எஸ். செல்லமுத்து
சங்கரப்பிள்ளை செல்லமுத்து (Sangarapillai Sellamuttu, 25 பெப்ரவரி 1916 - 1993) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தொழிலதிபரும் ஆவார். இவர் கொழும்பு மாநகர சபை முதல்வராக 1951 இல் தெரிவு செய்யப்பட்டார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசங்கரப்பிள்ளை யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த அதிகார் ஏ. செல்லமுத்து என்பவருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியிலும், பின்னர் கேம்பிரிட்ச் திரித்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[2]
கல்வியை முடித்துக் கொண்ட இவர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சர் சிற்றம்பலம் கார்டினரின் அழைப்பை ஏற்று அவரது சிலோன் தியேட்டர்சு நிறுவனத்தில் 1944 இல் இணைந்து அதன் நிதி, மற்றும் சட்ட அலுவல்களுக்குப் பொறுப்பாகப் பணியாற்றினார்.[2] 1946 இல் அதன் பணிப்பாளர் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1974 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் தலைவரானார்.[2][3]
அரசியலில்
தொகுஉள்ளூர் அரசியலில் ஆர்வம் கொண்ட செல்லமுத்து 1951 ஆம் ஆண்டில் கொழும்பு கறுவாத்தோட்டம் வட்டாரத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு நகர சபைக்குப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.[2] 1951 சனவரி 10 இல் இவர் கொழும்பு நகர முதல்வராகத் (மேயராக) தெரிவு செய்யப்பட்டார்.[4] இவருக்கு 17 வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரி. ருத்ரா 11 வாக்குகளைப் பெற்றார்.[4] இவரது காலத்தில் களத்துவாவை நீர் விநியோகத் திட்டம் ஆரம்பம், துரொலி பேருந்து சேவை அறிமுகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.[2]
சமூகப் பணிகள்
தொகுகொழும்பு இந்துக் கல்லூரியின் நிறுவனர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[5] மோதரை சித்தி விநாயகர் கோவில் புனரமைப்பில் இவர் முக்கிய பங்கள்ளிப்பாளர் ஆவார்.[6] இவர் அரச அடைமான வங்கிப் பணிப்பாளர் சபை, மில்லர்சு, கார்கில்சு நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகள ஆகியவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார்.[2]
குடும்பம்
தொகுசங்கரப்பிள்ளை செல்லமுத்து 1941 இல் சொக்கநாதன் தம்பையா என்பவரின் மகள் ஞானேசுவரியை (இறப்பு: மார்ச் 2002) திருமணம் புரிந்தார்.[2] இவர்களுக்கு ராஜன், உமேஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். செல்லமுத்து ஆகத்து 1993 இல் தனது 77வது அகவையில் காலமானார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Past Mayors of Colombo". கொழும்பு மாநகர சபை. பார்க்கப்பட்ட நாள் 22-07-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 187.
- ↑ "Ceylon Theatres marks 75 years". Archived from the original on 2018-07-16. பார்க்கப்பட்ட நாள் 2018-07-22.
- ↑ 4.0 4.1 "கொழும்பு நிருபர் கடிதம்". ஈழகேசரி: pp. 5, 7. 21 சனவரி 1951. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_1951.01.21. பார்த்த நாள்: 22-07-2018.
- ↑ Gift out of a challenge accepted with fortitude பரணிடப்பட்டது 2013-02-21 at Archive.today
- ↑ "Chariot festival reminds man to control his passions". Archived from the original on 2011-09-03. பார்க்கப்பட்ட நாள் 2018-07-22.