாகுடி தெற்கு


தேத்தாகுடி தெற்கு (Thethakudi south) தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம்[4]. தேவதாகுடி என்ற பழமையான பெயர் மருவி தேத்தாகுடி என அறியப்படுகின்றது[சான்று தேவை].

தேத்தாகுடி தெற்கு
—  கிராமம்  —
தேத்தாகுடி தெற்கு
அமைவிடம்: தேத்தாகுடி தெற்கு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°28′N 79°50′E / 10.46°N 79.84°E / 10.46; 79.84
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. ஆகாசு, இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம்
சட்டமன்றத் தொகுதி வேதாரண்யம்
சட்டமன்ற உறுப்பினர்

ஓ. எஸ். மணியன் (அதிமுக)

மக்கள் தொகை 7,695 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2078 குடும்பத்தில் 7695 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 3872 ஆண்கள், 3823 பெண்கள் ஆவார்கள். இவ்வூர் மக்களின் சராசரி கல்வியறிவு 83.75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.80% பெண்களின் கல்வியறிவு 74.57% ஆகும்.இவ்வூரில் மக்கள் தொகையில் 8.97% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இங்கு வன்னியகவுண்டர்,இடையர்,பிள்ளை,நாடார்,ஆதிதிராவிடர் இஸ்லாமியர் என பல்வேறு சமூகத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்க்கின்றனர்.

அமைவிடம்

தொகு

நாகப்பட்டிணம் தெற்கே 40கி.மீ தூரத்திலும்,வேதாரண்யத்தில் இருந்து 6 கி.மீ வடக்கே அமைந்துள்ளது. இவ்வூரில் இருந்து கிழக்கே 5கி.மீ தூரத்தில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது.இவ்வூரின் கிழக்கு பகுதி வழியாக செல்லும் உப்பனாறு இறுதியாக கடலில் கலக்கின்றது.

அருகாமையில் உள்ள ஊர்கள்

தொகு

போன்ற ஊர்கள் இக்கிராமத்திற்கு அருகில் உள்ளன.

விவசாயம்

தொகு

இப்பகுதியில் ஆற்றுபாசனம் அல்லாத பகுதி மற்றும் உவர்மணல் என்பதால் நெல் சாகுபடி மிகவும் குறைவாக உள்ளது.இருந்தபோதிலும் நிலத்தடிநீர் பாசனம் கைகொடுப்பதால் மா,முந்திரி,தென்னை,சவுக்கு, வேர்கடலை மற்றும் கத்திரி,வெண்டை போன்ற காய்கறி வகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றது

தொழில்வளம்

தொகு

இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த நாட்கூலி வேலைகளுக்கே செல்கின்றனர். இப்பகுதி இளைஞர்கள் தங்களின் கடின உழைப்பின் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று பணிகின்றனர்.பெரும்பாலும் மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர்.

உள்ளாட்சி நிர்வாகம்

தொகு

தேத்தாகுடி தெற்கு வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும்[5]. இவ்வூராட்சியில் 12 ஊராட்சிமன்ற உறுப்பினர்களும் 2 ஒன்றியக்குழு உறுப்பினர்களும் உள்ளனர். மத்திய,மாநில அரசுகளின் திட்டங்கள் இவ்வூரில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அலுவலகங்கள்

தொகு

இவ்வூரின் மத்தியில் ஊராட்சிமன்றம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே கிராம நிர்வாக அலுவலகம், அஞ்சலகம்,சமுதாய கூடம், ஆரம்ப சுகாதார மையம் அமைந்துள்ளன. 3 நியாயவிலை அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்வி நிறுவனங்கள்

தொகு

இக்கிராமத்தில் 83.75% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இக்கிராமத்தில் உள்ள எஸ்.கைலாசக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இக்கிராமம் மட்டுமின்றி பக்கத்து ஊர்களான தேத்தாகுடி வடக்கு, கத்திரிபுலம், குரவப்புலம், நெய்விளக்கு, அண்டர்காடு, முதலியார் தோப்பு, தோப்புத்துறை போன்ற ஊர்களை சார்ந்த மாணவர்களும் கல்வி கற்கின்றனர். மேலும் இக்கிராமத்தில் அல்நூர் இந்தியன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியும்,சாரதா வித்யாலயா பள்ளியும் செயல்படுகிறது. மாணவர் மேற்படிப்புக்கு ஏற்ற வகையில் செம்போடை ஆர்.வி கல்வி நிறுவனங்களும், வேதாரண்யத்தில் அரசு கலைக்கல்லூரி மிக அருகிலேயே அமைந்துள்ளன. மேலும் நாகையில் இயங்கும் கல்லூரிகளில் இருந்து இக்கிராமத்திற்கு பேருந்து வசதி செய்யப்பட்டு உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2015-07-16.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேத்தாகுடி_தெற்கு&oldid=4051616" இலிருந்து மீள்விக்கப்பட்டது